இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுக்கலாமா?
ஷேக் முஹம்மது இப்னு உஸைமின் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
• நம்மில் மரணித்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதை நாம் மூன்று வகையாக பிரிக்கலாம் அவைகள்,
1) அவர்கள் மரணத்திற்கு முன்பு நம்மிடம் வஸியத் செய்து இருந்தால் மட்டும் இவ்வாறு செய்ய முடியும்!
• மரணிக்கும் முன் நம்மிடம் கடைசி விருப்பத்தை (வஸீய்யா) ஏதேனும் கூறி இருந்தால் அது மார்க்கம் தடுத்த இருக்காத வரை நாம் அதை நிறைவேற்றலாம்!
• மரணிக்கும் முன் எனக்கு குர்பானி கொடுங்கள் என்றோ அல்லது பொருளாதாரம் கொடுத்து வருடம் வருடம் எனக்கு குர்பானி கொடுங்கள் என்று அவர் நம்மிடம் கூறி இருந்தால் அதை நாம் நிறைவேற்றலாம்!
(மரண சாசனமாகிய) அதைக் கேட்டதற்குப் பின்னர், எவரேனும் அதை மாற்றி விட்டால் அதன் பாவமெல்லாம் மாற்றியவரின் மீதே (சாரும்). நிச்சயமாக அல்லாஹ் (மரணிப்பவர் கூறும் சாசனத்தை) நன்கரிந்தவன்!
(அல்குர்ஆன் : 2:181)
2) நாம் குர்பானி கொடுக்கும்போதே இது வீட்டில் உள்ள எல்லோருக்கும் மற்றும் மரணித்த உறவுகளுக்கும் சேர்த்தே குர்பானி கொடுக்கிறேன் என்ற எண்ணத்தில் குர்பானி கொடுத்தால் அவர்களுக்கும் இது பொருந்தும்!
• நபி (ஸல்) அவர்கள் குர்பானி பிராணியை அறுக்கும் முன் இது எனக்கும், என் வீட்டாருக்கும், என் சமுதாயத்திற்கும் சேர்த்தே என்று கூறி உள்ளார்கள் :
பிஸ்மில்லாஹ். அல்லாஹும்ம தகப்பல் மின் முஹம்மதின் வ ஆலி முஹம்மதின் வமின் உம்மத்தி முஹம்மதின்
பொருள் : அல்லாஹ்வின் பெயரால்! இறைவா! முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக் கொள்வாயாக!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 3977)
3) மரணித்தவர்களுக்கு மேலே உள்ள இரண்டு காரணமும் இல்லாமல் நாம் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் குர்பானி கொடுப்பது நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டிதராத வழிமுறையாகும்!
• ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் அதிகம் நேசித்த மனைவி கதிஜா (ரழி) அவர்கள் மரணித்த பின்பு அவர்களுக்கு என்று தனியாக நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுக்க வில்லை! மேலும் இறந்த போன தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் நபி (ஸல்) அவர்கள் தனியாக குர்பானி கொடுக்க வில்லை!
• இன்று பலர் முதலில் வீட்டில் குர்பானி கொடுத்தால் வீட்டில் இறந்தவர்களுக்கு கொடுக்கின்றார்கள் ஆனால் இது நபி (ஸல்) அவர்கள் சுன்னாஹ்விற்கு மாற்றமான ஒன்றாகும்!
• நாம் குர்பானி கொடுக்கும் போதே இது எனக்கும் என் வீட்டாருக்கும் என் மரணித்த உறவுகளுக்கும் சேர்த்தே என்று எண்ணத்தில் குர்பானி கொடுத்தாலே போதுமானதாக இது அமைந்து விடும்! அல்லாஹ் மிக அறிந்தவன்!
(Fatwa : இப்னு உஸைமின் (ரஹ்))
@அல்லாஹ் போதுமானவன் 

No comments:
Post a Comment