பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

ஹஜ் & உம்ரா செல்பவர்களிடம் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூற சொல்லி அனுப்பலாமா?


ஹஜ் & உம்ரா செல்பவர்களிடம் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூற சொல்லி அனுப்பலாமா?
உஸ்தாத் SHM இஸ்மாயில் ஸலபி அவர்களின் பதிவில் இருந்து தொகுத்து கொடுத்து உள்ளோம்!
• மக்களிடம் மார்க்கத்தை பற்றி சரியான தெளிவு இல்லாத காரணத்தினால் இவ்வாறு ஹஜ் அல்லது உம்ரா செல்லும் மக்களிடம் நபி (ஸல்) அவர்களுக்கு என்னுடைய ஸலாத்தை எத்தி வையுங்கள் என்று கூறுகின்றார்கள்!
• முதலில் ஹஜ் அல்லது உம்ரா செல்ல கூடிய நபர்கள் நோக்கமும் பணியும் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்வது அல்ல!
• இரண்டாவது : ஹஜ் அல்லது உம்ரா செய்வதற்கும் மதினாவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது! அதே போல் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறுவதற்கு நபி (ஸல்) அவர்களின் கபூருக்கு தான் செல்ல வேண்டும் என்று அவசியமும் கிடையாது!
• ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு நாளைக்கு ஐந்து நேர தொழுகையில் 9 முறை நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்கிறான்!
• நாம் தொழுகையில் அத்தஹிய்யாத்து ஓதுகிறோம்! அதில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலாமும் கூறுவதுடன், ஸலவாத்தும் கூறுகிறோம்! எமது ஸலாத்தை மலக்குகள் நபி (ஸல்) அவர்களுக்கு எத்திவைக்கின்றனர்!
• எனவே, ஸலாம் கூறுவதற்கு யாரும் மதீனாச் செல்ல வேண்டும் என்கிற அவசியமே கிடையாது! ஸலாத்தை எத்திவைக்க ஆள்தேடவும் தேவையில்லை!!!
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் எனது கப்றைத் திருவிழாக் கொண்டாடும் அல்லது அடிக்கடி வந்து செல்லும் இடமாக ஆக்கி விடாதீர்கள்! நீங்கள் எங்கிருந்தாலும் என் மீது ஸலாம் கூறுங்கள்! உங்கள் ஸலாம் எனக்கு எத்திவைக்கப்படுகின்றது!
(நூல் : சுனன் அபூதாவூத் : 2042)
• எனவே, நாம் ஹஜ் அல்லது உம்ரா செல்லும் நபர்களிடம் யாராவது நபி (ஸல்) அவர்களுக்கு என்னுடைய ஸலாமை எத்திவையுங்கள் என்று கூறினால், நீங்கள் அழகிய முறையில் கூறுங்கள் : நீங்கள் இங்கிருந்தே ஸலாம் கூறலாம்! உங்கள் ஸலாம் நபி (ஸல்) அவர்களுக்கு எத்திவைக்கப்படும்! நீங்கள் தொழுகையிலேயே பல முறை நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறுகிறீர்கள்! எனவே இப்படிக் கோரிக்கை வைக்காதீர்கள்! என்று எடுத்து கூற வேண்டும்!
@அல்லாஹ் போதுமானவன் 💞
No photo description available.
All reactions:
40


 

No comments:

Post a Comment