பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

இஸ்லாத்தில் ஷவ்வால் ஆறு நோன்பு பற்றி அறிந்து கொள்ளுவோம்


இஸ்லாத்தில் ஷவ்வால் ஆறு நோன்பு பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞
ரமலான் நோன்பிற்கு பிறகு சிறந்த நோன்பு ஷவ்வால் 6 நோன்பு ஆகும்!
• தொழுகைகளில் முன் பின் சுன்னத் இருப்பது போன்று நோன்பிற்கும் சுன்னத் மற்றும் நபில் நோன்புகள் உள்ளன!
• ஷவ்வால் 6 நோன்பிற்கும் அதிக சிறப்பு நன்மைகளும் உண்டு நாம் இயன்ற அளவுக்கு 6 நோன்பை வைக்க முயற்சி செய்ய வேண்டும்!
💟 ஷவ்வால் 6 நோன்பு :
• இந்த நோன்பிற்கு என்று தனிப்பட்ட வழிமுறைகள் அல்லது சட்டம் எதுவும் கிடையாது நாம் வழமையாக நோன்பு வைப்பது போன்று தான்!
• ஸஹர் மட்டும் இஃப்த்தார் நாம் எப்படி செய்தோமோ ரமலானில் அதே தான் இந்த ஷவ்வால் நோன்பிற்கும் பின் பற்ற வேண்டும்!
• ரமலான் காலங்களில் ஒரு நோன்பாளி என்ன என்ன செய்ய வேண்டும் என்ன என்ன செய்ய கூடாதோ அதே தான் இந்த நோன்பிற்கும் பின் பற்ற வேண்டும்!
• ஷவ்வால் நோன்பின் நிய்யத் என்று குறிப்பிட்ட சொல் அல்லது துஆ எதுவும் கிடையாது சுன்னத் நோன்பு வைக்கிறேன் என்ற எண்ணம் உள்ளத்தில் இருந்தால் போதும்!
💟 ஷவ்வால் நோன்பு எப்போது வைக்க வேண்டும் :
• ஷவ்வால் 2 யில் இருந்து அந்த மாதம் முடிவதற்குள் இதற்கு இடைபட்ட நாட்களில் நோன்பு வைக்க வேண்டும்!
(ஃபதாவா : அல் லஜ்னத்து தாயிமா : 10 / 391)
💟 ஷவ்வால் ஆறு நோன்பை தொடர்ந்து வைக்க வேண்டுமா? அல்லது விட்டு விட்டு வைக்கலாமா?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2159)
• மேலே உள்ள ஹதீஸ் விளக்கம் : இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
ஈத் பெருநாளை தொடர்ந்து ஆறு நோன்பை நாம் தொடர்ச்சியாகவும் வைக்கலாம்! அல்லது 6 நோன்பை நாம் பிரித்து ஷவ்வால் ஆரம்பம் முதல் இறுதி வரை பிரித்து விட்டு விட்டும் வைக்கலாம்!
(நூல் : ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம்)
💟 ரமளானின் களா நோன்பை முதலில் வைக்க வேண்டுமா? அல்லது ஷவ்வாலின் ஆறு நோன்பை முதலில் வைக்க வேண்டுமா?
1) நாம் முதலில் ஷவ்வால் 6 நோன்பை தான் வைக்க வேண்டும் அதற்கு பின்பு நாம் ரமலானில் விட்ட களா நோன்புகளை வைக்க வேண்டும்!
• காரணம் : ரமளானில் விட்ட நோன்பை களா செய்வதற்கு கால வரம்பு எதுவும் கிடையாது! ஆனால் ஷவ்வால் 6 நோன்பை நோற்க்க ஷவ்வால் ஒரு மாதம் மட்டுமே அவகாசம் உள்ளது!
(இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) : ஃபத்ஹுல் பாரி : 4 / 545)
2) ஒருவருக்கு நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளது என்றால் அவர் விருப்பம் பட்டால் முதலில் களா நோன்புகளை வைத்து கொள்ளலாம் அதன் பின்பு கூட ஷவ்வால் உடைய 6 நோன்புகளை வைத்து கொள்ளலாம் இதுவும் சிறந்தது ஆகும்!
• அல்லது முதலில் ஷவ்வால் நோன்பை விட்டு பின்பு கூட களா நோன்புகளை வைத்து கொள்ளலாம்!
3) ஆயிஷா (ரழி) அவர்கள் களா நோன்பை ஷபான் மாதம் வரை தாமதம் செய்து உள்ளார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1950)
• இதற்கு இடைப்பட்ட காலங்களில் ஷவ்வால் 6 நோன்பு - அரபாஃ நோன்பு - ஆஷுரா நோன்பு போன்ற சுன்னத் ஆன நோன்புகளும் வந்து இருக்கும் ஆயிஷா (ரழி) அவர்கள் இவைகளை எல்லாம் விட்டு இருக்க மாட்டார்கள்!
• எனவே நாம் களா நோன்பு பிற்படுத்தி விட்டு ஷவ்வால் உடைய 6 நோன்பை வைத்து கொள்ளலாம்!
• நம்முடைய உடல் நிலை சூழ்நிலை இவைகளுக்கு ஏற்றால் போல் களா நோன்பை வைத்து கொள்ளலாம் அதே போன்று ஷவ்வால் உடைய 6 நோன்பையும் ஷவ்வால் உடைய மாதம் முடிவதற்குள் தொடர்ச்சியாக அல்லது விட்டு விட்டு வைத்து கொள்ளலாம்! நமது சூழ்நிலைக்கு ஏற்றால் போன்று!
