பெற்றோர்களுக்காக கேட்க வேண்டிய அழகிய ஐந்து துஆக்கள் 
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا
‘ ரப்பிர் ஹம்ஹுமா கமா ரப்பயானீ ச(ص)கீ(غ)ரா ’
பொருள் : என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!
(அல் குர்ஆன் 17 : 24)
رَبَّنَا اغْفِرْ لِىْ وَلـِوَالِدَىَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ
‘ ரப்பனஃபிர்லீ வலிவாலிதய்ய வலில் முஃமினீன யவ்ம யகூமுல் ஹிஸாப் ’
பொருள் : எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக!
(அல்குர்ஆன் : 14:41)
رَبِّ اغْفِرْلِىْ وَلِـوَالِدَىَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَّلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ
‘ ரப்பிக்(غ)ஃப்ர்லீ வலி வாலிதைய்ய வலிமன் தஹ(ج)ஹல பை(த்)திய முஃமினவ் வலில் முஃமினீன வல் முஃமினாதி ’
பொருள் : என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக!
(அல்குர்ஆன் : 71 : 28)
رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ
‘ ரப்பி அவ்ஸி(ز)ஃனீ அன் அஷ்குர நிஃமதிக்கல்லதீ அன்அம்த அலய்ய வ வஅலா வாலிதய்ய வஅன் அஃமல ஸாலிஹன் தர்ளா(ض)ஹு வஅத்ஹில்னீ பிரஹ்மதிக ஃபீ இபாதிகஸ் ஸாலிஹீன் ’
பொருள் : என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!
(அல்குர்ஆன் : 27 : 19)
رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰٮهُ وَاَصْلِحْ لِىْ فِىْ ذُرِّيَّتِىْ اِنِّىْ تُبْتُ اِلَيْكَ وَاِنِّىْ مِنَ الْمُسْلِمِيْنَ
‘ ரப்பி அவ்ஸி(z)ஃனீ அன் அஷ்குர நிஃமதிக்கல்லதீ அன்அம்த அலைய்ய வஅலா வாலிதய்ய வஅன் அஃமல ஸாலிஹன் தர்ளா(ض)ஹு வ அஸ்(ض)லிஹ்லீ ஃபீ து(ذ)ர்ரியா(த்)தீ இன்னி துப்து இலைக்க வ இன்னீ மினல் முஸ்லீமின் ’
பொருள் : இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக!
(அல்குர்ஆன் : 46 : 15)
@அல்லாஹ் போதுமானவன் 

No comments:
Post a Comment