பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

பிறை பார்க்கும் அணுகுமுறை பற்றி அறிந்து கொள்வோம்


பிறை பார்க்கும் அணுகுமுறை பற்றி அறிந்து கொள்வோம் 💞
1) நோன்பு வைக்கவும், நோன்பை விடவும் கட்டாயம் பிறை பார்த்தே வைக்க வேண்டும் பிறை தெரியவில்லை என்றால் அந்த மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்!
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்! (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1906)
2) பெரும்பான்மையான மக்கள் பிறையை தீர்மானம் செய்வது :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மக்கள் நோன்பு வைக்கும் நாள் தான் நோன்பு வைக்கும் நாளாகும் மக்கள் நோன்பை விடும் நாள் தான் நோன்பை விடும் நாளாகும்!
(நூல் : சுனன் இப்னு மாஜா : 1660)
• மேலே உள்ள ஹதீஸ் பொருளானது : பெரும்பான்மையான மக்கள் எந்தத் தீர்மானத்தை எடுக்கின்றனரோ அதன்படியே செயற்பட வேண்டும் என்பதாகும்!
• பெரும்பான்மையான மக்கள் எப்போதும் முடிவு செய்வார்கள் என்றால் அதற்கு என பொறுப்பில் உள்ள அதிகாரி அதிகாரபூர்வமாக பிறை பற்றி அறிவித்தால் மட்டுமே பெரும்பாலான மக்கள் அதை பின் பற்ற முடியும்! இவ்வாறு பின் பற்றுவது தான் சுன்னாஹ் ஆரம்பம் காலம் முதல் இஸ்லாமிய சமுதாயம் பின்பற்றி வந்த வழிமுறையாகும்!
• நபி (ஸல்) அவர்கள் காலம் முதல் ஸஹாபாக்கள் வாழ்ந்த காலம் வரை எந்த மக்களும் தனிப்பட்ட முறையில் பார்த்த பிறை அடிப்படையில் ஒரே ஊரில் தனித்து நோன்போ அல்லது பெருநாளோ கொண்டாடியது கிடையாது!
3) பொது மக்களுக்கு என ஓர் அதிகாரி இருந்து அவர் பிறை அறிவிப்பு செய்து மக்கள் பெருநாள் கொண்டாடும் நாளில் தான் அல்லாஹ்வின் தூதர் காலம் தொட்டும் சத்திய சஹாபாக்கள், இமாம்கள் காலம் முழுக்க இருந்துள்ளது!
• ஸஹாபாக்கள் அல்லது பிற மக்கள் பிறை பார்த்தாலும் அதை அந்த பகுதியில் ஆட்சி செய்யும் நபரிடம் கூறி அவர் அதை உறுதி செய்த பின்பு அந்த ஆட்சியாளர் மக்களுக்கு அறிவிப்பு செய்வார்கள்! இதை நாம் பல ஹதீஸ்களில் காணலாம்!
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
மக்களெல்லாம் பிறை பார்க்க முயன்றனர்! நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நான் பிறை பார்த்தேன் என்று தெரிவித்தேன். உடனே நபி (ஸல்) அவர்கள் தாமும் நோன்பு நோற்று மக்களுக்கும் நோன்பு நோற்க கட்டளையிட்டார்கள்!
(நூல் : தாரிமி : 1733)
• இவ்வாறு இல்லாமல் சுயமாக பிறை அறிவிப்பு செய்து ஒரே ஊரில் இரண்டு பெருநாட்கள் ஏற்படுத்தி கொள்வது என்பது இஸ்லாம் மார்க்கம் நமக்கு காட்டித்தராத வழிமுறையாகும்!
4) உலக பிறை பார்ப்பது பொறுத்த வரை இதற்கும் பல ஸஹீஹான ஆதாரம் ஹதீஸ்களில் உண்டு! உலக பிறை பின் பற்றியும் ஒருவர் நோன்பு வைக்கலாம் ஆனால் நம்முடைய பகுதியில் வாழும் பெரும்பாலான மக்கள் எந்த பிறை அடிப்படையில் நோன்பு வைக்கிறார்களோ நாமும் அதை பின் பற்றி கொள்வது சிறந்தது.
(நூல் : முஸ்லீம் : 1988 | அபூதாவூத் : 2332 | திர்மிதி : 688)
