பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

பிஸ்மில்லாஹ் என்று கூறி ஆரம்பம் செய்வோம்


பிஸ்மில்லாஹ் என்று கூறி ஆரம்பம் செய்வோம் 💞
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதன் பொருள் : அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன் என்பதாகும்!
• ஒவ்வொரு முஸ்லீமின் வாழ்வில் இணைப்பிரியாத ஒன்றாக இந்த வாசகம் உள்ளது! அன்றாடம் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் நாம் இதை கட்டாயம் கூறி இருப்போம்! முக்கியத்துவம் வாய்ந்த இந்த வாசகத்தை பற்றியே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்!
• பிஸ்மில்லாஹ் என்ற வார்த்தை அல்குர்ஆனிலும், ஸஹீஹான பல ஹதீஸ்களிலும் இடம்பெற்றுள்ளது!
• பொதுவாக ஒரு முஸ்லீமின் அன்றாட வாழ்வில் ஆரம்பம் செய்யும் பல செயல்களின் போதும் பிஸ்மில்லாஹ் கூறுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒன்றாகும்!
• இந்த வார்த்தை நம்முடைய நேசத்திற்குரிய நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் வழங்கியது கிடையாது மாறாக இதற்கு முன்பு வாழ்ந்த நபிமார்க்களும் இந்த வார்த்தையை பயன் படுத்தியுள்ளார்கள்!
• உதாரணமாக :
1) நபி நுஹ் (அலை) அவர்கள் சமூகத்தை அல்லாஹ் வெள்ளத்தை கொண்டு அழிக்கும் பொழுது நுஹ் (அலை) அவர்களும், அவர்களை நம்பிக்கை கொண்ட மக்களையும், கால்நடை பிராணிகளையும் ஒரு கப்பலில் ஏற்றி கொண்டு பயணம் செய்தார்கள்! அந்த கப்பல் செல்லவும் நிறுத்தவும் பிஸ்மில்லாஹ் என்ற வார்த்தையே நபி நுஹ் (அலை) அவர்கள் கூறியுள்ளார்கள்!
(சூரத்துல் : ஹூது : 40,41)
2) நபி சுலைமான் (அலை) அவர்கள் ஸபா நாட்டு அரசிக்கு கடிதம் எழுதும் பொழுது அதில் முதலில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்றே எழுதி இருந்தார்கள்!
(சூரத்துல் : அந்நம்லு : 30)
ஷேக் முஹம்மது இப்னு உதைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
• பிஸ்மில்லாஹ் என்பதன் பொருள் : நான் எனது செயல்களைத் தொடங்குகிறேன், அல்லாஹ்வின் உதவியை நாடி, அவனது பெயரில் தொடங்குவதன் மூலம் ஆசீர்வாதத்தை (பராக்கா) தேடுகிறேன்.
• உதாரணமாக நாம் குர்ஆனைப் படிக்கும் முன் பிஸ்மில்லாஹ் கூறுவது, வேலை ஆரம்பம் செய்யும் முன் பிஸ்மில்லாஹ் கூறுவது, எழுதும் முன், வாசிக்கும் முன்பும் பிஸ்மில்லாஹ் கூறுவது, உண்ணும் போதும் பருகும் போதும் பிஸ்மில்லாஹ் கூறுவது என நாம் சொல்லி கொண்டே போகலாம்! நம்முடைய அன்றாட வாழ்வில் செய்யும் அனைத்து செயல்களின் போதும் பிஸ்மில்லாஹ் கூறி ஆரம்பம் செய்வது சிறப்புக்குரிய ஒன்றாகும்!
• பிஸ்மில்லாஹ்வை முற்படுத்துவது இரண்டு வகையான காரணங்கள் உள்ளன!
1) அல்லாஹ்வின் பெயரால் நாம் ஒவ்வொரு செயலையும் ஆரம்பம் செய்வதன் மூலம் அல்லாஹ்வின் அருளான (பரக்கத்) கிடைக்கிறது!
2) நமது ஆரம்பத்தை அல்லாஹ்வின் பெயரால் தொடங்குவதால், அது நம்முடைய செயலை விடவும் அல்லாஹ்வை முற்படுத்தி பிரத்தியேகமான செயலாக ஆகுகிறது!
(நூல் : A sh-Sharh al-Mumti : 1/7)
• நபி (ஸல்) அவர்கள் குறிப்பாக சில இடங்களில் பிஸ்மில்லாஹ் கூறுவதை வலியுறுத்தி உள்ளார்கள்! அவற்றை அல்லாஹ்வின் உதவிவினால் எங்கள் சக்திக்கு இயன்ற அளவுக்கு தேடி இதில் கொடுத்து உள்ளோம்!
