இஸ்லாத்தில் ஆஷுரா நோன்பு பற்றி அறிந்து கொள்ளுவோம் 
• உபரியான நோன்புகளால் நம்முடைய பர்ளு நோன்புகளில் உள்ள குறைகளை பூர்த்தி செய்கிறது! இது மட்டும் அல்லாமல் அல்லாஹ்வின் நெருக்கத்தையும் பொருத்தத்தையும் பெற்று தருகிறது!
(நூல் : புகாரி : 6502 | திர்மிதீ : 378)
• இஸ்லாத்தில் முதல் மாதம் மற்றும் சிறந்த நான்கு மாதங்களில் ஒரு மாதமான முஹர்ரம் மாதத்தில் நாம் அதிகம் நோன்பு வைக்க முயற்சி செய்யவேண்டும்! நபி (ஸல்) அவர்கள் இதை வலியுறுத்தியும் உள்ளார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2157)
• முஹர்ரம் மாதத்தில் சிறந்த நோன்பான ஆஷுரா நோன்பு வைப்பது சுன்னாஹ் ஆகும்! ஆஷுரா என்றால் அரபியில் 10 என்பதை குறிக்கும்! நாம் முஹர்ரம் பிறை 10 வது நாளில் ஒரு நோன்பு வைப்பது சுன்னாஹ் ஆகும்!
• ஆஷுரா நோன்பை மக்காவில் இஸ்லாம் வருவதற்கு முன்பே ஜாஹிலிய மக்கள் நோற்று வந்தனர்! நபி (ஸல்) அவர்களும் இந்த நோன்பை வழமையாக வைத்து கொண்டு வந்தார்கள்!
(நூல் : தஃப்சீர் குர்துபீ)
• நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதினாவிற்கு வந்த பொழுது யூதர்களும் இந்த நோன்பை வைத்து வந்தார்கள் அப்பொழுது தான் நபி (ஸல்) அவர்கள் இந்த நோன்பை ஏன் நீங்கள் வைக்கிறீர்கள் என்று கேட்டார்கள்! அதற்கு அவர்கள் அல்லாஹ் இந்த நாளில் தான் பிர்அவ்னிடம் இருந்து மூஸா (அலை) அவர்களை காப்பாற்றினான்! அதற்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நோன்பை நாங்கள் வைக்கின்றோம் என்று கூறினார்கள்!
• நபி (ஸல்) அவர்கள் உங்களை விட நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று நபி (ஸல்) அவர்களும் அந்த நாளில் தானும் நோன்பு வைத்து முஸ்லீம்களும் நோன்பு வைக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள்!
• மேலும் அந்த நாளில் பகல் நேரத்தில் உண்ணாமல் இருந்தவர்களை அப்படியே நோன்பை தொடரும் மாறும் - சாப்பிட்ட மக்களை உணவு உண்ணுவதை நிறுத்தி விட்டு அப்படியே ஆஷுரா நோன்பை வைக்குமாறு கட்டளையிட்டார்கள்! இவ்வாறு முஸ்லீம்கள் அனைவரும் மதினாவில் இரண்டு வருடங்களிலும் ஆஷுரா நோன்பை நோற்று வந்தனர்!
• ஆஷுரா நோன்பை பெரியவர்கள் மட்டும் அல்லாமல் ஸஹாபிகள் தங்களின் சிறு பிள்ளைகளையும் நோன்பு நோற்க வைத்தார்கள்! குழந்தைகள் பசியினால் உணவு கேட்டால் விளையாட்டு பொருட்கள் ஏதேனும் கையில் கொடுத்து நோன்பு திறக்கும் வரை கவனத்தை திசை திருப்பி விடுவார்கள்!
• அல்லாஹ் ரமலான் நோன்பை முஸ்லீம்கள் மீது கடமையாக்கிய பொழுது நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா நோன்பை விரும்பியவர்கள் வைக்கலாம்! விரும்பியவர்கள் விட்டு விடலாம் என்று கூறினார்கள்!
