இஸ்லாத்தில் பற்றி சுருக்கமும் & நோன்பு கடமையாக்கப்பட்ட வரலாறு பற்றி அறிந்து கொள்ளுவோம் 
• நோன்பு சூரியன் உதயம் ஆவதற்கு முன்பு இருந்து, சூரியன் மறையும் வரை உண்ணவும் பருகுவது உடலுறவு கொள்ளுவது ஆகிய அனைத்து இன்பங்களையும் தவிர்த்து - இச்சைகளை தடுத்து கொள்ளுவது ஆகும்!
உதாரணமாக : தனக்கு முன்னால் தனது ஆசைகளை, பசியை, தாகத்தை போக்கக்கூடிய அனைத்து வசதிகளும் இருந்தும் அவன் அல்லாஹ்வின் பொருத்தம் நாடியவனாக நோன்பு நேற்று அவற்றை விட்டும் நீங்கி இருக்கின்றான்! இது சிறந்த ஒரு இக்லாஸ் ஆன அமல் ஆகும்!
• நோன்பைத் தவிர்த்து மற்ற அனைத்து அமல்கள் செய்தாலும் ஏதேனும் ஒரு விதத்தில் வெளிப்படையாக பிறருக்கு தெரியும்! ஆனால்,
• நோன்பு ஓர் ரகசியமான அமலாகும்! நோன்பை நிறைவேற்றுகின்ற மனிதனையும் அல்லாஹ்வையும் தவிர்த்து வேறு யாருக்கும் இதை பற்றி அறிந்து கொள்ள முடியாது!
• அல்லாஹ் நோன்பை பற்றி கூறும் போது : நோன்பு வைப்பத்தன் மூலம் நீங்கள் தக்வா (இறையச்சம்) உடையவர்களாக ஆகலாம்! என்று இறையச்சம் என்பது அல்லாஹ் கூறியவற்றை செய்வது! தடுத்தவற்றை விட்டு விலகி நிற்பதுமாகும்!
• நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதினாவிற்கு ஹிஜ்ரி 2 ஷாஅபான் மாதம் முதல் திங்ககிழமை தான் அல்குர்ஆன் : 2 : 183 - என்ற வசனத்தை அருளி ரமலான் நோன்பை அல்லாஹ் முஸ்லீம்கள் மீது கடமையாக்கினான்! அது வரை முஸ்லீம்கள் அனைவரும் முஹர்ரம் மாத ஆஷுரா நாளும் மற்றும் மாதம் மூன்று நோன்புகள் நோற்று வந்தார்கள்!
(நூல் : தஃப்சீர் இப்னு கஸீர் : 1 / 497 | மின்ஹாஜுல் முஸ்லீம்)
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்!
(சூரத்துல் : அல் பகரா : 183)
• நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு கடமையான பின்பு நோன்பிற்கு என்று ஒரு சட்டம் இருந்தது அதவாது : ஒருவர் நோன்பு திறந்து விட்டால், அவர் இஷா வரை உண்ணலாம் பருகலாம் மனைவியுடன் சேரலாம்! ஆனால் அவர் இஷா தொழுது விட்டாலோ அல்லது உறக்கி விட்டாளோ அவர் இதன் பின்பு அடுத்த நாள் நோன்பு திறந்த பின்பு தான் உண்ணவும் பருகவும் முடியும்! மனைவியுடன் சேர முடியும் இடையில் உண்ணவோ பருகவோ அல்லது மனைவியுடன் சேரவோ கூடாது!
• இந்த சட்டம் கடினமாக இருந்ததால் பல ஸஹாபாக்கள் சிரமம் பட்டார்கள் இன்னும் சிலர் இதை மீறி விட்டார்கள்! இதன் பின்பு அல்லாஹ் அல்குர்ஆனில் வசனத்தை அருளி இந்த சட்டத்தை மாற்றி விட்டான்!
பராஉ (ரலி) அறிவித்தார்கள் :
(ஆரம்ப காலத்தில்) நபித்தோழர்கள் நோன்பு நோற்று, நோன்பை நிறைவு செய்யும் நேரம் வந்து, அதற்கு முன்பே உறங்கி விட்டிருந்தால் அன்றைய இரவிலும் (தொடர்ந்து) பகலிலும் மாலை வரை எதையும் உண்ண மாட்டார்கள்!
