💞 அரஃபா நோன்பை பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞
• சென்ற பதிவில் அரஃபா நாள் என்றால் என்ன? இந்த நாளின் சிறப்புகள் என்ன? இதன் வரலாறு என்ன என்பதை பற்றி பார்த்தோம் அதன் தொடராக இந்த பதிவில் அரஃபா நோன்பை பற்றி இன்ஷாஅல்லாஹ் பார்ப்போம்!
• அரஃபா நோன்பு என்பது ஒவ்வொரு வருடமும் துல் ஹஜ் உடைய 9 வது நாளில் வரும்! ஹஜ் செய்ய வசதி இல்லாதவர்கள் அந்த நாளில் அரஃபா நோன்பு வைப்பது சுன்னாஹ் ஆகும்! ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முதல் தினம் இந்த அரஃபா தினமாகும்!
💟 அரஃபா நோன்பு சுன்னத் அல்லது நபிலா :
• அரஃபா நோன்பு வைப்பது சுன்னாஹ் ஆகும்! நபி (ஸல்) அவர்களும் அரஃபா நோன்பை வைத்து உள்ளார்கள் ஸஹாபாக்களையும் அரஃபா நோன்பு வைக்க ஆர்வப்படுத்தி உள்ளார்கள்!
(நூல் : அஹ்மத் : 21829 | அபுதாவூத் : 2437)
💟 அரஃபா நோன்பின் சட்டம் :
• அரஃபா நோன்பிற்கு என்று குறிப்பிட்ட வழிமுறை கிடையாது. பொதுவாக நாம் மற்ற நோன்புகளில் நாம் பேன வேண்டிய வழிமுறைகளையே இந்த நோன்பின் போதும் பேனவேண்டும்.
💟 அரஃபா நோன்பு எப்போது வைக்க வேண்டும் :
1) இன்ஷாஅல்லாஹ் தமிழ்நாட்டில் வரும் வெள்ளிக்கிழமை 06/06/2025 அன்று அரஃபா நோன்பாகும்!
• நாம் வியாழக்கிழமை 05/06/2025 அன்று இரவு ஸஹர் செய்து வெள்ளிக்கிழமை 06/06/2025 அன்று அரஃபா நோன்பு வைத்து இருக்க வேண்டும்!
2) இன்ஷாஅல்லாஹ் வெளிநாட்டில் வரும் வியாழக்கிழமை 05/06/2025 அன்று அரஃபா நோன்பாகும்!
• நாம் புதன்கிழமை 04/06/2025 அன்று இரவு ஸஹர் செய்து வியாழக்கிழமை 05/06/2025 அன்று அரஃபா நோன்பு வைத்து இருக்க வேண்டும்!
💟 அரஃபா நோன்பின் சிறப்புகள் :
1) இரண்டு வருட பாவமன்னிப்பு கிடைக்கும் :
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அரஃபா நாள் நோன்பு கடந்துபோன ஓராண்டு மற்றும் எதிர்வரும் ஓராண்டு நிகழும் சிறு பாவங்களுக்கு பரிகாரமாக அமையும்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2151)
2) நரக விடுதலை உறுதி செய்யும் நாள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2623)
• ஹதீஸ் விளக்கம் : இந்த நாளில் நாம் செய்ய கூடிய நல்ல அமல்கள் மூலம் அல்லாஹ் நம்முடைய நரகில் விடுதலையை உறுதி படுத்துகிறேன்!
3) அல்லாஹ் புகழ்ந்து பேசுகிறான் :
அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நிச்சயமாக அல்லாஹ், அரஃபா தினத்தன்று முதல் வானத்திற்கு வருகை தந்து, வானவர்களிடம் அரஃபா தினத்தன்று ஒன்று கூடியிருக்கின்றவர்களைப் பற்றி பெருமை பாராட்டி பேசுகின்றான்!
"எனது மலக்குமார்களே! எனது அடியார்களை நோக்கி பாருங்கள்! அவர்களில் அந்தஸ்த்து உள்ளவர்கள், அந்தஸ்து இல்லாதவர்கள் என அனைவரும் பரட்டை தலையுடையவர்களாகவும், புழுதி படிந்தவர்களாகவும் என்னிடம் வந்துள்ளார்கள்!