1) உணவுக்காக பிராணியை அறுக்கும் பொழுது பிஸ்மில்லாஹ் கூறுவது கட்டாயம்!
(அல்குர்ஆன் : 6 : 121) (நூல் : ஸஹீஹ் புகாரி : 985)
2) உளூ செய்ய ஆரம்பம் செய்யும் முன் பிஸ்மில்லாஹ் கூறுவது!
(நூல் : சுனன் நஸயீ : 71)
• நபி (ஸல்) அவர்கள் உளூ செய்யும் முன் பிஸ்மில்லாஹ் கூறியுள்ளார்கள் என்று வரும் ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை துண்டிக்கப்பட்டு உள்ளது! இது நிராகரிக்கப்பட்ட ஹதீஸ் ஆகும்! இதை இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்!
• ஆனால் பொதுவாக ஒரு செயலை ஆரம்பம் செய்யும் முன் பிஸ்மில்லாஹ் கூறுவது மார்க்கம் நமக்கு வலியுறுத்தி உள்ளது! அதன் அடிப்படையில் நாம் பிஸ்மில்லாஹ் கூறியே உளூ செய்ய ஆரம்பம் செய்ய வேண்டும்! இதற்கு ஆதாரமாக நஸயீல் ஸஹீஹான ஹதீஸ் உள்ளது!
3) இரவு நேரத்தில் வீட்டின் கதவு / அறையின் கதவுகளை மூடும் பொழுது பிஸ்மில்லாஹ் கூறி மூட வேண்டும்! ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 5623)
4) தண்ணீர் உள்ள பாத்திரங்களை மூடும் பொழுது பிஸ்மில்லாஹ் கூறி மூட வேண்டும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 5623)
5) பாத்திரங்களை மூடும் பொழுது பிஸ்மில்லாஹ் கூறி மூட வேண்டும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 5623)
6) படுக்கை விரிப்பை தட்டும் பொழுது பிஸ்மில்லாஹ் கூறவேண்டும்! ஏனெனில், நீங்கள் இல்லாதபோது உங்களது விரிப்பில் என்ன (விஷஜந்து) புகுந்துகொண்டது என்பது உங்களுக்குத் தெரியாது!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 5257)
7) வீட்டிற்குள் நுழையும் பொழுது பிஸ்மில்லாஹ் கூறவேண்டும்! அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை! உண்ண உணவுமில்லை என்று கூறுகிறான்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 4106)
😎 உணவு உண்ணும் பொழுது பிஸ்மில்லாஹ் கூறவேண்டும்! அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை! உண்ண உணவுமில்லை என்று கூறுகிறான்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 4106)
9) நீர் அருந்தும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும்!
(நூல் : சுனன் திர்மிதி : 1885)
10) உணவு உண்ணும் பொழுது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி..... என்று ஆரம்பம் ஆகும் துஆவை ஓதி கொள்ள வேண்டும்!
(நூல் : சுனன் திர்மிதி : 1858)
11) வாகனத்தில் ஏறும் பொழுது பிஸ்மில்லாஹ் கூறவேண்டும்!
(நூல் : சுனன் திர்மிதி : 3446)
12) வாகனத்தின் மூலம் நமக்கு ஏதேனும் சிரமம் ஏற்படும் பொழுது பிஸ்மில்லாஹ் கூறவேண்டும்!
(நூல் : சுனன் அபூதாவூத் : 4982)
13) கணவன் மனைவி இல்லற உறவில் ஈடுப்படும் போது பிஸ்மில்லாஹ் கூறவேண்டும்! (இதற்கு என்று தனி துஆ உள்ளது அந்த துஆவின் ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் என்கிற வாசகம் இடம்பெற்றுக்கும்)
(நூல் : ஸஹீஹ் புகாரி : 6388)
14) வேட்டையாடும் பொழுது பிஸ்மில்லாஹ் கூறவேண்டும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 5478)
