பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் (ரழி) வாழ்கை வரலாறு சுருக்கம் 💞


சொர்க்கவாசி, உம்மத்தின் நம்பிக்கைக்குரியவர் – அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் (ரழி) வாழ்கை வரலாறு சுருக்கம் 💞

• அபூ உபைதா (ரழி) அவர்களின் முழுப்பெயர் ஆமிர் இப்னு அப்தில்லாஹ் இப்னு அல்-ஜர்ராஹ் (ரழி). மக்காவில் பிறந்த இவர் இஸ்லாம் மக்காவில் பரவிய ஆரம்ப காலங்களிலயே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களில் இவரும் ஒருவர். 

• இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு மக்காவின் குரைஷிகளில் பிரபலமானவராகவும், குரைஷிகளிலேயே மிகவும் மென்மையான, நன்னடத்தையுள்ள, நல்ல பழக்கவழக்கங்கள் உள்ள மனிதர்களில் அபூபக்கர் (ரழி) மற்றும் உஸ்மான் (ரழி) அவர்களுடன் ஒப்பிடும் அளவுக்கு மிகச் சிறந்த மனிதராகத் திகழ்ந்தார்கள். இவர்கள் மக்காவில் வியாபாரம் செய்து வந்தார்கள்.

• நபி (ஸல்) அவர்கள் நாவினால் உலகத்திலேயே, மறுமையில் இவர்களுக்கு சுவர்க்கம் கிடைக்கும் என்று 10 ஸஹாபாக்களை குறிப்பிட்டார்கள் அதில் இவரும் ஒருவர்.

(நூல் : சுனன் திர்மிதி : 3747)

• மக்காவில் காஃபிர்களின் தொல்லை அதிகம் ஆனா போது அபிசீனியாவிற்க்கு (எத்தியோப்பியா) ஹிஜ்ரத் செய்தவர்களில் இவரும் ஒருவர். நபி (ஸல்) அவர்கள் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த பொழுது இவரும் மதினாவிற்கு வந்து சேர்ந்து விட்டார்.

• பத்ருப் போரில் தம் தந்தை அப்துல்லாஹ்வை எதிர்த்துப் போரிட்டார்கள் ஆரம்பத்தில் ஒதுக்கி சென்றாலும் அவரின் தந்தை வேண்டுமென்றே சண்டைக்கு வர பின்பு இவரும் சண்டையிட்டு அவரை வென்றார். இதை குறிக்கும் வண்ணமாக ஸூரத்துல் முஜாதலாவில் 58 : 22 யில் அல்லாஹ் வசனத்தை அருளினான்.

• உஹத் போர் கடுமையாக ஆன போது பல முஸ்லீம்கள் சிதறி ஓட ஆரம்பித்து விட்டார்கள், சூழ்நிலை எவ்வாறு இருந்தாலும் அதில் உறுதியுடன் நின்று சில ஸஹாபாக்கள் போரிட்டார்கள் அதில் அபூ உபைதா (ரழி) அவரும் ஒருவர். 

• மேலும் இந்த போரின் போது நபி (ஸல்) அவர்களுக்கு காயம் ஏற்பட்டு இருந்தது. அவர்களின் உடலில் பாய்ந்திருந்த இரும்புத் துண்டுகளை வலி இல்லாமல் எடுக்க தம் பற்களால் கடித்து இழுத்ததில் இவர்களின் இரண்டு பற்கள் விழுந்தன. 

(நூல் : இப்னு ஹிப்பான்)

• அபூ உபைதா (ரழி) அவர்கள் சிறந்த போர் வீரராகவும், படைத்தளபதியாகவும் விளங்கினார்கள். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடைபெற்ற அனைத்தி போர்களிலும், மேலும் அபூபக்கர் சித்திக் (ரழி) அவர்கள் ஆட்சி காலத்திலும், உமர் (ரழி) அவர்கள் ஆட்சி காலத்தில் நடைபெற்ற அனைத்து போர்களிலும் வீரராகவும், படை தளபதியாகவும் கலந்து கொண்டார்கள்.