(நூல் : முஸ்னத் அஹ்மத் : 7089)
💟 அரஃபா நாளில் கூறவேண்டிய திக்ர் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிரார்த்தனைகளிலேயே மிகவும் சிறந்தது அரஃபா நாளில் செய்யும் பிரார்த்தனை ஆகும்.
நானும், எனக்கு முன் இருந்த நபிமார்களும் கூறியவற்றில் சிறந்தது “லாஇலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்” என்ற திக்ராகும்.
(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்)
(நூல் : சுனன் திர்மிதி : 3585)
💟 துஆ ஏற்ற கொள்ளப்படும் சிறந்த நாள் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அரஃபா நாளின் போது கேட்கப்படும் துஆவே சிறந்த துஆவாகும்! துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின் துஆவாகும்!
(நூல் : சுனன் திர்மிதி : 3585)
(தரம் : ஹசன் : அல்பானி (ரஹ்) : ஸஹீஹு அத் தர்கீப் வத் தர்ஹீப் : 1536)
• நாம் இந்த அரஃபா நாளில் அதிகம் அதிகம் நமக்கும் நம்முடைய குடுபத்திற்கு உறவினர்கள் நண்பர்கள் மற்றும் முழு முஸ்லீம் சமுதாயத்திற்கு இம்மை மறுமைக்கும் அதிகம் துஆ செய்ய வேண்டும்!
💟 நோன்பின் போது வீணான செயல்களை தவிர்த்து கொள்வோம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1903)
💟 வெள்ளிக்கிழமை மட்டும் ஒரு நோன்பு வைக்கலாமா?
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களில் எவரும் வெள்ளிக்கிழமைக்கு முன் ஒரு நாளைச் சேர்க்காமல் அல்லது அதற்குப் பின் ஒரு நாளைச் சேர்க்காமல் நோன்பு நோற்கவேண்டாம்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1985)
• உபரியானா நோன்பிற்கு மட்டுமே இந்த சட்டம். பர்ளு மற்றும் சுன்னத் ஆன நோன்புகளை நாம் வெள்ளிக்கிழமை வந்தால் ஒரு நோன்பு மட்டும் வைக்கலாம்.
இப்னு ஹாஜர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
• இந்த ஹதீஸ் வெள்ளிக்கிழமை மட்டும் குறிப்பிட்டு நோன்பு நோற்பதை தடை செய்கிறது. உபரியானா நோன்பை வெள்ளிக்கிழமை மட்டும் வைக்க விரும்பக்கூடியவர் வெள்ளிக்கிழமைக்கு ஒரு நாள் முன்பு அல்லது பின்பு ஒரு நாளை சேர்த்தே நோன்பு வைக்க வேண்டும் தனித்து வைக்க கூடாது.
• இது இல்லாமல் வழமையாக வைக்க நோன்பு நோற்க கூடியவர், உதாரணமாக மாதம் மூன்று நோன்பு நோற்க கூடியவர்கள், அரஃபா நோன்பு நோற்க கூடியவர்கள், ஆஷுரா நோன்பு நோற்க கூடியவர்கள், களா நோன்பு நோற்க வெள்ளிக்கிழமை மட்டும் அந்த நோன்பு வந்தால் அவர் வெள்ளிக்கிழமை மட்டும் அந்த நோன்பை வைத்தால் போதுமானது அதற்கு முன்போ அல்லது பின்போ மற்றொரு நோன்பு வைக்க வேண்டியது கிடையாது.
(நூல்: ஃபத் அல் பாரி | ஃபத்வா அல்-லஜ்னா அல் தைமா : 10 : 347)
💟 ஹாஜிகள் கூடும் நாளில் தான் அரஃபா நோன்பு வைக்க வேண்டுமா?
• நம்மில் பலர் அரஃபா நாள் எது என்பதில் அதிகம் சந்தேகத்தில் உள்ளனர்! மக்காவில் ஹாஜிகள் சேரும் நாள் அரஃபா நாளா? அல்லது நமது ஊரில் பிறை அடிப்படையில் துல் ஹஜ் உடைய 9 வது நாள் தான் அரஃபா நாளா என்று!
