முதல் பிரசவமும் தாய் வீட்டு செலவும் 
• முதல் பிரசவம் பெண் வீட்டார் தான் பார்க்க வேண்டும் என்று பெண் pregnant ஆன பின்பு அதிலும் சில ஒற்றப்படை எண்ணிக்கை மாதம் பார்த்து மாற்று மத வழிமுறையான வளைகாப்பு நல்ல முறையில் செய்து தாய் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் அதன் பின்பு அனைத்து செலவையும் அந்த பெண் வீட்டார் தான் பார்க்க வேண்டும் அந்த பெண் கஷ்டபட்டாலும் உடன் இருந்து எல்லாவற்றையும் அந்த தாய் தான் பார்க்க வேண்டும்!
• மனைவியிடம் pregnant நேரத்தில் தான் இன்னும் கூடுதல் கவனம் எடுத்து கணவன் உடன் இருந்து பார்க்க வேண்டும் ஆனால் இந்த நிலையில் இருவரையும் பிரித்து விடுவார்கள் பிள்ளை பிறந்த பின்பு மனைவியிடம் ஏதேனும் கருத்து வேறுபாடு அல்லது பிரச்சனை என்றால் நீ எனக்கு தேவை இல்லை இது எனக்கு பிறந்த பிள்ளை என்று கூறி விடுகிறான்! பிரசவ வலியின் போதும் பிரசவ நேரத்தில் கஷ்டப்படும் போதும் உடன் இருந்து பார்த்து இருந்தால் இவர் இப்படி கூறுவாரா???
• முதல் பிரசவம் தாய் வீட்டார் தான் பார்க்க வேண்டும் என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்றாகும்! ஆனால் இன்று இதை பர்ளு போன்று முக்கியத்துவம் கொடுத்து செய்கிறார்கள்! கணவன் மனைவிக்கு இதில் விருப்பம் இருந்தாலும் சரி விருப்பம் இல்லை என்றாலும் சரி இதை கட்டாயமாக செய்கிறார்கள்!
• பெண் pregnant நேரத்தில் தாய் வீட்டார் போக இன்னொரு காரணம், கணவன் வீட்டில் கற்ப நேரத்திலும் வீட்டு வேலைகளை அதிகம் கொடுப்பது, அவள் சோர்வு அடைந்தாள் ஒரு பிள்ளைக்கே இப்படி இருக்க நான் ஒரு காலத்தில் 10 பிள்ளைகள் பெற்று உள்ளேன் உன்னை போல் இருக்க வில்லை பிள்ளை பிறந்து இரண்டு நாட்களில் வீட்டு வேலைகளை நான் மட்டும் தனியாக செய்து உள்ளேன் என்று அவளை குறை கூறுவது! இதனாலயே எப்போது நம்மை விடுவார்கள் என்று அவள் எதிர் பார்த்து கொண்டு உள்ளாள்!
• கணவன் நிக்காஹ் முன்பு உன்னை அப்படி பார்த்து கொள்வேன் நீ தான் எனக்கு எல்லாம் என்பார் நிக்காஹ் பின்பு என் வீட்டார் கூறுவதை மீறி என்னால் உனக்கு எதுவும் செய்ய முடியாது என்று கூறி விடுகிறான்!!!!
• முதல் பிரசவம் ஆகும் அனைத்து செலவையும் பெண் வீட்டாரிடமே ஒப்படைத்து விடுகிறார்கள் வசதி இருந்தாலும் இல்லை என்றாலும் சரியே! கணவனிடம் உண்டு ஆனால் கொடுக்க முடியவில்லை! தாயிடம் ஒரு வார்த்தை கேள் என் உறவினரிடம் ஒரு வார்த்தை கேள் என்று அவளை பிறரிடம் கேட்கும் அளவுக்கு வைத்து விடுகிறார்!!!
