நோன்பு பெருநாளில் பேன வேண்டிய 9 சுன்னாஹ்க்கள் பற்றி அறிந்து கொள்ளுவோம் 
• இஸ்லாத்தில் இரண்டு பெருநாள் மட்டுமே உள்ளது 1) ஈதுல் பித்ர் (நோன்பு பெருநாள்) 2) ஈதுல் அழ்ஹா (தியாக திருநாள்) ஆகும்!
(நூல் : சுனன் நஸயீ : 1755)
• நபி (ஸல்) அவர்கள் பெருநாளில் நமக்கு சில ஒழுக்கங்களை கற்று கொடுத்து உள்ளார்கள்! அவற்றை பற்றி சுருக்கமாக பார்ப்போம்!
1) பெருநாள் அன்று குளிப்பது :
• பெருநாள் தொழுகைக்கு நாம் நல்ல முறையில் குளிக்க வேண்டும்! இது சுன்னாஹ் ஆகும்!
(நூல் : முஅத்தா : 609)
2) நம்மிடம் உள்ள நல்ல ஆடைகளை அணிவது :
• பெருநாள் அன்று புத்தாடை அணிவது சுன்னாஹ்வாகும்! நம்மிடம் புத்தாடை இல்லை என்றால் நம்மிடம் இருக்கும் சிறந்த ஆடைகளை அணித்து கொண்டாள் போதுமானது!
(நூல் : அஸ் ஸஹீஹா : 1279)
3) பேரிச்சம் பழங்களை உண்ணுவது :
• பெருநாள் தொழுகைக்கு செல்லும் முன் சாப்பிட்ட பின்பு தொழ செல்ல வேண்டும் குறைந்தது ஒற்றைப்படை எண்ணிக்கையில் பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு விட்டாவது செல்ல வேண்டும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 953 | சுனன் திர்மிதி : 448)
4) பாதைகளை மாற்றி கொள்ளுவது :
• நாம் பெருநாள் அன்று தொழுகை செல்ல ஒரு பாதையும் - தொழுகை முடித்த பின்பு வருவதற்கு ஒரு பாதையும் பயன் படுத்த வேண்டும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 986)
5) தக்பீர்கள் அதிகம் கூறுவது :
• பெருநாள் அன்று நாம் அதிகம் அல்லாஹ்வை புகழ தக்பீர்கள் கூறவேண்டும்! பெருநாள் அன்று வீட்டில் இருந்து புறப்பட்டு தொழுகைக்கு இடத்தை அடையும் வரை தக்பீர் கூறுவது சுன்னத் ஆகும்! பெண்கள் குரல் தாழ்த்தி கூறவேண்டும்!
(நூல் : அஸ் ஸஹீஹா : 171 | ஸஹீஹ் புகாரி : 971)
அல்லாஹ் உங்களை நேரிய வழியில் செலுத்தியதற்காக நீங்கள் அல்லாஹு அக்பர் எனக் கூறி அவனது மேன்மையைப் புகழுங்கள். இதனால் நீங்கள் நன்றி செலுத்துபவர்களாய் ஆகலாம்!
(சூரத்துல் : அல் பகரா : 185)
அல்லஹு அக்பர் - அல்லஹு அக்பர் - லா இலாஹ இல்லல்லாஹ் - அல்லஹு அக்பர் - வலில்லாஹில்ஹம்து
பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை, அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்!
(நூல் : இர்வாஉல் கலீல் : 3 / 125)
6) வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ளுவது :
• பெருநாள் அன்று ஒருவருக்கு ஒருவர் சண்டை பிரச்சனை கோவம் இதை எல்லாம் மறந்து அன்புடன் வாழ்த்துகளை பரிமாறி கொள்ள வேண்டும்!
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم
‘ தகப்பலல்லாஹு மின்னா வ மின்கும் ’
பொருள் : அல்லாஹ் எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் (நற்செயல்களை) ஏற்று கொள்வானாக!
(நூல் : ஃபத்ஹுல் பாரீ : 2/446)
7) பெருநாளில் அதிகம் துஆ செய்யுங்கள் :
• பெருநாள் திடலில் இருக்கும் போது, தமது தேவைகளை வல்ல இறைவனிடம் முறையிட்டுக் கேட்க வேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும் மகத்துவமும் உள்ளது!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 971)
• இரண்டு நபர்கள் சந்தித்து கொள்ளும் போது, ஒருவருடைய கையை மற்றவர் பிடித்து நட்பை பரிமாறிக் கொள்வதற்கு முஸாஃபஹா என்று பெயர் ஆகும்!
