பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

இஸ்லாத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் (New Year) பற்றி அறிந்து கொள்ளுவேம்


இஸ்லாத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் (New Year) பற்றி அறிந்து கொள்ளுவேம் 💞
இன்னும் சில மணி நேரத்தில் 2023 ம் ஆண்டு முடிந்து புதிய ஆண்டு 2024 வர போகிறது! அல்லாஹ் நாடினால்....!
• புது வருடப்பிறப்பு என்று உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த நாளை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்!
• மாற்று மதத்தினருக்கு நாங்களும் ஒன்றும் குறைந்தவர்கள் அல்ல என்று அவர்களை விட ஒரு படி மேல் சென்று முஸ்லீம்கள் சிலர் அந்த நாளை இன்னும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்! (அல்லாஹ் பாதுகாத்தவர்களை தவிர)
• ஆனால் இஸ்லாத்தில் இது போன்ற கொண்டாட்டங்கள் எதுவும் கிடையாது இவை அனைத்துமே மாற்று மதத்தினரின் கொண்டாட்டங்கள் ஆகும் இதை ஒரு முஸ்லீம் கொண்டாடுவது அல்லது ஆதரிப்பது தெளிவான குஃப்ர் (இறை நிராகரிப்பு) ஆகும்!
• இந்த இடத்தில் நாம் ஒன்று சிந்திக்க வேண்டும்! எந்த ஒரு மாற்று மதத்தினறும் பெருநாளை கொண்டாடுவது கிடையாது எந்த ஒரு மாற்று மதத்தினரும் ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளை கொண்டாடுவது கிடையாது! ஆனால் முஸ்லீம் சமூகம் மட்டுமே மாற்று மதத்தினரின் பண்டிகைகளை விழாக்கள் போன்று பிறந்தநாள் இறந்த நாள் புது வருடம் ஸீமந்தம் என ஒன்றையும் விட்டு வைக்காமல் அதை விழா போன்று கொண்டாடி வருகின்றார்கள்! அல்லாஹ் பாதுகாக்கணும் நமது சமூகத்தை....!
• அல்லாஹ் பாதுகாக்கணும் இஸ்லாத்தில் இது ஹராம் என்று தெளிவாக தெரிந்தும் பலர் ஒரு நாள் தான் என்று ஈமான் வெட்கம் மானம் கற்பு என அனைத்தையும் இழக்கிறார்கள்!
• ஆண்கள் வாலிபர்கள் அந்த நாளில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, வாகனப்பந்தயம் வைப்பது இரவு முழுவதும் நண்பர்கள் உடன் சுற்றுவது என ஒரு பக்கம் செய்ய இஸ்லாமிய பெண்களும் அந்த நாளை கொண்டாடும் வகையில் அந்த நாளில் புது ஆடை, வீட்டில் விஷேச உணவு, வீட்டை சுத்தம் செய்து அழகாரம் செய்வது என அனைத்தும் அந்த நாளை மையப்படுத்தி செய்கிறார்கள் நவுதுபில்லாஹ்!
• இந்த ஒரு இரவில் எவ்வளவு ஹராமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்!! எவ்வளவு மார்க்கம் தடுத்தவைகளை செய்கிறார்கள்! அல்லாஹ் இந்த நிலையிலேயே மரணத்தை நமக்கு கொடுத்து விட்டால் நமது நிலை?
• மரணத்திற்கு வயது நேரம் காலம் என்று எதுவும் கிடையாது! நேரம் வந்து விட்டால் ஒரு நொடி முந்தவும் மாட்டாது பிந்தவும் மாட்டாது! யாராக இருந்தாலும் சரியே!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒவ்வோர் அடியாரும், தாம் இறக்கும் போதிருந்த மன நிலையிலேயே எழுப்பப்படுவார்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 5518)
• நாம் ஒரு நாள் தானே அல்லது ஒரு இரவு தானே என்று அல்லாஹ்வும் அவனது ரசூலும் எதை எல்லாம் தடுத்தார்களோ அதை எல்லாம் செய்து கொண்டு இருக்கும் நிலையில் மரணிக்க நாம் ஆசை படுவோமா?
• இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மதினா வாசிகள் இது போன்று வருடத்தில் இரண்டு நாட்களை தேர்வு செய்து கொண்டாடி வந்தனர்!
• நபி (ஸல்) அவர்கள் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்யும் பொழுது இதை தடை செய்து இதை விட சிறந்த இரண்டு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு வழங்கி உள்ளான் என்று மக்களுக்கு கூறி 1) நோன்புப் பெருநாள் மற்றும் 2) ஹஜ்ஜுப் பெருநாளையும் குறிப்பிட்டார்கள்!
(நூல் : சுனன் அபூதாவுத் : 1134)
• இஸ்லாத்தில் கொண்டாட்டம் என்பது நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ் பெரு நாளை மட்டுமே! இதை தவிர்த்து வேறு எந்த கொண்டாட்டமும் இஸ்லாத்தில் கிடையாது!
• இன்னும் கூற வேண்டும் என்றால் இஸ்லாத்தின் வருட பிறப்பை அல்லது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை கூட கொண்டாட இஸ்லாத்தில் யாருக்கும் அனுமதி கிடையாது இவ்வாறு இருக்க மாற்று மதத்தினர் விழாக்களை மட்டும் எவ்வாறு நாம் கொண்டாட முடியும்!?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர்!
(நூல் : சுனன் அபூதாவுத் : 4031)
• சில நேரத்தில் இதை விட்டு நாம் விலகினாலும் நம்முடைய பிற மத நண்பர்கள் நம்மை கொண்டாட அழைப்பது அல்லது வாழ்த்துகள் கூறுவதை பார்க்கிறோம் இதற்கு முக்கியம் காரணம் நாம் அவர்களுக்கு நம்முடைய இஸ்லாத்தை பற்றி எடுத்து கூறாதது தான்!
• நமது பிற மத நண்பர் இன்று அசைவம் உண்ண மாட்டார் என்று தெரிந்து சைவ உணவு தருகிறோம்! காரணம் அவர் அவருடைய மார்க்கத்தை பற்றி நமக்கு கூறி உள்ளார் மேலும் அதில் அவர் உறுதியாக உள்ளார் ஆனால் நம்மில் எத்தனை பேர் நம்முடைய நண்பர்களுக்கும் எங்கள் இஸ்லாத்தில் இது ஹலால் இது ஹராம் என்று எடுத்து கூறி உள்ளோம்? நாம் கூறி இருந்தால் நிச்சயமாக அவர்கள் அதற்கு எற்றால் போல் நம்மிடம் நடந்து கொள்வார்கள்!
அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப்படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான்!
(சூரத்துல் : அத் தவ்பா : 62)
💟 புது வருடம் உருவான வரலாறு :
• நாம் தற்பொழுது பயன் படுத்தி கொண்டு இருக்கும் காலண்டர் முழுவதும் ரோமர்கள் உருவாக்கிய காலண்டர் ஆகும்!
• ரோமர்களின் மக்களின் நம்பிக்கை, மதம், பாரம்பரியம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டே இந்த கலண்டர் உருவாக்கினார்கள்!
• ஆனால் ஆரம்ப காலத்தில் வருடத்தின் தொடக்கம் மார்ச் 1, மார்ச் 25, செப்டம்பர் 1, செப்டம்பர் 25 என பலவகையாக இருந்தது!
• ஜெர்மனியைச் சேர்ந்த ஜெசூட் பாதிரியாரான வானியல் ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபர் கிளாவியஸ் இவர் தான் ஜனவரி 1 யை ஆண்டின் தொடக்கமாக அறிமுகம் படுத்தினார்!