• ஒரு முறை ஒரு படைக்கு இவரை தளபதியாக்கி இவருடன் 300 வீரர்களை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். நீண்ட நாட்கள் தங்க நேர்ந்த்தால் அவர்களிடம் இருந்த உணவும் தீர்த்து போக இழை தழைகளை சாப்பிட்டு வந்தார்கள். அதன் பின்பு கடலோரமாக இவர்கள் சென்ற போது அல்லாஹ் இவர்களுக்கு ஒரு பெரிய மீனை வழங்கினான். இதை இவர்கள் 30 நாட்கள் வரை வைத்து சாப்பிட்டார்கள். மீதம் உள்ளதை பயணத்திற்கும் எடுத்து வைத்து கொண்டார்கள்.

(நூல்: ஸஹீஹ் முஸ்லீம் : 3915)

• அபூ உபைதா (ரழி) அவர்கள் பொதுவாகவே வல்லமை, ஞானம், நேர்மை, தியாகம், மற்றும் கடமையுணர்வு ஆகியவற்றின் உச்சக்கோடாக திகழ்ந்தார்கள். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் அவரை இவ்வாறு குறிப்பிட்டார்கள் :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே! நம்முடைய நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் அவர்கள் தாம்.

(நூல் : ஸஹீஹ் புகாரி : 3744)

• நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்கு பின்பு அடுத்த கலீபா யார் என்று மக்களிடையே குழப்பம் ஏற்பட்ட போது அபூபக்கர் (ரழி) அவர்கள், உமர் (ரழி) மற்றும் அபூ உபைதா (ரழி) இவர்களில் இருவரில் ஒருவரை அடுத்த கலீபாவா தேர்வு செய்யுங்கள் என்று கூறினார்கள். 

(நூல் : ஸஹீஹ் புகாரி : 3668)

• இவர் இந்த அளவுக்கு நம்பிக்கைக்கு உரியவர் என்பதால் தான் நபி (ஸல்) இவரை ஜகாத் வசூலிக்கவும், இரு சாரருக்கு இடையே தீர்ப்பு வழங்கவும், மக்களுக்கு ஆலோசனை கொடுக்கவும் நியமித்திருந்தார்கள்.

• ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் நஜ்ரான் வாசிகளிடம், 'நம்பகத்தன்மையில் முறையோடு நடந்து கொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை உங்களுக்கு நிச்சயம் நான் அனுப்புவேன்' என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் அபூ உபைதா (ரழி) அவர்களை அனுப்பி வைத்தார்கள். 

(நூல் : ஸஹீஹ் புகாரி : 3745)

ஆயிஷா (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பிரதிநிதியாக ஒருவரை ஆக்குவதாயிருந்தால் யாரை ஆக்கியிருப்பார்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அபூபக்ர் (ரலி) அவர்களை (ஆக்கியிருப்பார்கள்)" என்று பதிலளித்தார்கள். "அபூபக்ருக்குப் பிறகு யாரை?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "உமர் (ரலி) அவர்களை" என்று பதிலளித்தார்கள். "உமருக்குப் பிறகு யாரை?" என்று கேட்கப் பட்டபோது, "ஆபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை" என்று கூறிவிட்டு அத்தோடு நிறுத்திக் கொண்டார்கள்.

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 4755)

• அபூ உபைதா (ரழி) அவர்கள் மிகப் பிரபலமான போர்களான பத்ர், உஹத், கந்தக், பனூ குரைளா மற்றும் சலாசல், திமிஸ்க், ஃபஹல், ஹமஸ், யர்முக் ஆகிய போர்களிலும் பங்கெடுத்துக் கொண்ட மாவீரராகவும் அபூ உபைதா (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். 

