வானத்தின் கதவுகளை திறக்க செய்யும் 12 நல்அமல்கள் பற்றி அறிந்து கொள்வோம்!
• மிகவும் பிரம்பாண்டமான, ஆற்றல் மிக்க படைப்பான வானதை அல்லாஹ் சில நேரம் மற்றும் சில அமல்களுக்காக
இவ்வளவு சிறப்பு மிக்க வானத்தை அல்லாஹ் திறக்கிறான்!
• நபி (ஸல்) அவர்கள் குறிப்பாக துஆ செய்யும் பொழுது கைகளையும், பார்வையும் வானத்தின் பக்கம் உயர்த்தி துஆ செய்து உள்ளார்கள் ஏன் ஸஹாபாக்களுக்கு சில நேரம் உபதேசம் செய்யும் பொழுது கூட வானத்தை பார்த்துவாறு உபதேசம் செய்து உள்ளார்கள்!
• எனவே நாம் வானத்தின் கதவுகள் திறக்கப்படும் நேரம் மற்றும் அமல்களை அறிந்து அதன் மூலம் நாம் அல்லாஹ்விடம் கேட்டு பெரும் மக்களாகவும், அந்த குறிப்பிட்ட நேரத்தில் அமல் செய்ய கூடிய மக்களாக நாம் ஆக வேண்டும்!
• இந்த பதிவில் நாங்கள் வானத்தின் கதவுகள் திறக்கப்படும் நேரம் மற்றும் அமல்கள் பற்றி வரக்கூடிய ஸஹீஹ் மற்றும் ஹசன் தரத்தில் உள்ள ஹதீஸ்களை தொகுத்து கொடுத்து உள்ளோம்!
1) உள்ளத்தில் இக்லாஸுடன் (மனதுய்மை) ஏகதுவத்தை கூறுவது :
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஓர் அடியான் உளத்தூய்மையுடன் லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறினால் அவருக்காக வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன! பெரும்பாவங்களிலிருந்து விலகியிருந்தால் அந்த வார்த்தை அர்ஷை நோக்கிச் செல்கிறது!
(நூல் : சுனன் திர்மிதீ : 3590)
2) அநீதி இழைக்கப்பட்டவரின் பிராத்தனை :
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையை அல்லாஹ் மேகத்திற்கு மேல் உயர்த்தி, அவற்றிற்காக வானத்தின் வாசல்களையும் திறக்கிறான்! (மேலும் அவர்களுக்காக,) “என் கண்ணியத்தின் மீது ஆணையாக! இப்போது இல்லாவிட்டாலும் பிறகாவது நிச்சயம் நான் உங்களுக்கு உதவி செய்வேன்! என்று கூறி உள்ளான்!
(நூல் : சுனன் திர்மிதீ : 3598)
3) ரமலான் மாதம் வந்து விட்டால் :
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1899)
4) சரியான முறையில் உளூ செய்த பின்பு உளூவின் துஆ கூறுவது :
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களில் ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை (ஒளு) செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன! அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 397)
5) தொழுகையின் ஆரம்ப துஆ ஸனாவை ஓதுவது :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம்! அப்போது மக்களில் ஒருவர் "அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா" (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?" என்று கேட்டார்கள்! அப்போது மக்களில் ஒருவர், நான் தான் அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் இதைக் கேட்டு வியப்புற்றேன்! இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன! என்று கூறினார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 1052)
6) பர்ளு தொழுகைக்காக இகமாத் சொல்லப்பட்டு விட்டால் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கடமையான தொழுகைக்கு பாங்கு கூறப்பட்டு விட்டால், சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு, பிரார்த்தனைக்கு பதிலளிக்கப்படுகின்றன! கடமையான தொழுகையின் பாங்கு மற்றும் இகாமத் இடையில் கேட்கப்படும் துஆ ஒரு போதும் நிராகரிக்கப்படுவதில்லை!
(நூல் : முஸ்னது அஹ்மத் : 14730)
7) கடமையான தொழுகை முடிந்த பின்பு அடுத்த தொழுகைக்காக காத்திருப்பது :
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மஃரிப் தொழுகையை நிறைவேற்றினோம்! சிலர் வெளியேறினர், சிலர் தங்கினர். நபியவர்கள் மூச்சுத் திணறலுடன், தம் ஆடையைத் தம் முழங்கால் மேலே பிடித்துக் கொண்டு அவசரமாகத் திரும்பி வந்தார்கள்! நபி (ஸல்) அவர்கள், மகிழ்ச்சி அடைந்து கொள்ளுங்கள்! உமது இறைவன் வானத்திற்கு ஒரு வாயிலைத் திறந்து விட்டான், பின்பு அவன் வானவர்களிடம் பெருமை பேசுகிறான் : என் அடியார்களைப் பாருங்கள்! அவர்கள் ஒரு குறிப்பிட்ட தொழுகையை முடித்துவிட்டு மற்றொன்றிற்காக காத்திருக்கிறார்கள்!