• 1582 ம் ஆண்டில் கத்தோலிக்கின் மதகுருவாக இருந்த போப் 13-வது கிரிகோரியால் என்பவர் இந்த கலெண்டர்யை சற்று மாற்றி நாம் இப்போது வைத்து உள்ள கலெண்டர் ஆக மாற்றி அறிமுகப்படுத்தினார்! இதனால் இந்த காலண்டருக்கு இவரின் பெயரான கிரிகோரியன் என்று பெயர் வைக்கப்பட்டது!
• ஆங்கில காலண்டர் பொறுத்த வரை முழுவதும் மாற்று மத கடவுள் கொள்கைகளை அடிப்படையாக உருவானது ஆகும்! இதை ஒரு முஸ்லீம் ஆதரிப்பது பாவமான செயல் ஆகும்!
• இதை கொண்டாடுவது அல்லது மகிழ்ச்சியை பிறருக்கு தெரிவிப்பது குப்ர் (இறை நிரகாரிப்பு) ஆகும்!
• உலக வாழ்கையில் மூழ்கி மறுமை வாழ்கையை மறந்து வாழ கூடியவர்கள் தான் இந்த புது வருடத்தை கொண்டாடுகிறார்கள்! இவர்களுக்கு அல்லாஹ் இந்த உலகிலேயே இவர்களுக்கு தேவை அனைத்தும் கிடைத்து விடும்! ஆனால் மறுமை நாளில் இவர்களுக்கு கைசேதம் தான்!
எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்! பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்! அதில் அவர் பழிக்கப் பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார்!
(சூரத்துல் : பனீ இஸ்ராயீல் : 18)
• இது மட்டும் அல்லாமல் இன்னும் சில ஊர்களில் இந்த நாளில் அதிகமான மூட நம்பிக்கைகள் கூறுவார்கள் : அன்றைய நாளில் கடன் வாங்குவதோ, கொடுப்பதோ கிடையாது, ஏனேனில் அன்றைய நாளில் கடன் வாங்கினாலோ, கொடுத்தாலோ அது தொடர்ந்து கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கை, அந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடினால் வருடம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்ற நம்பிக்கை! இது தெளிவான மூடநம்பிக்கை மற்றும் சகுனம் பார்ப்பதாகும் இஸ்லாத்தில் சகுனம் பார்ப்பது ஷிர்க் ஆகும்!
💟 நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் மறுமை நாளில் பதில் கூற வேண்டும் :
• நாம் செய்யும் ஒவ்வொரு நன்மையான செயல் அல்லது பாவமான செயலை யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக செய்து விடலாம் ஆனால் நம்முடைய ஒவ்வொரு செயலையும் குறித்து வைத்து கொள்ள அல்லாஹ் நம்முடன் இரண்டு மலக்கு மார்களை நியமித்து உள்ளான்!
• நம்முடைய ஒவ்வொரு செயலையும் மலக்கு மார்கள் ஒரு ஏட்டில் பதிவு செய்து வைத்து இருப்பார்கள் எதையும் குறைந்ததோ அல்லது அதிகமாகவோ எழுதாமல் துல்லியமாக எழுதி வைத்து இருப்பார்கள்!
• இதோடு மட்டும் அல்லாமல் அந்த ஏடுகளை அல்லாஹ் நம்மையே வாசிக்க சொல்லுவான் அப்போது நமது நிலை என்ன ஆகும்? சிந்திக்க மாட்டோமா?
• நாம் தெரியாமல் செய்வது வேறு ஆனால் தெரிந்தே வேண்டும் என்றே நேரம் குறித்து திட்டமிட்டு செய்வது என்பது பாவமான ஒன்றாகும்! மறுமை நாளில் அல்லாஹ் நம்முடைய ஏட்டை வாசிக்க சொன்னால் அதை அல்லாஹ்வின் முன்பு தனியாக நம்மால் வாசிக்க முடியுமா?
