பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

அல்லாஹ்வின் அல் காஹிர் - القاهر | அல் கஹ்ஹார் - القهار என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம்


அல்லாஹ்வின் அல் காஹிர் - القاهر | அல் கஹ்ஹார் - القهار என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம் 💞
~ அல் அஸ்மா உல் ஹுஸ்னா : 51
• சென்ற பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அல் முஜீப் பற்றி பார்த்தோம்! அதன் தொடராக இந்த பதிவில் அல்லாஹ்வின் மற்றொரு அழகிய பெயர்களான அல் காஹிர் மற்றும் அல் கஹ்ஹார் பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
• அல் கஹ்ஹார் என்றால் அதிகமாக அடக்கி ஆள்பவன் என்பது பொருள்! இந்த பெயர் அல்குர்ஆனில் 6 இடங்களில் இடம்பெற்றுள்ளது! அல் காஹிர் என்றால் அடக்கி ஆள்பவன் என்பது பொருள்! இந்த பெயர் அல்குர்ஆனில் 2 இடங்களில் இடம்பெற்றுள்ளது! இந்த 2 பெயர்களும் கஹ்ர் என்ற சொல்லில் இருந்து வந்ததாகும்!
அவனே தன் அடியார்களை அடக்கி ஆள்கிறான். அன்றி, அவன்தான் ஞானமிக்கவனாகவும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்.
(சூரத்துல் : அல் அன்ஆம் : 18)
• அல் கஹ்ஹார் என்றால் படைப்புகள் அனைத்தின் மீதும் ஆதிக்கம் பெற்றவன் என்பது பொருள். படைப்புகள் அனைத்தும் அவனுக்கே கட்டுப்பட்டவையாக இருக்கின்றன. அவன் அனுமதியின்றி எதுவும் நிகழ்வதில்லை!
• அவன் நாடியதே நடக்கும். படைப்புகள் அனைத்தும் அவன் பக்கம் தேவையுடையவனாக இருக்கின்றன. அவர்கள் அவன் அனுமதியின்றித் தங்களுக்குக்கூட பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ முடியாது!
• எல்லா படைப்பினங்களும்; அல்லாஹ்வுக்கு அடிபணிய வேண்டியவை என்பதை அல் காஹிர், அல் கஹ்ஹார் என்ற பெயர் நமக்கு உணர்த்துகின்றன!
• அல் கஹ்ஹார் என்ற பெயர் பல வசனங்களில் அல்லாஹ், அல் - வாஹிது என்ற பெயர்களோடு சேர்த்துப் பயன்படுத்தியுள்ளான்! இது அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதற்கானச் சான்றுகளில் ஒன்றாகத் திகழ்கின்றது!
சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆள்கின்ற ஒருவனான அல்லாஹ்வா?
(சூரத்துல் : யூஸுஃப் : 39)
• மேலே உள்ள வசனத்தில் அல் வாஹித், அல்கஹ்ஹார் 2 பெயரையும் சேர்த்து அல்லாஹ் கூறி உள்ளான்!
• கஹ்ஹாராக இருப்பவன் வாஹிதாக இருக்க வேண்டும்! வாஹிதாக இருப்பவன் தான் கஹ்ஹாராக இருக்கலாம் என்பது தான், இதனுடைய தத்துவமாக இருக்கிறது என்பதை இமாம் இப்னுல் கைய்யும் அல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்!
• துணை உள்ளவர்கள் அல்லது தங்களுக்கு நிகரானவர்களை கொண்டு இருப்பவர்கள் கஹ்ஹாராக இருக்க முடியாது!
• அல்லாஹ் ஒருவன் மட்டும் தான் இணை துணை இல்லாதவன், அவன் ஒருவன்தான் தனித்தவன். எனவே அவன் தான் அடக்கி ஆள்வதற்கு தகுதியானவன், என்பதை இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள முடிகிறது!
• இன்றும் சிலர் தனக்கு கீழ் உள்ளவர்களை அல்லது தனது பொறுப்பில் உள்ளவர்களை அடக்கி ஆழ எண்ணுகிறார்கள் இவ்வாறு செய்வது அல்லாஹ்விடம் போட்டி போடுவது போல் ஆகும் நவுதுபில்லாஹ் இவ்வாறான தீய குணங்களை விட்டும் நாம் தவிர்த்து இருக்க வேண்டும்!
• நபி (ஸல்) அவர்கள் கூட மனிதர்களின் அடக்கு முறைகளை விட்டும் அதிக முறை பாதுகாப்பு தேடியுள்ளார்கள்!
இறைவா! (வருங்காலத்தைப் பற்றியக்) கவலையிலிருந்தும், (நடந்து முடிந்து விட்டவை பற்றிய) துக்கத்திலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறைகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 6363)
• அல்லாஹ்வே அடக்கியாள்பவன் என்ற பெயருக்கும் இடையேயுள்ள தொடர்பு தெளிவாகிறது! அல்லாஹ்வே அடக்கியாள்பவன் என்பதை ஏற்றுக்கொண்டவ அவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்!
• எனவே அல்லாஹ் அல் கஹ்ஹார் என்று சொன்னால் அடியார்கள் அனைவரும் அவனுக்கு கட்டுப்பட வேண்டும், அவனுக்கு வழிபடவேண்டும் என்பது இந்த பெயர் வேண்டி நிற்கும் முக்கியமான அம்சமாக இருக்கிறது!
• அல்லாஹு தஆலா அல்காஹிர், அல்கஹ்ஹார் என்பதை புரிந்து கொள்ளக்கூடிய நாம், அவனுக்கு கட்டுப்பட்டு, அவனுக்கு வழிபட்டு , அவனுக்கு பணிந்து நடக்க முயற்சி செய்ய வேண்டும்!
• இதன் மூலமே ஷிர்க்கின் தீங்கு அறியப்படுகிறது, மண்ணிலிருந்து படைக்கப்பட்டவன் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனுக்குச் சமமாவான என்ன? இணைவைப்பாளர்கள் கூறும் பொய்களைவிட்டும் அவன் பரிசுத்தமானவன்!
• இன்ஷா அல்லாஹ் அஸ்மா உல் ஹுஸ்னா தொடரின் அடுத்த பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயர்களான அல் வாரிஸ் பற்றி பார்ப்போம்!
@அல்லாஹ் போதுமானவன் 💞
No photo description available.
All reactions:
21


 

No comments:

Post a Comment