(நூல் : சுனன் இப்னு மாஜா 801)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
சொர்க்கத்தின் கதவுகள் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் திறக்கப்படுகின்றன! அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது! தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமையுள்ள மனிதரைத் தவிர!
அப்போது இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்ளும் வரை இவர்களை விட்டு வையுங்கள்! இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்ளும் வரை இவர்களை விட்டு வையுங்கள்! இவ்விருவரும் சமாதானம் செய்துகொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள் என்று கூறப்படும்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 5013)
9) லுஹர் தொழுகைக்கு முன்பு நான்கு ரக்ஆத் முன் சுன்னத் தொழுவது :
நபி (ஸல்) அவர்கள் லுஹருக்கு முன்பு நான்கு ரக்ஆத் தொழ கூடியவர்களாக இருந்தார்கள்! இதை பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது! அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இந்த நேரம் வானத்தின் கதவுகள் திறக்கப்படும் நேரமாகும்! இந்த நேரத்தில் என்னுடைய அமல்கள் அல்லாஹ்விடம் உயர்த்தப்பட விரும்புகிறேன் என்று பதில் கூறினார்கள்!
(நூல் : சுனன் திர்மிதி : 478 | முஸ்னது அஹ்மத் : 3673)
10) ஒவ்வொரு நாளும் இரவின் கடைசி நேரம் இறைவன் முதல் வானத்திற்கு இறக்கி வருகிறான் :
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்குகிறான்!பின்னர் வானத்தின் கதவுகள் திறக்கப்படும்! பின்னர் அல்லாஹ் தன்னுடைய கைகளை விரித்து, என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன்! யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன்! யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்! இது சூரியன் உதயம் ஆகும் வரை தொடர்கிறது!
(நூல் : முஸ்னது அஹ்மத் : 3673 | ஸஹீஹ் புகாரி : 1145)
11) நல்லோர் உயிரை வானவர்கள் கைப்பற்றி கொண்டு செல்லும் பொழுது :
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இறைவிசுவாசியான அடியான் ஒருவன் உலகத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கையில், (சக்ராத்தின் நேரத்தில்) சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானத்திலிருந்து வானவர்கள் சிலர் அவரிடம் வருவார்கள். இவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து கபன் துணிகளிலிருந்து ஒரு கபன் துணியையும், சுவர்க்கத்தின் நறுமணங்களிலிருந்து நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள்!
அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து, அவரருகில் அமர்வார். அவரை நோக்கி, நல்ல ஆத்மாவே! நீ ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உலகிலிருந்து வெளியேறிவிடு என்று கூறுவார். தோல் பையிலிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விடுவது போன்று (அந்த ஆத்மா உடலில் இருந்து இலகுவாக) வெளியேறி விடும்.
அந்த உயிரை எடுத்ததும் கொஞ்ச நேரம் கூட கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கபனில் (கொண்டு வந்த) மணத்தோடு வைத்து விடுவார்கள். உலகத்தில் இருக்கும் கஸ்தூரி வாசனையை விட மிக மணம் வீசக்கூடியதாக அது இருக்கும்.
(பின்பு அந்த உயிரை அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்) வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது யாருடைய நல்ல உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு உலகில் இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும்.
இவருக்காக முதல் வானத்தை, திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், அவருக்காக முதல் வானம் திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலும் உள்ள மலக்குகள் அடுத்த வானம் வரை (அந்த உயிரை) பின் தொடருவார்கள். இப்படி ஏழு வானம் வரை அதனை எடுத்துச் செல்வர். அப்போது ஏக இறைவன், ஆத்மாவைச் சுமந்து சென்ற வானவர்களை நோக்கி, என் அடியானுடைய செயல்களை ‘இல்லிய்யீனிலே’ (நல்லடியார்களுடைய செயல்களின் பதிவேடுகள் இருக்குமிடத்திலே) பதிந்து விட்டு (விசாரணைக்காக) பூமியிலுள்ள அவருடைய உடலில் (கப்ரில்) அவருடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள் என்று கூறுவான்!
(நூல் : முஸ்னது அஹ்மத் : 18557,18534)
12) நல்லடியார்கள் மரணத்திற்கு வானத்தின் கதவுகள் திறக்கப்படும் :
அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஸஅத் இப்னு முஅத் (ரழி) அவர்கள் மரணத்திற்காக அல்லாஹ்வின் அர்ஷ் குலுங்கியது! வானத்தின் கதவுகள் இவருக்காக திறக்கப்பட்டன! 70,000 வானவர்கள் இவர்களின் ஜனாஸாவிற்காக இறக்கி வந்தார்கள்!
(நூல் : சுனன் நஸயீ : 2055)
@அல்லாஹ் போதுமானவன்


No comments:
Post a Comment