💟 புத்தாண்டு வாழ்த்துகள் கூறுவது கூடாது :
ஷேக் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
• மாற்று மத பண்டிகையின் போது பரிசுகளை பரிமாறிக்கொள்வது அல்லது இனிப்புகளை பகிர்ந்து கொள்ளுவது அல்லது பிற உணவுகள், அல்லது அவர்கள் விழாவிற்கு உதவுவதற்கு என்று நேரம் ஒதுக்குதல் ! இவை எல்லாம் குப்ர் (இறை நிரகாரிப்பு) ஆகும்!
• காபிர்களின் மத ரீதியான
கொண்டாட்டங்களை முன்னிட்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்துப்படி ஹராமாகும்!
(அஷ் ஷேக் உஸைமீன் (ரஹ்) : ஃபத்வா : 45/3)
• இன்னும் சிலர் ஒரு வார்த்தை கூறுவதால் என்ன ஆக போகிறது என்று ஒருவருக்கு ஒருவர் Happy New Year என்று கூறி கொள்ளுகிறார்கள் ஆனால் நாம் பெரியதாக பொறுப்படுத்தாமல் கூறும் இவ்வாறான வார்த்தைகளே நம்மை நரகில் சேர்க்க போதுமானது ஆகும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 6478)
💟 மாற்று மதத்தினரின் வழிமுறைகளை பின் பற்றுவது :
• பலர் இந்நாளில் புது வருடம் பிறந்து விட்டது (Happy New Year) என்று வாழ்த்துக்கள் தெரிவிப்பதும் மேலும் தெரிந்த நபர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதையும் பரவலாக பார்க்க முடிகின்றது! ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் இந்த அறியாமைகளில், வழிகேடுகளில் வீழ்ந்துவிடாமல் எச்சரிக்கையாகவே இருப்பான்! இன்னும் ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்பட மாட்டான்!
• அல்லாஹ்வுக்காக நாம் நிறைவேற்றும் பல வணக்கங்களில், நடை முறை வாழ்க்கை தொடர்பான விடயங்களில் யூதர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் நமக்கு பல இடங்களில் கூறி உள்ளார்கள்!
• உதாரணமாக : சூரியன் உதிக்கும், மறையும் நேரங்களில் தொழுகைகள தொழுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். காரணம் அந்நேரத்தில் இறை நிராகரிப்பாளர்கள் தங்கள் கடவுள்களை வணங்கும் நேரம் என்பதற்காக!
• நபி (ஸல்) அவர்கள் பல இடங்களில் யூதர்கள்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் மாற்றமே செய்ய சொல்லி உள்ளார்கள் ஆனால் நாம் இன்று நபி (ஸல்) அவர்களுக்கு மாற்றம் செய்து யூதர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் ஒப்பாக வாழ்கிறோம் நவுதுபில்லாஹ்!
அபூசயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் கூறினார்கள் :
உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கள் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள்! எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்!நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்? என்று நாங்கள் கேட்டோம்! அதற்கு நபி (ஸல்) அவர்கள், வேறெவரை? என்று பதிலளித்தார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 3456)
• இந்த யூதர்கள் இறைத்தூதர்களை கொலை செய்து உள்ளார்கள் அல்லாஹ் இறக்கிய வேதங்களை தங்களுக்கு ஏற்றால் போல் மாற்றி கொண்டனர்! அல்லாஹ் நேரடியாக பல அத்தாச்சிகளை இவர்களுக்கு இறக்கி அருளியும்! இவர்கள் அதை எல்லாம் நிராகரித்து! அட்டூழியம் செய்து கொண்டு இருந்தார்கள்!
• கிருஸ்துவர்கள் அல்லாஹ்விற்கு பிள்ளை உள்ளது (அல்லாஹ் பாதுகாப்பானாக) என்று கூறுகிறார்கள் இவர்களுக்கு எல்லாம் அல்லாஹ் மறுமை நாளில் கடுமையாக பிடிப்பான்!
• இவர்கள் இவ்வளவு அல்லாஹ்விற்கு மாறு செய்து அல்லாஹ்வின் தூய தன்மையை அசுத்தமாக கூறுகிறார்கள் ஆனால் நாம் பெயர் அளவில் மட்டும் முஸ்லீம் என்று கூறி கொண்டு அவர்களுக்கு விழாவில் ஆதரவு கொடுக்கின்றோம்!