• இரு நபர்கள் முஸாஃபஹா செய்யும் பொழுது எந்த பகையும் வெறுப்பும் கோவமும் இல்லாமல் நட்பை பரிமாறி கொள்ள இஸ்லாம் நமக்கு சொல்லி கொடுத்த அழகிய நற்பண்புகளில் முஸாஃபஹா செய்வதும் ஒன்றாகும்!
• நாம் பிறரை வாழ்த்த அல்லது அன்பை வெளிப்படுத்த முஸாஃபஹா செய்கிறோம் இது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த ஒரு செயல் ஆகும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 6263)
• ஒரு உள்ளங்கையை மறு உள்ளங்கையில் சேர்த்தல் என்பது தான் முஸாஃபஹா என்ற சொல்லின் நேரடி அர்த்தமாகும்! வலது கையால் மற்றவரின் வலது கையைப் பிடிப்பதே முஸாஃபஹா செய்யும் சரியான முறையாகும்!
• ஒரு கையினால் மட்டுமே முஸாஃபஹா செய்ய வேண்டும்! இரண்டு கைகளால் முஸாஃபஹா செய்ய கூடாது!
(ஷேக் அல்பானி (ரஹ்) : அல் ஸில்ஸிலாஹ் அல் ஸஹீஹா : 1 / 22)
• இன்று பல ஊர்களில் முஸாஃபஹா செய்கிறோம் என்று இரண்டு கைகளையும் x போன்று வைத்து கொண்டு முஸாஃபஹா செய்கிறார்கள் ஆனால் இவ்வாறு செய்ய கூடாது பொதுவாக நாம் ஒரு கையினால் முஸாஃபஹா செய்து கொண்டால் போதுமானது ஆகும்!
• முஸாஃபஹா செய்யவதற்கு என்று எந்த துஆவும் கிடையாது! நாம் முஸாஃபஹா மட்டும் செய்தால் போதும்!
• முஸாஃபஹா செய்தால் இவ்வளவு சிறப்பு உள்ளது என்று சில செய்திகள் உள்ளன ஆனால் அவை அனைத்தும் பலகீனமானவையே!
• இன்னும் சிலர் முஸாஃபஹா செய்யும் போது மூன்று முறை கட்டி அனைத்து அல்லது கன்னத்தை ஒட்டி கடைசியில் முத்தம் கொடுத்து கொள்ளுவார்கள் இதற்க்கு எல்லாம் எந்த ஆதாரமும் மார்க்கத்தில் கிடையாது!
• நேசத்தின் காரணமாக அதிகப்படியாக ஒரு முறை கட்டியனைக்கலாம்! அவ்வளவு தான் வரம்பு!
• முஸாபஹா பொதுவாக ஆண்கள் ஆண்களும் - பெண்கள் பெண்களும் செய்து கொள்ளலாம்!
• ஆனால் ஒரு போதும் அந்நிய ஆணுடன் அந்நிய பெண்ணும் / அந்நிய பெண்ணுடன் அந்நிய ஆணும் முஸாபஹா செய்யவே கூடாது!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணைத் தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையைக் காயப்படுத்திக்கொள்வது சிறந்ததாகும்!
(நூல் : தப்ரானி : 16916 | அல் முஃஜமில் கபீர் : 16910)
• பெண்கள் : மஹ்ரமான ஆண்கள் (கணவன் தந்தை சகோதரன்) போன்றவர்களிடம் முஸாபஹா செய்து கொள்ளலாம்!
• ஆண்கள் : மஹ்ரமான பெண்கள் (தாய் சகோதரி மனைவி) போன்றவர்களிடம் முஸாபஹா செய்து கொள்ளலாம்!
9) பெருநாளில் விளையாடி கொண்டாடுவது :
• பெருநாள் தினத்தில் குடும்பத்தினர் உடன் மகிழ்ச்சி இருப்பது சுன்னாஹ்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 1625)
• அல்லாஹ் பாதுகாக்கனும் இன்று பல குடும்பங்களில் சினிமா இன்னும் இஸ்லாம் தடை செய்த வற்றின் மூலம் பெருநாளை செலவு செய்கிறார்கள்! இவ்வாறு செய்வது குற்றம் ஆகும்! ஒரு மாதம் நோன்பு வைத்து சேகரித்த நன்மைகளை ஒரே நாளில் அழித்து விட வேண்டாம்!
@அல்லாஹ் போதுமானவ

No comments:
Post a Comment