💟 #கவலை - #துன்பம் - #கஷ்டம் ஏற்படும் போது நபி அவர்கள் கற்று தந்த அழகிய துஆக்கள் 🛐
💟 முதல் துஆ :-
அரபியில் :
اللِّهُمَّ إنِّي عَبْدُكَ ، ابْنُ عَبْدِكَ ، ابْنُ أَمَتِكَ ، نَاصِيَتِي بِيَدِكَ ، مَاضِ فِيَّ حُكْمُكَ ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ ، أَوْ أنْزَلْتَهُ فِي كِتَاَبِكَ ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ ، أنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي ، وَ نُورَ صَدْرِي ، وَ جَلاءَ حُزْنِي ، وَ ذَهَابَ هَمِّي
தமிழில் :
அல்லாஹும்ம இன்னீ அப்துக, வப்னு அப்திக, வப்னு அமதிக, நாஸியத்தீ பி எதிக, மாழின் ஃபிய்ய ஹுக்முக, அதுலுன் ஃபிய்ய கலாவுக, அஸ்அலுக பிகுல்லி இஸ்மின் ஹுவ லக, ஸம்மைத்த பிஹீ நஃப்ஸக, அவ் அன்ஸல்தஹு ஃபீ கிதாபிக, அவ் அல்லம்தஹு அஹதன் மின் ஹல்கிக, அவிஸ்தஃதர்த்த பிஹீ ஃபீ இல்மில் கைபி இன்தக, அன் தஜ்அலல் குர்ஆனல் அளீம ரபீஅ கல்பீ, வ நூர சதுரீ, வஜலாஹ ஹுஸ்னீ, வதிஹாப ஹம்மீ வகம்மீ
பொருள் :
அல்லாஹ்வே! நான் உன் அடிமை; உனது அடிமையின் மகன்; உன் அடிமைப் பெண்ணின் மகன்; எனது உச்சி முடி உன் கையில் இருக்கிறது; என்னில் உன் தீர்ப்பு நிச்சயம் நிறைவேறக் கூடியதே; என் விஷயத்தில் உன் விதி நீதியானதே; உனக்குத் தகுதியான ஒவ்வொரு பெயரின் பொருட்டால் - அப்பெயரை நீ உனக்குச் சூட்டி இருக்கின்றாய்; அல்லது அதை உனது நூலில் இறக்கி இருக்கின்றாய்; அல்லது உனது அடியார்களில் ஒருவருக்கு அதை நீ கற்றுக் கொடுத்திருக்கின்றாய்; அல்லது உன்னிடம் உள்ள மறைவான கல்வியில் அதை நீ மறைத்து வைத்திருக்கின்றாய் - (அத்தகைய உனது பெயரால் இந்தக்) குர்ஆனை எனது உள்ளத்திற்கு வசந்தமாகவும் எனது இதயத்திற்குப் பிரகாசமாகவும் எனது கவலையை அகற்றக் கூடியதாகவும் எனது துக்கத்தை நீக்கக் கூடியதாகவும் ஆக்கி வைக்க வேண்டுமென உன்னிடம் கேட்கிறேன்.
( நூல் : முஸ்னது அஹ்மது : 3704 )
💟 இரண்டாவது துஆ :-
அரபியில் :
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ
தமிழில் :
'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல் அஜ்ஸி, வல்கஸலி, வல்புக்லி, வல்ஜுப்னி, வ ளலஇத் தைனி, வ ஃகலபத்திர் ரிஜால்'
பொருள்:
இறைவா! (வருங்காலத்தைப் பற்றியக்) கவலையிலிருந்தும், (நடந்து முடிந்துவிட்டவை பற்றிய) துக்கத்திலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறைகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
( நூல் : ஸஹீஹ் புகாரி : 6363 )
💟 மூன்றாவது துஆ :-
அரபியில் :
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ
தமிழில் :
'லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம்'
பொருள்:
கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.
( நூல் : ஸஹீஹ் புகாரி : 6346 )
💟 நான்காவது துஆ :-
அரபியில் :
لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ۖ اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ ۚ
தமிழில் :
லாஇலாஹ இல்லா அந்த ஸுப்ஹானாக இன்னி குந்து மினல்லாளிமீன்
பொருள் :
“உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்”
( அல் குர்ஆன் 21: 87 )
உங்களால் இயன்றவரை இந்த துஆக்களை ஓதுங்கள் 🤲.....
*நபி வழி நடப்போம்*💝
____________________________
No comments:
Post a Comment