• இன்னும் ஹுதைபிய்யா உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்களில் ஒருவராகவும், ஹஜ்ஜத்துல் விதாவின் பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜில் கலந்து கொண்ட நபித்தோழர்களில் ஒருவராகவும் இருந்தார்கள்.

• அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), அபூ உபைதா (ரழி) ஆகியோரே நபி (ஸல்) அவர்களின் நெருங்கிய ஆலோசகர்களாக இருந்தனர். நபி (ஸல்) அவர்களுக்கு உளூச் செய்யத் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கும் வழக்கத்தைப் பெற்றிருந்த அபூ உபைதா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள்
உளூச் செய்து எஞ்சிய தண்ணீரைத் தாம் உளூச் செய்யப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

• இவர்கள் உமர் (ரழி) அவர்கள் ஆட்சி காலத்தில் சிரியா,டமாஸ்கஸ் ஆகிய பகுதிகளை போர் செய்து வெற்றி கொண்டார்கள் பின்பு சிரியாவிலயே ஆளுனராக இருந்தார்கள். 

• டமாஸ்கஸ் நகரத்து மக்கள் நகரின் சாவியை உமர் (ரழி) அவர்களிடம் தான் ஒப்படைப்போம் என்று கூற, அபூ உபைதா (ரழி) அவர்கள் கடிதம் எழுதி வருமாறு கூறினார்கள். உமர் (ரழி) அவர்கள் வந்த போது பல முஸ்லீம் மக்கள் செல்வ செழிப்பில் இருப்பதை கண்டு கவலையுற்றார்கள்.

• பின்பு, அபூ உபைதா (ரழி) அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது, சிறிய வீடு, வீட்டின் உள்ளே ஒரு சில மண்பானைகள் தவிர வேறு ஒன்றும் இல்லை. இதை பார்த்த உமர் (ரழி) அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். இந்த உலகம் எங்கள் எல்லோரையும் மாற்றி விட்டது, அபூ உபைதா (ரழி) உங்களை தவிர என்று கூறினார்கள்.

• சிறிது காலத்திற்கு பின்பு சிரியாவில் தாவூன் அம்வாஸ் (ஒரு கடுமையான பிளேக் நோய்) பரவியது இதில் இவர்களின் படை வீரர்கள் பல ஆயிரம் ஸஹாபாக்கள் மரணித்தார்கள். அபூ உதைபா (ரழி) அவர்களுக்கும் இந்த நோய் பரவியது. இதை கேள்விப்பட்ட உமர் (ரழி) அவர்கள் அவரை மதினாவிற்கு அழைக்க தன்னுடைய மக்களை இந்த நிலைமையில் விட்டு வர மாட்டேன் என்று கூறி பின்பு அதே நோய் அவரை பாதித்து மரணமும் அடைந்தார்கள்.

• இறப்பதற்கு முன், அவர் தன் மக்களிடம் பின்வருமாறு கூறினார்கள் :

நான் உங்களை எச்சரிக்கிறேன்! பாவங்களில் இருந்து அல்லாஹ்விடம் தஞ்சம் புகுங்கள்! இறைவன் மீது நம்பிக்கை வைத்து இருங்கள். எப்போது இறப்பது என்றோ, எங்கே இறப்பது என்றோ நமக்குத் தெரியாது. ஆனால் நம்முடைய செயல்களே இறைவனிடம் எங்களை உயர்த்தும்! இவ்வாறு கூறிய பின்பு, அவர் மரணமடைந்தார் (அல்லாஹ் அவரை ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக!)

• நபி (ஸல்) அவர்கள் அவரைப் பற்றி கூறிய வார்த்தைகள், நாளைய நாள் வரை ஒவ்வொரு நேர்மையான முஸ்லிமின் மனதிலும் ஒலிக்க வேண்டியதாகும் : உம்மத்தின் நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் (ரழி) தாமே!

@அல்லாஹ் போதுமானவன் 💞

No comments:

Post a Comment