(ஒரு முறை) கைஸ் இப்னு ஸிர்மா (ரலி) நோன்பு நோற்றிருந்தார் ; நோன்பு நிறைவு செய்யும் நேரம் வந்ததும் தம் மனைவியிடம் வந்து, 'உன்னிடம் உணவு ஏதும் உள்ளதா?' என்று கேட்டார்; அவரின் மனைவி, 'இல்லை! எனினும் நான் சென்று உமக்காக (உணவைத்) தேடி வருகிறேன்!' என்றார்!
கைஸ் இப்னு ஸிர்மா (ரலி) அன்றைய தினம் கூலி வேலை செய்துவிட்டு வந்ததால் அவருக்கு உறக்கம் மேலிட்டுவிட்டது. அவரின் மனைவி வந்து அவரைக் கண்டபோது, 'உமக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது' என்றார் நண்பகலானதும் கைஸ் (ரலி) மூர்ச்சையுற்றார்!
இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டபோது, 'நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற வசனமும் 'இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் என்ற வசனமும் இறங்கின! இதனால் நபித்தோழர்கள் அதிக மகிழ்ச்சியடைந்தார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1915)
• நோன்பு திறந்த பின்பு இருந்து மறுநாள் நோன்பு வைக்கும் வரை இதற்கு இடையே நமக்கு உண்ணவும் பருகவும் கணவன் மனைவி சேரவும் அனுமதி உண்டு!
• கீழே குறிப்பிடப்பட்டு உள்ள நபர்களை தவிர்த்து மற்ற அனைத்து முஸ்லீம்களும் ரமலானில் கட்டாயம் நோன்பு வைக்க வேண்டும்!
1) முஸ்லீம் அல்லாதவர்!
2) பருவமடையாத சிறுவர், சிறுமி!
3) புத்தி சுவாதினம் இல்லாதவர்!
4) நிரந்தர நோயாளி!
5) தள்ளாத வயதை அடைந்த முதியவர்கள்!
• ஆகியோரின் மீது நோன்பு கடமை கிடையாது! இவர்களை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் நோன்பு கட்டாயம் நோற்க வேண்டும்!
• நோன்பை மறுக்க கூடியவன் அல்லது கட்டாயம் இல்லை விருப்பம் உள்ளவர்கள் வைக்கலாம் என்று அலட்சியம் செய்ய கூடியவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவார்கள் இவர்கள் தவ்பா செய்து மீண்டும் நோன்பை அவன் ஏற்க வேண்டும்!
(நூல் : மஜாலிஸ் ஷஹ்ரு ரமலான் : 21)
• நோன்பை அலட்சியமாக விட கூடியவர்களே சற்று இந்த ஹதீஸை சிந்தியூங்கள்!!!
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நான் ஒரு மலையின் மீது இருந்தேன் அப்போது. கடுமையான சப்தங்களைச் செவியுற்றேன் 'இந்தச் சப்தங்கள் என்ன?' என்று கேட்டேன். 'இந்தச் சப்தங்கள் நரகவாசிகளின் அலறல்கள் என்று கூறினார்கள்! பிறகு நான் வேறொர் இடத்தில் கொண்டு செல்லப்பட்டேன் அங்கு ஒரு கூட்டத்தைக் கண்டேன் அவர்கள் தங்களின் பின்னங்கால் தொடைகளின் தசையில் தொங்கியவர்களாக, அவர்களுடைய வாய்களின் ஓரங்கள் கிழிக்கப்பட்டு இரத்தம் சொட்டுகிறவர்களாக இருந்தார்கள். 'யார் இவர்கள்?' என்று கேட்டேன் 'இவர்கள் தாம் தங்கள் நோன்பை அதற்குரிய நேரம் வருவதற்கு மூன்பே துறந்து விட்டவர்கள்' என்றார்கள்!
(நூல் : அஸ் ஸஹீஹா : 3951)
• இங்கு நாம் சிந்திக்க வேண்டியது. நோன்பு வைத்திருந்தும் அதைச் சரியான நேரத்தில் துறக்காமல், மூன்கூட்டியே துறந்தவர்களுக்கே இந்தத தண்டனை என்றால், தக்க காரணம் இல்லாமல் நோன்பே தோற்காமல் இருப்பவர்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை இருக்கும் மறுமை நாளில் ? (அல்லாஹ் பாதுகாப்பானாக)
@ அல்லாஹ் போதுமானவன் 

No comments:
Post a Comment