• ஹிஜ்ரி 11 யில் ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் ஆஷுரா நோன்பை வைக்கிறோம் ஆனால் யூதர்களும் இதே நாளில் ஒரு நோன்பு வைக்கிறார்கள் என்று கூறினால்! இதை கேட்ட நபி (ஸல்) அவர்கள் அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் முஹர்ரம் 9 பதிலும் ஒரு நோன்பு வைப்பேன் என்று கூறினார்கள்! ஆனால் அடுத்த வருடம் நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 2083 - 2088 - 2091 - 2092)
• அல்குர்ஆனில் கூறப்பட்டு உள்ள 25 நபி மார்களில் நபி மூஸா (அலை) அவர்களும் ஒருவர் ஆவார்! அல்குர்ஆனில் அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களின் வரலாறு பற்றி தான் அதிகம் கூறியுள்ளான்!
• கொடுக்கோலன் ஃபிர்அவ்னிடம் தான் பனி இஸ்ரவேல்கள் அடிமையாக வாழ்ந்து வந்தார்கள்! நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்தார்கள்! இதனால் பிர்அவ்ன் மற்றும் அவனை சார்ந்தவர்களை தவிர மற்ற அனைவரும் இஸ்லாத்தை ஏற்று பிர்அவ்னின் தீங்கிற்கு பயந்து இரவோடு இரவாக அவனிடம் இருந்து தப்பி சென்றார்கள்!
• இதை அறிந்த பிர்அவ்ன் பின்னால் அவன் படைகளுடன் உடன் துரத்தி கொண்டு வந்தான்! மூஸா (அலை) அவர்களும் அவர்களை ஈமான் கொண்ட மக்களும் தப்பி செல்லும் பொழுது இடையில் நைல் நதி குறுக்கிட்டது!
• இதனால் தப்பித்து செல்ல வழி இல்லாமல் நின்றார்கள் பின்பு அல்லாஹ் கைத்தடி மூலம் கடலை அடிக்க சொன்னான் மூஸா (அலை) அவர்களை, உடனே கடல் பிளந்து தப்பி செல்ல வழியை அல்லாஹ் ஏற்படுத்தினான்!
• பின்னால் துரத்தி வந்த ஃபிர்அவ்னும் அவனது படைகளையும் கடலில் முழ்கடித்தான்! இந்த நிகழ்வு சரியாக முஹர்ரம் மாதத்தில் தான் நடைபெற்றது!
• இந்த நிகழ்வு பின்பு அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு வைத்தார்கள்! அதனால் நாம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதமாக முஹர்ரம் 10 வது நாளில் நோன்பு வைக்கிறோம் இந்த நோன்புகள் வைப்பது சுன்னத் ஆகும்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2083)
• நாம் முஹர்ரம் பிறை 9 (16 / 07 / 2024 - செவ்வாய்க்கிழமை) மற்றும் முஹர்ரம் பிறை 10 (17 / 07 / 2024 - புதன்கிழமை) இரண்டு நோன்புகள் வைக்க வேண்டும்! இது சுன்னாஹ் ஆகும்!
• நாம் முஹர்ரம் பிறை 9 (15 / 07 / 2024 - திங்கள்கிழமை) மற்றும் முஹர்ரம் பிறை 10 (16 / 07 / 2024 - செவ்வாய்க்கிழமை) இரண்டு நோன்புகள் வைக்க வேண்டும்! இது சுன்னாஹ் ஆகும்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2088)
• நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் முஹர்ரம் 10 வது நாளில் ஒரு நோன்பு மட்டுமே வைத்தார்கள் யூதர்களும் ஒரு நோன்பு வைத்தாதல் அவர்களுக்கு மாறு செய்யும் விதமாக இரண்டு நோன்பு வைக்க சொன்னார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2089)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாகும்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2152)
• சிறு பாவங்கள் மட்டுமே மன்னிக்கப்படும்! பெரும் பாவங்களுக்கு தவ்பா செய்ய வேண்டும்!
(நூல் : அல்மஜ்மூவு : 6 / 431)
• ஆஷுரா நாளில் முஹர்ரம் 9 மற்றும் 10 வது நாளில் இரண்டு நோன்புகள் வைப்பது சுன்னத் ஆகும்!
• ஏதேனும் நிர்பந்த சூழ்நிலை இதில் நாம் முஹர்ரம் 9 வது நாளில் நோன்பை விட்டு விட்டால் முஹர்ரம் 10 வது ஒரு நாள் மட்டும் நோன்பு வைத்தால் போதும்! ஆஷுரா நோன்பின் சிறப்பு முஹர்ரம் 10 வது நாளில் வைக்கும் நோன்பிற்கு மட்டும் தான்!