5) ஒவ்வொரு வருடமும் பிறை பார்ப்பதில் கருத்து வேறுபாடு குழப்பம் ஏற்படாமல் இருக்க பிறை பார்க்கும் பொறுப்பில் உள்ள அதிகாரி அவர்களிடம் ஆலோசனை செய்து இதை பற்றி பேசி ஒரு முடிவு எடுக்கலாம்! அடுத்த முறை குழப்பம் பிரச்சனை ஏற்படமால் இருக்க என்ன வழி என்று ஆலோசனை செய்யலாம்! இன்று பலர் அதிகாரியை விமர்சனம் செய்த தயார் ஆனால் பேசி ஒரு தீர்மானம் எடுக்க தயார் கிடையாது!
6) சவூதியில் பிறை பார்க்கும் முன் எல்லோருக்கும் அறிவிப்பு விடுவார்கள். பிறை இன்றைய நாளில் தேட வேண்டும். பிறை உங்களுக்கு பிறை தெரிந்தால் அதை பதிவு செய்து தகுந்த ஆதாரம் உடன் அதை தெரிவிக்க வேண்டும் என்று, நமது ஊரில் பிறை பார்த்ததாக அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூற தயார் ஆனால் அதை பதிவு செய்ய (photo or video) யாரும் தயார் கிடையாது.
7) பிறை பார்க்கும் பொறுப்பில் உள்ள அதிகாரி பிழை செய்தால் அதற்கான கூலி அவருக்கு நிச்சயமாக உண்டு! அவர் சரியாக கூறினால் அதற்கான கூலியும் அவருக்கு உண்டு! இந்த குற்றம் மக்கள் மீது சாராது!
(நூல் : அல்பதாவா அல் குப்ரா : 2 / 460–464)
😎 இன்னும் சிலர் பிறை பார்க்கும் அதிகாரி ஷிர்க் வைக்கும் நபர் பித்அத் செய்யும் நபர் அவர் அறிவிப்பை ஏற்க கூடாது என பலர் விமர்சனம் செய்கிறார்கள்! இதை பற்றி அல்லாஹ் மிக அறிந்தவன்!
• இன்று பிறை பார்த்து விட்டோம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்கள் பேசும் வீடியோ அவர்கள் கடிதம் வருகிறது உண்மையில் பிறை பார்க்கும் அதிகாரி உள்ளத்தை அல்லாஹ் அறிந்தவன் ஆனால் இன்று தனிப்பட்ட முறையில் பிறை அறிவிப்பு செய்யும் கொள்கை கொண்டவர்கள் அல்குர்ஆன் ஸஹீஹான ஹதீஸ்களை அனுகும் முறை மட்டும் சரியான வழியா?
• இன்றும் பல ஸஹீஹான ஹதீஸ்களை அறிவுக்கு எட்ட வில்லை அது எப்படி சாத்தியம் ஆகும் என ஹதீஸ்களை மறுப்பது அல்குர்ஆன் வசனங்களுக்கு தவறான விளக்கம் கொடுப்பது ஸஹாபாக்களை ஏசுவது அறிஞர்களை விமர்சனம் செய்வது என எல்லாமே பகிரங்கமாக செய்கிறார்கள் ஆனால் இன்று பலர் இதை கவனிப்பது இல்லை அவர்கள் கூறி விட்டார்கள் அல்லது அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டார்கள் என்று அதை உறுதியாக அதை ஏற்கிறார்கள் அல்லாஹ் பாதுகாக்கணும்!
• ஒவ்வொரு நபரும் தனிப்பட்ட முறையில் பிறை பார்த்து அல்லது சிலர் பார்த்து பிறை அறிவிப்பு செய்து குறிப்பிட்ட மக்கள் மட்டும் நோன்பு வைப்பது அல்லது பெருநாள் கொண்டாடுவது குழப்பம் ஏற்படும் என்பதால் தான் பொதுவாக பிறை பார்க்க ஒரு அதிகாரி நியமனம் செய்து உள்ளார்கள்!
• அந்த அதிகாரி பிறை பற்றி அறிவிப்பு செய்யும் வரை நாம் பொறுமையுடன் இருக்கலாம் அவரசப்பட வேண்டாம்! இன்று பல ஊர்களில் குழப்பம் ஏற்பட காரணம் பிறை பார்ப்பது பற்றி ஒரு தெளிவு இல்லாத காரணத்தினால் தான்! அதிகாரிக்கு அனைவரும் கட்டுப்பட்டால் இன்ஷாஅல்லாஹ் இந்த குழப்பங்களை விட்டு நாம் நீங்கி கொள்ளலாம்!
~அல்லாஹ்வே மிக அறிந்தவன்!
@அல்லாஹ் போதுமானவன் 💞


 

No comments:

Post a Comment