பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

ஹலால் என்றால் என்ன? ஏன் இஸ்லாமியர்கள் ஹலால் செய்யப்பட்ட இறைச்சி உணவை சாப்பிடுகின்றார்கள்?

 


ஹலால் என்றால் என்ன? ஏன் இஸ்லாமியர்கள் ஹலால் செய்யப்பட்ட இறைச்சி உணவை சாப்பிடுகின்றார்கள்?
ஹலால் என்றால் சட்டபூர்வமானது அல்லது அனுமதிக்கப்பட்டது என்று அர்த்தமாகும். அதேபோல் ஹராம் என்றால் சட்டவிரோதமானது அல்லது தடை செய்யப்பட்டது என்று அர்த்தமாகும்.
• இஸ்லாத்தில் ஹலால் / ஹராம் என்பது உணவில் மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது நினைக்கின்றார்கள் என பலரும் ஆனால் ஓர் இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையில் அனைத்திலும் ஹலால் ஹராம் உள்ளது.
• உதாரணத்திற்கு, உண்மை பேசுவது ஹலால், பொய் சொல்வது ஹராம் அதுபோல் தவறான செயல்களான மது அருந்துவது, கொள்ளை அடித்தல். கொலை செய்தல், திருடுதல், மற்றவரை துன்புறுத்தல், தீய வழியில் பொருள் சேர்த்தல் வட்டிக்கு கொடுத்தல், போன்றவையும் ஹராமாகும்.
• அல் குர்ஆன் (இறைவனின் வார்த்தைகள்) மற்றும் ஹதீஸ்கள் (இறை தூதரின் வார்த்தைகள்) இந்த இரண்டை அடிப்படையாக வைத்தே இஸ்லாத்தில் எது அனுமதிக்கப்பட்டவை அல்லது எது தடைசெய்யப்பட்டவை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
• ஹலால் செய்யப்பட்ட இறைச்சியைதான் சாப்பிட வேண்டும் என்று அல் குர்ஆனில் இறைவன் கட்டளையிட்டுள்ளான்.
يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا کُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ کُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ‏
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.
(அல்குர்ஆன் : 2:172)
• ஹலால் ஆன முறையில் அறுப்பது என்பது, ஆடு, மாடு, கோழி ஒட்டகம் போன்ற நாம் உண்ணும் விலங்குகளை வெட்டும் போது அதன் கழுத்துப் பகுதியானது முழுமையான அறுபடாமல், வலியை உணரச் செய்யும் மூளைக்கு செல்லும் நரம்பு வரை அறுப்பதாகும்.
• கழுத்தின் முன்பக்கத்தில் கூர்மையான கத்தியால் அந்த விலங்கின் கழுத்தை அறுத்து விடுவார். அப்போது அந்த விலங்கின் கழுத்திலிருந்து மிக அதிக அளவில் ரத்தம் வெளியேறும். ரத்தம் வெளியேறும் சமயத்தில் அந்த விலங்குகளின் கால்களும், உடலும் துடிதுடிக்கும். சிறிது நேரத்தில் அந்த விலங்கு இறந்து விடும்.
• மேலும் அறுக்கும் போது அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன்! அல்லாஹ் மிகப்பெரியவன்! என்று கூறி அறுப்பார்கள். இதுவே ஹலால் ஆன முறையில் அறுப்பதாகும்.
❤️ இதனால் என்ன நன்மை :
• ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும் போது, கால்நடைகளில் உடலில் உள்ள அனைத்து ரத்தமும் வெளியேற்றப்படும். இதனால் இரத்தத்தின் மூலம் நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படும்.
❤️ ஹலால் முறைப்படி ஒரு பிராணி அறுக்கப்படும் முறை :-
1) அந்த பிராணி அறுப்பதற்கு முன்பு இறந்திருக்க கூடாது, காரணம் அதன் உடலில் அதனுடைய இரத்தம் உறைந்த நிலையில் தேங்கிவிடக்கூடாது.
2) கால்நடைகளை அறுக்க பயன்படும் கத்தி அல்லது வாள் மிகக் கூர்மையானதாக இருக்க வேண்டும். கத்தயை கூர்மை படுத்தும் போது கூட பிராணியின் முன்பு அதனை செய்வது கூடாது.
3) அதை அறுப்பவர் இறைவனின் பெயரை சொல்லி அறுக்க வேண்டும்.
4) அறுக்கும் போது கால்நடைகளின் கழுத்தில் உள்ள மூச்சுக்குழாயும் இரத்தக்குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். இப்படி செய்தால் அந்த பிராணி வலியின்றி உயிரிழக்கும்.
5) அவ்வாறு செய்யும் போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும். மேலும் இப்படி அறுக்கும் போது அதன் முழு ரத்தமும் வெளிப்பட்டு ரத்தத்தின் மூலம் நோய் பரவுதல் தடுக்க படுகிறது.
6) வலி இருக்காது : சாதாரணமாக கால்நடைகளைக் கொல்லும் போது அவைகளுக்கு மிகுந்த வலி ஏற்படும். ஆனால் ஹலால் முறையில் அறுக்கும் போது போது வலியை உணர வைக்கும் நரம்பு முதலில் வெட்டப்படுவதால், அவை வலியை உணர்வதில்லை.
❤️ இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்வதன் நோக்கம் :
நோய் கிருமிகளும் பாக்டீரியாகளும் மற்றும் அலர்ஜி உருவாக காரணமாக அமைவது உடலில் உள்ள இரத்தமே. ஹலால் முறையில் அறுக்கப்படும் கால்நடைகளின் இறைச்சி நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.
இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதால் உடலில் உள்ள சதைப்பாகங்கள் - இரத்தம் இன்றி சுருங்கி விடுவதால் ஏற்படும் மாற்றத்தால் தான் அறுக்கப்பட்ட மிருகங்கள் - துள்ளுவதாகவும் - துடிப்பதாகவும் நமக்குத் தெரிகின்றதேத் தவிர வலியால் அல்ல.
@அல்லாஹ் போதுமானவன் 💞


No comments:

Post a Comment