💟 ரமலான் நோன்பை முழுமையாக வைத்தவர்கள் தான் ஷவ்வால் நோன்பை வைக்க வேண்டுமா?
• ரமலான் நோன்பை முழுமையாக வைத்தவர்கள் தான் ஷவ்வால் நோன்பை வைக்க வேண்டும் என்று இஸ்லாம் எந்த ஒரு நிபந்தனையும் விதிக்க வில்லை!
• நம்மில் பலர் நோய் பயணம் போன்று காரணங்களில் நோன்பை விட்டு இருப்போம் பெரும்பாலான பெண்கள் நிச்சயமாக ஹைலு ஏற்பட்டு நோன்பை விட்டு இருப்பார்கள்! ரமலான் முழுமையாக நோன்பு வைத்தவர்கள் தான் ஷவ்வால் நோன்பை வைக்க வேண்டும் என்றால் எந்த பெண்ணும் நோன்பு வைக்க முடியாது!
💟 ஆறு நோன்பின் சிறப்பு :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2159)
ஹதீஸ் விளக்கம் :
1) அல்லாஹ் ஒவ்வொரு நற்செயலிற்கும் அது போன்ற பத்து நன்மைகளை வழங்குகின்றான்!
ஒரு மாதம் ரமலான் நோன்பு என்பது 30 × 10 = 300 ஆகும்! ஷவ்வால் 6 நோன்பு : 6 × 10 = 60 ஆகும் மொத்தம் = 360 நாட்கள் அதாவது ஒரு வருடம் ஆகும்!
2) ஒரு வருட கால நோன்பு நேற்ற நன்மை என்றால் அந்த ஒரு வருடத்தில் அரபாஃ நோன்பு - ஆஷுரா நோன்பு - ரமலான் நோன்பு என அனைத்துமே வரும் நாம் ஷவ்வால் உடைய 6 நோன்பை வைத்தால் இவை அனைத்தின் நன்மையும் இன்ஷாஅல்லாஹ் பெற்று கொள்ள முடியும்!
💟 ஷவ்வால் நோன்பை முழுமையாக வைக்க முடியவில்லை என்றால் :
• நாம் நன்மை எதிர் பார்த்து ஷவ்வால் உடைய ஆறு நோன்பை தொடர்ச்சியாக அல்லது விட்டு விட்டு வைக்கிறோம்!
• ஆனால் திடீர் சூழ்நிலை - பணிகளின் காரணமாக ஷவ்வால் நோன்பை முழுமையாக வைக்க முடியாமல் போய் விடுகிறது! இதை நாம் களா செய்ய வேண்டுமா அல்லது நமது மீது குற்றம் ஏற்படுமா என்றால் கிடையாது!
• ஷவ்வாலின் ஆறு நோன்பு என்பது விரும்பதக்க சுன்னாவாகும் அது கடமையான வணக்கமல்ல!
• நாம் இயன்ற அளவுக்கு ஷவ்வால் நோன்பை வைக்க முயற்சி செய்ய வேண்டும்! நிர்பந்த சூழ்நிலை நம்மால் வைக்க முடியாமல் போய் விட்டால் நமது மீது குற்றம் கிடையாது நாம் வைத்த வரை நோன்பிற்கு கூலி கிடைக்கும்!
• அதே போன்று நாம் ஷவ்வால் நோன்பை முழுமையாக வைக்க முடியாமல் மார்க்கம் அனுமதித்த காரணம் இருந்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூறியது படி உங்களுக்கு முழுமையான கூலி கிடைக்கும் என்று ஆதரவு வைக்கலாம் !
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும் போது செய்யும் நற்செயல்களுக்கு கிடைப்பது போன்ற (அதே) நற்பலன் அவன் நோயுற்று விடும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது (அவன் பாவம் எதுவும் செய்யாமலிருக்கும் வரை) அவனுக்கு எழுதப்படும்!
(நூல் : ஸஹீஹ் புஹாரி : 2996)
• எனவே நாம் ஷவ்வாலில் விட்ட நோன்புகளை மீண்டும் களா செய்யத் தேவையில்லை களா நோன்பு என்பது பர்ளான நோன்பை விட்டால் மட்டுமே உண்டு! சுன்னத் மற்றும் நபில் நோன்புகளுக்கு கிடையாது!
(மஜ்மூஉ ஃபதாவா : 5 / 270)
💟 விடுபட்ட ரமலான் நோன்பையும் ஷவ்வாலின் ஆறு நோன்பையும் சேர்த்து நிய்யத் வைத்தால் இரண்டுக்குமுரிய நன்மைகளும் சேர்ந்து கிடைக்குமா?
• இன்று நம்மில் பலர் இப்படியும் சிந்திப்பது உண்டு! ஷவ்வால் நோன்பு வைத்தால் களா நோன்பு வைத்த கூலியும் சுன்னத் நோன்பு வைத்த கூலியும் ஒன்றாக கிடைக்குமா என்று!
• ஒரு கல்லில் இரண்டு மாங்காய் போன்று ஆனால் ஃபர்ளான வணக்கங்களையும் சுன்னத்தான வணக்கங்களையும் இணைத்து செய்யமுடியாது!
• எவ்வாறு ஃபர்ளான தொழுகையையும் சுன்னத்தான தொழுகையையும் சேர்த்து ஒரே தொழுகையாக தொழ முடியாதோ அதைப் போல் தான் ஃபர்ளுடன் சேர்த்து எந்த உபரியான வணக்கங்களையும் செய்ய முடியாது!
• ஃபர்ளு என்பது வேறு, உபரியான வணக்கம் வேறு. இரண்டையும் தனித்தனியாக தான் நிறைவேற்ற வேண்டும்! அப்போது தான் அதன் நன்மைகளும் நமக்கு கிடைக்கும்!
@அல்லாஹ் போதுமானவன் 💞


 

No comments:

Post a Comment