• எத்தனையோ சகோதரிகள் அல்லாஹ் உதவி செய்யணும் இவர்களுக்கு பிரசவ நேரத்தில் medical checkup போக கூட பொருளாதாரம் இல்லாமல் கடனாகவோ அல்லது ஸதகா செய்யும் குழுவிடம் சென்று உதவி கேட்கிறார்கள் எவ்வளவு ஒரு அவளநிலை 
• இது மட்டும் இல்லாமல் குழந்தை பிறந்து விட்டால் பெண் வீட்டார் முறையாக செலவு செய்ய வேண்டும்! பிறந்த குழந்தைக்கு உடல் முழுவதும் நகை இருக்க வேண்டும் குறைவாக இருந்தால் அதற்கு ஒரு குறை! அவர்கள் விஷேசம் போன்று அதிகமான நபர்கள் வருவார்கள் எல்லோருக்கும் இவர்கள் தான் செலவு செய்து கவனிக்க வேண்டும்! இவ்வாறான நிலை எப்போது மாறும் நமது ஊர்களில்???
• இவ்வாறு நடக்க மற்றொரு காரணம் குடும்பத்தினர் மற்றும் கணவன் மனைவி இருவருக்கும் மார்க்க விளக்கம் இல்லாத காரணம் தான்! ஒரு பெண் pregnant ஆனால் எந்த மாதத்தில் ஸிமந்தம் செய்ய வேண்டும் எத்தனை சீர்வரிசை தட்டுகள் வைக்க வேண்டும்! என்று இதை எல்லாம் நன்கு கேட்டு தெரிந்து கொள்கிறார்கள்!
• ஆனால் குழந்தை சுமக்கும் போது & குழந்தை பிறந்த பின்பு என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்ன பெயர் வைக்கலாம்? என்று எதுவும் சிந்தனை செய்வது கிடையாது அதை பற்றி அறிய முயற்சி செய்வதும் கிடையாது!
• பெண்ணின் பெற்றோர்கள் விருப்பம் பட்டால் உடன் வைத்து கொள்ளலாம்! அதே நேரம் கணவனும் அடிக்கடி சென்று உடன் இருந்து பார்த்து கொள்ள வேண்டும் பொருளாதார செலவுகளை இவர் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்! பெண்ணுக்கு பொறுப்பாளர் கணவன் தான்! என்பதை மறந்து விட வேண்டாம்!
• இன்றும் பெரும்பாலான பெற்றோர்கள் பிள்ளை பிறந்த பின்பு தான் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது? என்ன பெயர் வைக்கலாம்! நிபாஸ் எத்தனை நாட்கள் ஏற்படும் அந்த நாளில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்று அப்போது தான் அவசர அவசரமாக பிறரிடம் கேட்கிறார்கள்!
• அந்த அளவிற்கு மார்க்கத்திற்கு இவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அதே உலக வாழ்கை என்றால் எந்த பள்ளிக்கூடம் சேர்ப்பது என்ன கல்லூரி சேர்ப்பது என்ன பிரிவில் சேர்ப்பது வரை அனைத்தும் முன்பு நன்கு விசாரித்து முடிவு செய்து வைக்கிறார்கள்!
• அல்லாஹ் பாதுகாக்கணும் இவ்வாறான நிலையை விட்டு! மகிழ்ச்சியான குடும்ப வாழ்கை அமைய வாழ்கையின் ஒவ்வொரு பகுதியும் மிக முக்கியம், நிக்காஹ் வாழ்கை என்பது நம்முடைய வாழ்கையில் ஒரு திருப்புமுனை அதற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து கவனிக்க வேண்டும்!
• நானும் நிக்காஹ் செய்தேன் இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள்! வாழ்த்தோம் மரணித்தோம் என்று பிராணிகள் போல் நாம் இருக்க கூடாது!
• மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை இன்னும் இறப்பிற்கு பிறகு உள்ள வாழ்கை பற்றியும் இஸ்லாம் நமக்கு தெளிவாக கூறி உள்ளது அவற்றை நாம் இயன்ற அளவுக்கு அறிந்து அமல் செய்ய முயற்சி செய்ய வேண்டும்! இவ்வாறு அமல் செய்வதற்கு அல்லாஹ் நமக்கு உதவிபுரிவானாக ஆமின்!
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது!
(அல்குர்ஆன் : 33 : 21)
@அல்லாஹ் போதுமானவன் 


No comments:
Post a Comment