15) பயிற்சி அளிக்கப்பட்ட நாயை வேட்டைக்கு அனுப்பும் பொழுது பிஸ்மில்லாஹ் கூறவேண்டும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 5478)
• நாய் இஸ்லாத்தில் வளர்க்க அனுமதி கிடையாது இருவரை தவிர, 1) பண்ணை (அ) தோட்டம் வைத்து உள்ள நபர் காவலுக்கு வைக்கலாம், 2) வேட்டைக்கு பயன் படுத்த வைத்து கொள்ளலாம்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 3210)
16) ஜனாஸாவை கப்ரில் வைக்கும் பொழுது பிஸ்மில்லாஹ் கூறவேண்டும்!
(நூல் : சுனன் திர்மிதி : 1046)
17) வலி உள்ள இடத்தில் கை வைத்து துஆ ஓதும் பொழுது பிஸ்மில்லாஹ் கூறவேண்டும்! (இதற்கு என்று தனி துஆ உள்ளது அந்த துஆவின் ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் என்கிற வாசகம் இடம்பெற்றுக்கும்)
(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 4430)
18) பிறருக்கு ஓதி பார்க்கும் பொழுது பிஸ்மில்லாஹ் கூறவேண்டும்! (இதற்கு என்று தனி துஆ உள்ளது அந்த துஆவின் ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் என்கிற வாசகம் இடம்பெற்றுக்கும்)
(நூல் : ஸஹீஹ் புகாரி : 5745)
19) வீட்டை விட்டு வெளியேறும் பொழுது பிஸ்மில்லாஹ் கூறவேண்டும்!
(நூல் : சுனன் அபூதாவூத் : 5095)
20) தூங்கும் போது பிஸ்மில்லாஹ் கூறவேண்டும்! (இதற்கு என்று தனி துஆ உள்ளது அந்த துஆவின் ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் என்கிற வாசகம் இடம்பெற்றுக்கும்)
(நூல் : ஸஹீஹ் புகாரி : 6324)
21) அல்குர்ஆன் ஓத ஆரம்பிக்கும் போது அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தானிர் ரஜிம், பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று கூறவேண்டும்!
(நூல் : சுனன் அபூதாவூத் : 784)
22) எழுத ஆரம்பிக்கும் பொழுது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று முழுமையாக கூறவேண்டும்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 3756)
23) தொழுகையில் ஆரம்ப துஆவிற்கு பிறகு அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தானிர் ரஜிம், பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று கூறவேண்டும்!
(நூல் : முஸ்னது அஹ்மத் : 12868)
24) ஆடைகளை கழற்றும் பொழுது பிஸ்மில்லாஹ் கூறவேண்டும் இதனால் ஜின்களால் நம்முடைய உடலை பார்க்க முடியாது!
(நூல் : ஸஹீஹ் அல் ஜாமி : 3610)
25) கழிவறைக்கு செல்வதற்கு முன்பு பிஸ்மில்லாஹ் கூறவேண்டும்! இதனால் ஜின்களால் நம்முடைய உடலை பார்க்க முடியாது!
(நூல் : ஸஹீஹ் அல் ஜாமி : 3611)
26) காலை நேரத்தை அடைந்தால் பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு..... என்று ஆரம்பம் ஆகும் துஆவை ஓதி கொள்வது!
(நூல் : சுனன் திர்மிதி : 3388)
27) ஷைத்தான் நாசமாகி விட்டான் என்று கூற கூடாது! இதனால் ஷைத்தான் தன்னுடைய உள்ளத்தில் தன்னை மிகப் பெரிதாக நினைத்து “அவனை நான் என்னுடைய வலிமையால் வீழ்த்தி விட்டேன்” என்று கூறுகிறான்! நாம் பிஸ்மில்லாஹ் என்று கூறினால் அவனே அவனிடத்தில் இழிவடைந்து ஈயை விட மிகச் சிறுமையடைந்தவனாக ஆகிவிடுவான்!
(நூல் : முஸ்னது அஹ்மத் : 20591)
@அல்லாஹ் போதுமானவன் 💞
No photo description available.
All reactions:
30


 

No comments:

Post a Comment