பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

நோன்பை விட சலுகை பெற்றவர்கள் பற்றி அறிந்து கொள்ளுவோம்


நோன்பை விட சலுகை பெற்றவர்கள் பற்றி அறிந்து கொள்ளுவோம்
💞இஸ்லாத்தில் அடிப்படை ஐந்து மிக முக்கியமான கடமைகளில் நோன்பும் ஒன்றாகும்! ஏழை செல்வந்தர்கள் என அனைவரின் மீதும் ரமலான் நோன்பு கட்டாய கடமை ஆகும்!
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது! (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்!
(சூரத்துல் : அல் பகரா : 183)
• ரமலான் நோன்பை மார்க்கம் அனுமதித்த காரணம் இல்லாமல் விடுவது பெரும் பாவமாகும்!
• நோன்பை வைக்க அனைவருக்கும் விருப்பம் இருந்தாலும் சிலருக்கு உடல் சார்ந்த நோய்கள் அல்லது சில காரணங்களால் நோன்பு வைக்க முடியாமல் போய்விடும்!
• இஸ்லாம் மிகவும் எளிதான மார்க்கம் ஆகும் மேலும் அல்லாஹ் யாரையும் அதிகம் சிரமம் படுத்த மாட்டான்! எனவே அல்லாஹ் நோன்பை விட சிலருக்கு சலுகை அளித்து உள்ளான்! இவர்களில் சிலர் நோன்பை விட்டு விட்டு களா செய்ய வேண்டும் இன்னும் சிலர் நோன்பை விட்டு விட்டு தர்மம் செய்தால் போதுமானது ஆகும்! இதை பற்றி விரிவாக பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ்!
💟 நோன்பை விட சலுகை பெற்றவர்கள் :
1) ஹைலு & நிபாஸ் உள்ள பெண்கள் :
• பெண்களுக்கு ஹைலு அல்லது நிபாஸ் ஏற்பட்டால் நோன்பு வைக்க கூடாது! நோன்பு வைத்த நிலையில் ஹைலு அல்லது நிபாஸ் ஏற்பட்டு விட்டால் நோன்பு முறிந்து விடும்! அது பகலின் ஆரம்பமாக இருந்தாலும் சரி! சூரியன் மறைவதற்கு ஒரு நிமிடம் முன்னால் ஏற்பட்டாலும் சரி!
• பெண்களுக்கு சலுகை உண்டு அதனால் ஹைலு அல்லது நிபாஸ் முடியும் வரை நோன்பை விட்டு விட்டு பின்பு விட்ட நோன்புகளை கணக்கு செய்து பின்னால் வைக்க வேண்டும்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 560)
💙 பரிகாரம் : பரிகாரம் எதுவும் செய்ய வேண்டியது கிடையாது! காரணம் அல்லாஹ் தான் ஹைலு அல்லது & நிபாஸ் ஏற்படுத்தினான்! நாம் விட்ட நோன்பை களா செய்தால் அல்லாஹ் அதற்கான கூலியை குறைவு இல்லாமல் அல்லாஹ் நிச்சயமாக கொடுப்பான்!
2) இஸ்திஹாலா பெண்கள் :
• இஸ்திஹாலா (தொடர் உதிரி போக்கு) என்பது ஒரு நோயாகும்! உதாரணமாக : ஒரு பெண்ணுக்கு வழமையாக 3 நாட்கள் ஹைலு ஏற்படும் ஆனால் சில நாட்களில் 3 நாட்களை தாண்டியும் உதிரி போக்கு ஏற்படும் இதை தான் இஸ்திஹாலா என்பார்கள்!
• இஸ்திஹாலா ஏற்பட்டால் நோன்பு முறியாது! இஸ்திஹாலா உள்ள பெண் நோன்பை வைக்க வேண்டும்!
• இது போன்ற நிலையில் உள்ள பெண் வழமையாக ஏற்படும் ஹைலு நாட்களை கணக்கு செய்து ஹைலு முடிந்த பின்பு குளிப்பு கடமை நிறைவேற்றி அமல் செய்ய ஆரம்பம் செய்ய வேண்டும்! இஸ்திஹாலா ஏற்பட்டால் மர்ம உறுப்பை சுத்தம் செய்து கொண்டு ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளு செய்து கொண்டால் போதுமானது ஆகும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 306)