இமாம் இப்னு ஹாஜர் அல்ஹைஸமீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
ஆஷுரா நாளில் மட்டும் ஒரு நோன்பு வைப்பது தவறு கிடையாது!
(நூல் : துஹ்ஃபத் அல் முஹ்தாஜ் : 03)
• முஹர்ரம் 11 வது நாளில் நோன்பு வைக்கலாம் என்று சில ஹதீஸ்கள் உள்ளன ஆனால் அவை அனைத்துமே மிகவும் பலகீனமானவையே! அதே போன்று ஆஷுரா நோன்பு தவறி விட்டால் அந்த நோன்பை களா செய்ய முடியாது!
(நூல் : மஜ்மூ ஃபதாவா : இப்னு உதைமீன் (ரஹ்) : 20 / 43)
• நம்மில் சிலர் ஒவ்வொரு வருடமும் ஆஷுரா நோன்பு வைப்பார்கள் ஆனால் நிர்பந்த சூழ்நிலை சிலர் பயணத்தில் இருப்பார்கள் இன்னும் சிலர் இந்த காலங்களில் நோய் வாய்ப்பட்டு இருப்பார்கள்! இன்னும் சிலருக்கு ஹைலு அல்லது நிபாஸ் ஏற்பட்டு இருக்கும்!
• நாம் வைக்க விருப்பப்ட்டாலும் நிர்பந்த சூழ்நிலை வைக்க முடியாமல் போகும் இப்படிப்பட்டவர்கள் பாவ காரியங்களில் எதுவும் ஈடுப்படாத வரை அல்லாஹ் இவர்களுக்கு நோன்பு வைத்த நன்மையை வழங்குகிறான்!
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும் போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற (அதே) நற்பலன் அவன் நோயுற்று விடும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது (அவன் பாவம் எதுவும் செய்யாமலிருக்கும் வரை) அவனுக்கு எழுதப்படும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 2996)
• ஆஷுரா நாளை கொண்டாடுவது, அந்த நாளில் புது ஆடை அணிந்து விஷேச உணவுகள் சமைப்பது அல்லது துக்கம் அனுசரிப்பது இஸ்லாத்தில் கூடாது! ஆஷுரா நாளில் நோன்பு வைப்பது மட்டுமே நபி (ஸல்) அவர்கள் வழிமுறையாகும்!
(பத்ஃவா : இப்னு உஸைமீன் (ரஹ்) : நூருன் அல்த்தர்ப் : 19 : 90,91)
• ஆஷுரா நோன்பு பொறுத்த வரை 9 மற்றும் 10 வது நாள் வைப்பது தான் சுன்னாஹ் ஆகும்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 2088)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஆஷுரா நாளின் நோன்பை நோருங்கள் அதற்கு முன் ஒரு நாள் அல்லது அதற்கு பின் ஒரு நாள் நோன்பு நோற்று யூதர்களுக்கு மாறும் செய்யுங்கள்! (நூல் : அஹ்மத்) இந்த ஹதீஸ் பலவீனமானது ஆகும்!
• இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசையில் முஹம்மத் இப்னு அப்துர்ரஹ்மான் என்பவர் இடம் பெற்றிருக்கின்றார், இவர் கடுமையான மனனக் குறையுள்ளவரும் இவர்பற்றி அஹ்மத் இப்ன் ஹன்பல் மற்றும் யஹ்யா இப்னு மஈன் (ரஹ்) அவர்களும் இவரை பலவீனர் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்!
• இன்னும் தாவூத் இப்னு அலி என்பவரும் இந்த அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறுகின்றார் அவரை இமாம் தஹபி (ரஹ்) அவர்கள் இவருடைய ஹதீதை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என கூறுகின்றார்கள்!
(நூல் : பத்ஹுல் அல்லாம் : 2 / 204)
• ஸஹீஹான ஹதீஸ்கள் எதுவும் 11 வது நாளில் நோன்பு வைப்பது பற்றி எதுவும் வர வில்லை அதனால் நாம் ஸஹீஹான ஆதாரம் அடிப்படையில் 9 மற்றும் 10 வது நாளில் மட்டும் நோன்பு வைத்தால் போதுமானது!
• 9 வது நாளில் நோன்பு வைக்க முடியவில்லை என்றால் நாம் 10 வது நாள் மட்டும் ஒரு நோன்பு வைத்தால் போதுமானனது ஆகும்!
@அல்லாஹ் போதுமானவன் 

No comments:
Post a Comment