• இவ்வாறு செய்வது அவர்களின் அனைத்து விதமான கொள்கையும் நாமும் ஏற்று அவர்களுக்கு துணை போவது போன்று ஆகும்! இதை நாம் சிந்திக்க வேண்டாமா?
💟 நம்மையே கேள்வி கேட்டு கொள்வோம் :
• புது வருடம் பிறக்கிறது என்று கொண்டாடுகிறோமே நாம் இந்த ஒரு வருடத்தில் எவ்வளவு அமல் செய்து உள்ளோம் ⁉
• எத்தனை முறை அல் குர்ஆனை ஓதி முடித்தோம் - எத்தனை முறை அர்த்தம் விளங்கி ஓதி உள்ளோம்!?
• எவ்வளவு மக்களுக்கு நாம் இஸ்லாம் பற்றி எடுத்து கூறி உள்ளோம்?
• இன்னும் குறிப்பாக கூற வேண்டும் என்றால் அல்லாஹ் நமக்கு கொடுத்து ஆயுளில் ஒரு வருடம் முடிந்தது விட்டது இன்னும் எவ்வளவு நாட்கள் நாம் இந்த துன்யாவில் இருக்க போகிறோம் என்று நமக்கு தெரியாது! இருக்கும் நாட்களில் ஆவது அல்லாஹ்வை நாம் நெருக்க முயற்சி செய்ய வேண்டும் தூரம் விலக அல்ல!
💟 நிறைய பேர் புது வருடம் கொண்டாடுகிறார்கள் நாம் கொண்டாட கூடாதா?
• பலரின் உள்ளத்தில் ஷைத்தான் இவ்வாறு எண்ணங்களை நமக்கு ஏற்படுத்துவான் நீ மட்டுமா இதை செய்கிறாய் எவ்வளவோ மக்கள் இதை செய்கிறார்கள் என்று!
• அதிகமானனோர்கள் தொழுகிறார்கள் நானும் தொழுவேன்! அதிகமானோர்கள் அல்குர்ஆன் ஒதுகிறார்கள்! நானும் ஒதுவேன் என்ற எண்ணம் ஏன் நமக்கு வர வில்லை?
• எல்லோரும் செய்கிறார்கள் என்றால் எல்லோருமே உங்களுடன் கபூருக்கு வர மாட்டார்கள்! நம்மை மறுமை நாளில் அல்லாஹ் விசாரணை செய்யும் பொழுது யாரும் நம்முடன் வர மாட்டார்கள் நமக்கு பதிலாக அவர்கள் பதில் கூற? நம்முடைய செயல்களுக்கு நாம் தான் பதில் அளிக்க வேண்டும்!
பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள்! (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் - இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள்!
(சூரத்துல் : அல் அன்ஆம் : 116)
💟 மார்க்கத்திற்கு முரணான காரியத்தை நடந்தால் :
• இஸ்லாம் தடுத்த ஒன்றிக்கு நாம் எந்த விதத்திலும் உதவி செய்ய கூடாது! மேலும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்தால் நம்மால் இயன்ற அளவுக்கு அவர்களுக்கு எடுத்து சொல்லி தடுக்க வேண்டும்! அதற்கு நம்மால் முடியாவிட்டால் நாம் இயன்ற அளவுக்கு சொல்லித் தடுக்க வேண்டும்! அதுவும் முடியாவிட்டால், நம்முடைய உள்ளத்தால் அந்த செயலை வெறுத்து ஒதுக்க வேண்டும்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 78)
வீணான காரியம் நடக்கும் இடத்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக ஒதுங்கிச் சென்றுவிடுவார்கள்!
(சூரத்துல் : அல் ஃபுர்காஃன் : 72)
@அல்லாஹ் போதுமானவன்


 

No comments:

Post a Comment