இஸ்லாத்தில் இரவுத் தொழுகை பற்றி அறிந்து கொள்ளுவோம் 
• இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் உள்ளன! அவைகள் ;
1) ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை)
2) கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்)
3) தஹஜ்ஜுத் தொழுகை
• இந்த மூன்று தொழுகையும் இரவு தொழுகை ஆகும் பெயர்கள் தான் வெவ்வேறு ஆனால் தொழுகை ஒன்று தான்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2157)
• 5 நேர கடமையான தொழுகைக்கு எப்படி தனி சிறப்பு உள்ளதோ முக்கியத்துவம் உள்ளதோ அதே போன்று இரவு தொழுகைக்கும் தனி சிறப்பு முக்கியத்துவம் உள்ளது!
• நபி (ஸல்) அவர்கள் ரமலான் அல்லாத மற்ற நாட்களிலும் இரவில் கால் வீங்கும் அளவுக்கு நின்று தொழுது உள்ளார்கள்!
முகீரா (ரலி) அறிவித்தார்கள் :
சில சமயம் நபி (ஸல்) அவர்கள் கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள்! இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும் போது நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? என்று கேட்பார்கள்!
(நூல் : புகாரி : 1130)
• இரவு தொழுகை எந்த அளவுக்கு சிறந்தது என்றால் அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் இரவில் எழுந்து தொழுவதை பற்றி கூறி உள்ளான் :
இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக!
(அல் குர்ஆன் : 17 : 79)
இரவில் - சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக!
(அல் குர்ஆன் : 73 : 2)
• அல்லாஹ் பல இடங்களில் இரவு தொழுகை பற்றி நமக்கு கூறி உள்ளான் என்றால் அதன் மதிப்பை நம்மால் அறிந்து கொள்ள முடியும்!
• மேலும் இரவு தொழுகையின் மூலம் நம்மால் அல்லாஹ்வின் பொருத்தம் மற்றும் நெருக்கத்தை அடைந்து கொள்ள முடியும்!
• இரவில் தொழுவதால் நாம் செய்யும் அமல் யாருக்கும் தெரியாது இதனால் நாம் இக்லாஸ் மற்றும் உள்ளத் தூய்மையுடன் அமல் செய்ய முடியும்!
• இரவு தொழுகை வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் ஆகும்! அல்லாஹ்வே அல்குர்ஆனில் பல இடங்களில் கூறி உள்ளான் மேலும் நபி (ஸல்) அவர்களும் இரவில் பேனி தொழுது உள்ளார்கள்!
• இரவு தொழுகைக்கு என்று எந்த தனிப்பட்ட தொழுகை முறையும் கிடையாது நாம் வழமையாக தொழுவது போன்று 2+2 ஆக தொழ வேண்டும்.
• இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் பாங்கு கூறும் முன் வரை இதற்கு இடைப்பட்ட நேரத்தில் நாம் இரவு தொழுகை தொழுது கொள்ளலாம்!
(நூல் : புகாரி : 183 : 996 : 7452)
• ஆனால் இரவு தொழுகைக்கு சிறந்த நேரம் இரவின் கடைசி பகுதி ஆகும்! நாம் இரவின் கடைசி பகுதியில் எழுந்து குறைந்தது 2 ரக்அத் ஆவது தொழவது சிறந்ததாகும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1145)
• நபி (ஸல்) அவர்கள் பொதுவாக இரவில் அதிகப்படியாக 8 ரக்அத் மற்றும் வித்ரு 3 ரக்அத் தொழுவார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1147)
• நாம் குறைந்தது ஒவ்வொரு நாளும் இரவில் 8 ரக்அத் ஆவது தொழ முயற்சி செய்ய வேண்டும்!
• அல்லது நாம் குறைந்தது 2 ரக்அத் அதிக்கப்படியாக 2+2 ஆக எவ்வளவு வேண்டும் என்றாலும் இரவில் தொழுது கொள்ளலாம்! இதற்கு வரம்பு கிடையாது!
இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள் :
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும் என்று கூறினார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 990)
• நமக்கு மனனம் உள்ள சூராக்களை ஓதி தொழுது கொள்ளலாம்! ஆனால் சிறந்தது இரவில் நீண்ட நேரம் நின்று ஓதி தொழுவது ஆகும்!
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுகையில் மிகவும் சிறந்தது எது? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், நீண்ட நேரம் நின்று (ஓதித்) தொழுவதே ஆகும் என்று விடையளித்தார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 1383)
• நமக்கு பெரிய சூராக்கள் மனனம் இல்லை என்றால் நமக்கு தெரிந்த சிறிய சூராக்களை ஓதி தொழுகலாம் அல்லது அல்குர்ஆனை பார்த்து ஓதி தொழுது கொள்ளலாம்!