• நபி (ஸல்) அவர்கள் மதினாவில் 13 வருடங்கள் வாழ்ந்து உள்ளார்கள்! இந்த 13 வருடத்திலும் அரஃபா நாளை சந்தித்து உள்ளார்கள்!
• இந்த 13 வருடங்களில் ஒரே ஒரு முறை கூட மக்காவில் ஹாஜிகள் எப்போது கூடுகிறார்களோ அப்போது தான் எல்லோருக்கும் அரஃபா நாள்! அல்லது ஹாஜிகள் எப்போது கூடுகிறார்களோ அந்த நாளை பார்த்து அரஃபா நோன்பு வையுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை!
• எந்த ஒரு ஹதீஸிலும் நபி (ஸல்) அவர்கள் ஹாஜிகள் கூடும் நாளை பார்த்து நோன்பு வையுங்கள் என்று கூறியதும் கிடையாது!
• பொதுவாக நோன்பு பொறுத்த வரை நமது பகுதியில் பிறை பார்த்து நோன்பு வைப்பது தான் சுன்னாஹ் ஆகும்!
• ஒரு ஸஹாபி அவர்களுக்கு இதை பற்றி சந்தேகம் இருந்த போது ஆயிஷா (ரழி) அவர்கள் உங்கள் பகுதியில் மக்கள் நோன்பு வைத்தால் நீங்களும் வையுங்கள் என்று ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளை பார்க்க வேண்டாம் என்று கூறினார்கள்!
நான் அரஃபா நாளில் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன்! இவருக்குக் கோதுமைக் கஞ்சியைக் கொடுங்கள்! அதில் இனிப்பை அதிகமாக்குங்கள்' என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள்!
(அரஃபா நாளாகிய) இன்று நான் நோன்பு பிடிக்காததன் காரணம் இன்று (மக்காவில்) ஹஜ்ஜுப் பெருநாள் தினமாக இருக்கலாம் என்று நான் அஞ்சுவதே' என்று நான் கூறினேன்!
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ஹஜ்ஜுப் பெருநாள் என்று மக்கள் முடிவு செய்யும் நாளே ஹஜ்ஜுப் பெருநாள். நோன்புப் பெருநாள் என்று மக்கள் முடிவு செய்யும் நாளே நோன்புப் பெருநாள்'! என்று விளக்கமளித்தார்கள்!
(நூல் : பைஹகீ : 7998)
• இது மட்டும் அல்லாமல் நபி (ஸல்) அவர்கள் அரஃபா நோன்பை ஒவ்வொரு வருடமும் வைத்து உள்ளார்கள்! ஆனால் ஹஜ் என்பது ஹிஜ்ரி 10 யில் தான் நடைபெற்றது! அதற்கு முன்பு வரை அரஃபா நாளில் ஹாஜிகள் கூட வில்லை ஹஜ் என்பது இல்லாமல் இருந்தது ஆனாலும் ஹஜ் நடைபெறுவதற்கு முன்பு கூட நபி (ஸல்) அவர்கள் அரஃபா நோன்பு வைத்து உள்ளார்கள்!
• அரஃபாவில் ஹாஜிகள் கூடும் நாளில் மட்டும் தான் அரஃபா நோன்பு வைக்க வேண்டும் என்றால் நபி (ஸல்) அவர்கள் அரஃபா நோன்பு வைத்து இருக்க மாட்டார்கள்!
• ஆனால் நபி (ஸல்) அவர்கள் மதினாவில் இருந்த வரை பிறை பார்த்து அரஃபா நோன்பு துல் ஹஜ் 9 வது நாளில் வைத்து உள்ளார்கள்! நாம் நமது பகுதியில் பார்க்கும் பிறை அடிப்படையில் தான் நோன்பு வைக்க வேண்டும் இதுவே சிறந்தது ஆகும்!
• இன்ஷாஅல்லாஹ் அனைவரும் அரஃபா நோன்பு வைக்க முயற்சி செய்வோம்!
@அல்லாஹ் போதுமானவன் 💞
#DayofArafah #ArafahDay #arafah #hajj2025
No comments:
Post a Comment