• நோன்பு வைத்து கொண்டு இருக்கும் நிலையில் இஸ்திஹாலா ஏற்பட்டால் சுத்தம் செய்து கொண்டு தொழுகைக்கு மட்டும் உளு செய்து கொண்டால் போதுமானது ஆகும் இதனால் நோன்பு முறியாது!
• ஆனால் சிலருக்கு இந்த இஸ்திஹாலா அதிகம் ஆகி அதிகம் தொடர் உதிரி போக்கு ஏற்பட்டு மிகவும் உடல் பலகீனம் அடைந்து இன்னும் சிலருக்கு கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டு விடும் இப்படி பட்ட பெண்கள் நோயாளிகளாக கருத்தப்படுவார்கள்! எனவே இவர்கள் நோன்பை விட அனுமதி உண்டு! உடல் நிலை சரியாகி விட்டால் விட்ட நோன்புகளை கணக்கு செய்து பின்னால் களா செய்ய வேண்டும்!
💙 பரிகாரம் : பரிகாரம் எதுவும் செய்ய வேண்டியது கிடையாது!
3) கர்ப்பிணி பெண்கள் & பாலூட்டும் தாய்மார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பாலூட்டும் பெண்ணுக்கும் கர்ப்பிணிக்கும் நோன்பு நோற்காமல் இருக்க சலுகை வழங்கியுள்ளான்!
(நூல் : சுனன் நஸாயீ : 2277)
❤️ கர்ப்பிணி பெண் : கர்ப்பிணி பெண்கள் நோன்பு வைப்பதால் தனக்கோ அல்லது தனது வயிற்றில் உள்ள பிள்ளைக்கோ ஏதேனும் தீங்கு ஏற்படும் என்று அஞ்சினால் நோன்பு விட்டு விடலாம்!
• விட்ட நோன்புகளை கணக்கு செய்து பின்னால் வரும் காலத்தில் வைக்க வேண்டும்!
❤️ பாலூட்டும் தாய்மார்கள் : நோன்பு வைப்பதால் தனக்கு அல்லது தனது பிள்ளைக்கு பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சினால் நோன்பை விட்டு விடலாம்! விட்ட நோன்புகளை கணக்கு செய்து பின்னால் வரும் காலத்தில் நோன்பு வைக்க வேண்டும்!
💙 பரிகாரம் : பரிகாரம் எதுவும் செய்யவேண்டியது கிடையாது!
4) நோயாளிகள் :
• நோன்பு நாட்களில் ஒருவருக்கு நோய் ஏற்படுகிறது அது காய்ச்சலோ, அல்லது வயிற்றுக் கோளாறுகளோ அல்லது வேறு ஏதோ ஒரு நோய் ஏற்படுகிறது!
• இந்த நோயின் தாக்கத்தால் மிகவும் அவதிப்படுகிறார் அல்லது நோன்பு வைத்தால் நோயின் பாதிப்பு இன்னும் அதிகமாகும் என்று அஞ்சம் ஏற்படுகிறது இவர்கள் நோன்பை விட அனுமதி உண்டு!
• இவர்கள் உடல் குணம் அடைந்த பின்பு மற்ற நாட்களில் விட்ட நோன்புகளை கணக்கு செய்து நோற்க்க வேண்டும்!
(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்!
(சூரத்துல் : அல் பகரா : 184)
• சிலருக்கு உடல் நிலை சரி இல்லை என்றாலும் அவர்கள் நோன்பு வைப்பதால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது! என்ற நிலை இருந்தால் அவர்கள் நோன்பை வைக்க வேண்டும்!
• எப்போது நோன்பை வைத்தால் உடல் நிலை மோசமாக ஆகி விடும் என்று அஞ்சம் ஏற்படுமோ அப்போது அவர்கள் நோன்பை விடலாம்!
• இன்னும் சிலர் சிறிய தலைவலி மூட்டு வலி அல்லது நோன்பு வைத்தால் ஒல்லி ஆகிவிடுவோம் போன்ற அற்ப காரணக்களுக்காக நோன்பை விட்டு விடுவார்கள் ஆனால் இவ்வாறு நோன்பை விடுவது குற்றம் ஆகும்!
💙 பரிகாரம் : எதுவும் செய்ய வேண்டியது கிடையாது!
5) முதியவர்கள் :
• முதுமை ஒரு தொடர் நோயாகும்! முதியவர்கள் மீண்டும் இளமைக்கு திரும்ப முடியாது என்பதால் நோன்பு வைப்பதை கடினமாக கருதும் முதியவர்கள் நோன்பு வைக்க வேண்டிய அவசியமில்லை!
• நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் இருப்பதால் அவர்களின் உடல் நிலையை பாதிக்கும் என்பதால் இவர்கள் நோன்பை விட அனுமதி பெறுகிறார்கள்!
எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்! எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).
(சூரத்துல் : அல் பகரா : 184)
💙 பரிகாரம் :
ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 4505)
• ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவு அளிக்க வேண்டும்! அதை விட அதிகமாவும் கொடுக்கலாம்! அவர்களால் கொடுக்கும் அளவுக்கு சக்தி இல்லை என்றால் அவர்கள் பிள்ளைகள் கொடுக்க வேண்டும்!
• உதாரணமாக : 30 நாட்கள் நோன்பு வைக்க வில்லை என்றால் 30 நாட்களில் தினமும் ஒரு ஏழைக்கு உணவு அளிக்க வேண்டும் அல்லது ஒரே ஏழைக்கு 30 நாட்களும் உணவு அளிக்கலாம்!
6) பயணி :
• நீண்ட தூரம் பயணம் செய்ய கூடியவர்களுக்கு நோன்பை விட சலுகை உண்டு!
(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்!
(சூரத்துல் : அல் பகரா : 184)
• இப்போது இருக்கும் பயணம் செய்யும் வசதியினால் எளிமையாக சென்று வந்து விடலாம்! அதனால் உங்களால் நோன்பு வைத்து கொண்டு பயணம் செய்ய முடியும் என்றால் பயணம் செய்யுங்கள்!
• நோன்பு வைத்து பயணம் செய்வது கடினம், பயணம் செய்ய முடியாது என்றால் நோன்பை விட்டு விடலாம்!
• நோன்பு வைத்து கொண்டு பயணம் செய்யும் பொழுது ஊரை தாண்டிய பின்பு நோன்பு வைப்பது மிகவும் சிரமம் ஆக இருந்தால் பயணி நோன்பை விட்டு விடலாம் பின்பு களா செய்து கொள்ளலாம்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 2045)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் :
ஹம்ஸா இப்னு அம்ர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம், 'பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?' என்று கேட்டார். அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், 'நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்; நீ விரும்பினால் விட்டு விடு' என்றார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1943)
• ஆனால் இன்று பலர் சுற்றுலா செல்ல பெருநாள் ஆடை எடுக்க வெளியே செல்ல வேண்டும் என்பதற்காக நோன்பை விட்டு விடுகிறார்கள் இவ்வாறு விடுவது குற்றம் ஆகும்! பயணம் காரணமாக நோன்பை விட்டவர்கள் மீண்டும் விட்ட நோன்புகளை பின் வரும் காலத்தில் வைக்க வேண்டும்!
💙 பரிகாரம் : எதுவும் செய்ய வேண்டியது கிடையாது!
• பயணத்தின் காரணமாக நோன்பை விட்டவர்களை குறை கூற கூடாது!
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள் :
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணத்தில் செல்வோம். நோன்பு நோற்றவரை நோற்காதவரும் நேற்காதவரை நோற்றவரும் குறை கூறமாட்டார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1947)
@அல்லாஹ் போதுமானவன்


 

No comments:

Post a Comment