(நூல்: பத்ஹ் அல்-பாரி : 1 : 245)
1) அல்லாஹ் இறங்கி வருகின்றான் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன்! யாரேனும் என்னிடம் கேட்டால் நான் அவருக்குக் கொடுக்கின்றேன்! யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்! என்று கூறுவான்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1145)
2) துஆ ஏற்று கொள்ளப்படும் நேரம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நிச்சயமாக இரவில் ஒரு நேரமுண்டு! ஒரு முஸ்லிமான மனிதர் சரியாக இந்த நேரத்தில் இம்மை, மறுமை தொடர்பான எந்த நன்மையை வேண்டினாலும் அதை இறைவன் அவருக்கு வழங்காமல் இருப்பதில்லை. இது ஒவ்வொரு இரவிலும் நடக்கின்றது!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 1259)
3) சொர்க்கத்தில் நூழைவிக்கும் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஸலாமைப் பரப்புங்கள்! ஏழைகளுக்கு உணவளியுங்கள்! மக்கள் தூங்கும் போது தொழுங்கள்! (இதனால்) சொர்க்கத்தில் நுழையுங்கள்!
(நூல் : சுனன் திர்மிதீ : 2409)
4) முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நம்பிக்கை கொண்டு (நற் கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்!
(நூல் :ஸஹீஹ் புகாரி : 37)
• நாம் இரவில் உறங்கும் முன் இரவில் எழுந்து தொழ வேண்டும் என்ற எண்ணத்துடன் உறங்க வேண்டும்! ஒரு வேளை நம்மால் எழ முடியவில்லை என்றால் கூட நாம் தொழுத நன்மை அல்லாஹ் கொடுக்கின்றான்! ஆனால் இதையே வழமையாக செய்ய கூடாது!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருவர் அதிகாலை எழுந்து தஹஜ்ஜத் தொழுகை வேண்டும் என்ற எண்ணத்துடன் படுக்கைக்கு செல்கிறார்! ஆனால் அவருக்கு தூக்கம் மிகைத்து தஹஜ்ஜத் தொழ முடியாமல் போய் விட்டால் தஹஜ்ஜத் தொழ வேண்டும் என்று அவர் எண்ணிய அந்த எண்ணத்திற்காக தஹஜ்ஜத் தொழுததாக அவருக்கு கூலி எழுதப்படும். அவர் உறங்கிய அந்த உறக்கம் அவருக்கு சதகாவாக ஆகி விடும்!
(நூல் : சுனன் இப்னுமஜா : 1344)
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு துஆ செய்தார்கள் :
தான் இரவில் விழித்து தொழுதுவிட்டு தன் மனைவியையும் தொழுவதற்காக எழுப்பி அவள் மறுத்தால் அவளது முகத்தில் தண்ணீர் தெளித்துவிடும் கணவனுக்கும்,
தான் இரவில் விழித்து தொழுது விட்டு தன் கணவனையும் தொழுவதற்காக எழுப்பி அவன் மறுத்தால் அவனது முகத்தில் தண்ணீர் தெளித்து விடும் மனைவிக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக !
(நூல் : அபுதாவூத் : 1450)
• ஒரு வீட்டில் கணவன் மனைவி தினமும் சேர்த்து இரவு தொழுகை ஜமாத் ஆக தொழ ஆரம்பித்து விட்டார்கள் என்றால் அந்த வீட்டில் ஒரு போதும் இருவருக்கும் இடையே சண்டை பிரச்சனையே ஏற்படாது!
• ஒருவர் கோவம் கொண்டாலும் மற்றொருவர் விட்டு கொடுக்கும் தன்மை ஏற்படும் மேலும் ஒருவருக்கு ஒருவர் பாசம் அதிகம் ஆகும்! இருவருக்கும் இடையே உள்ள உறவு உறுதியாகும்!
• கணவன் மனைவி சேர்த்து தினமும் குறைந்தது 2 ரக்அத் ஆவது தொழ முயற்சி செய்ய வேண்டும் இன்று பல இடங்களில் இதை தவற விடுவதால் தான் பல இடங்களில் வீட்டில் மகிழ்ச்சி இருப்பது கிடையாது! அல்லாஹ் பாதுகாத்த ஸாலிஹானவர்களை தவிர!
@அல்லாஹ் போதுமானவன் 

No comments:
Post a Comment