பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

தொழுகையை முறிக்கும் 8 செயல்கள்!


தொழுகையை முறிக்கும் 8 செயல்கள்!
தொழுகை இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் மிக முக்கியமான ஒன்றாகும்! தொழுகை இல்லாதவன் முஸ்லீமாக இருக்க முடியாது! நாளை மறுமை நாளிலும் அல்லாஹ் முதன் முதலில் தொழுகை பற்றியே நம்மிடம் விசாரிப்பன்!
(நூல் : ஸுனன் நஸாஈ : 464)
• இவ்வளவு முக்கியத்துவம் உள்ள தொழுகை சில செயல்களால் முறிந்து விடும்! இவ்வாறு முறிந்து விட்டால் நாம் மீண்டும் முதலில் இருந்து தொழ வேண்டும்! என்ன என்ன செயல்களால் தொழுகை முறிந்து விடும் என்பதை அறிந்து இயன்ற அளவுக்கு இவற்றை நாம் தவிர்க்க இருக்க முயற்சி செய்யவேண்டும்! இன்ஷாஅல்லாஹ்!
1) உளூ முறிந்து விடுவது :
• உளுவை முறிக்கும் காரியங்கள் அனைத்தும் தொழுகையையும் முறித்து விடும்! ஏனெனில் உளூ தொழுகைக்கான அடிப்படை நிபந்தனையாக இருக்கிறது! எனவே உளூ முறிந்து விட்டால் தொழுகையும் முறிந்து விடும்!
2) தொழுகையில் வேண்டுமென்றே பேசுவது :
ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது :
(ஆரம்பக் காலத்தில்) நாங்கள் தொழுகையில் பேசிக்கொண்டிருந்தோம். ஒருவர் (தொழுது கொண்டிருக்கும்போது) தம் அருகிலிருக்கும் தோழரிடம் (சொந்தத் தேவைகள் குறித்து) பேசிக் கொண்டிருப்பார். "மேலும், நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வணங்குங்கள்" எனும் (2:238ஆவது) வசனத் தொடர் அருளப்பெறும்வரை (நாங்கள் இவ்வாறே தொழுகையில் பேசிவந்தோம்). இந்த வசனம் அருளப்பெற்றவுடன் அமைதியாக இருக்கும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டது; பேசக்கூடாது என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 937)
• தொழுகையில் நிற்கும் போது பணிவுடன் நிற்பது அவசியமாகும்! தொழுகையில் பேசுவது பணிவுடன் நிற்பதற்கு எதிரான செயலாகும்! ஆகவேதான் ஸஹாபாக்கள் இவ்வசனம் இறங்கியதற்கு பிறகு தொழுகையில் பேசுவதிலிருந்து தடுக்கப்பட்டார்கள்!
3) தொழுகையில் சப்தமாக சிரிப்பது :
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்! அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்!
(அல்குர்ஆன் : 23 : 1&2)
• தொழுகையை உள்ளச்சத்தோடு மட்டுமே தொழ வேண்டும்! அதில் சிரிப்பது தொழுகையை கேவலப்படுத்தும் காரியமாக இருப்பதினால் தொழுகை முறிந்து விடும்!
ஷைக்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
நிச்சயமாக தொழுகையில் சப்தமாக சிரிப்பது தொழுகையின் நிலைக்கும், அதில் இருக்க வேண்டிய அவசியமான உள்ளச்சத்திற்கும் எதிரானதாக இருக்கிறது! மேலும் தொழுகையில் அத்தொழுகையை சிறுமைப்படுத்துவதாகவும், அதில் விளையாடுவதாகவும் உள்ளது! இது தொழுகையை நிலைநாட்டுவதற்கான அடிப்படை நோக்கத்திற்கே எதிரானதாக இருக்கிறது. எனவேதான் தொழுகையில் சப்தமாக சிரிப்பதின் மூலம் தொழுகை முறிந்து விடும்!
(நூல் : மஜ்மூயுல் ஃபதாவா : 22/617)
• தொழுகையில் சப்தமாக சிரித்தால் தொழுகை மட்டுமே முறியும்! அதனால் உளூ முறியாது! ஒருவர் தொழுகையில் (சப்தமிட்டுச்) சிரித்தால் அவர் அந்தத் தொழுகையை மட்டும் திரும்ப தொழுதால் போதும்!
4) கவனத்தை சிதறடிக்கும் மூன்று விசியங்கள் :
• பொதுவாக தொழக்கூடியவர் தனக்கு முன்னால் சுத்ரா எனும் தடுப்பை வைத்துக் கொள்வது வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் ஆகும்!
• நாம் எந்த தடுப்பும் வைக்காமல் இருக்க குறிப்பிட்ட சில விசியம் நாம் தொழும் போது குறுக்கே கடந்து சென்றால் தொழுகை முறிந்து விடும் என்று ஹதீஸ் உண்டு இதனை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இரண்டு வெவ்வேறு ஹதீஸ்களை வைத்து இமாம் நவவி (ரஹ்) அவர்கள் விளக்கம் கூறியுள்ளார்கள்!
அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது :
அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள்,
உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும் போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் கறுப்புநாய் ஆகியன அவரது (கவனத்தை ஈர்த்து) தொழுகையை முறித்துவிடும்! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். உடனே நான், அபூதர் (ரலி) அவர்களே! சிவப்பு நிற நாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள் என்றார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 882)
மஸ்ரூக் அறிவித்தார்கள் :
ஆயிஷா (ரலி) அவர்கள் அருகில் நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுபவருக்குக் குறுக்கே செல்வது) தொழுகையை முறித்துவிடும் என்பது பற்றி பேசப்பட்டது! அதைக் கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள், (பெண்களாகிய) எங்களைக் கழுதைகளுக்கும் நாய்களுக்கும் ஒப்பாக்கிவிட்டீர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் (அவர்களின்) கிப்லாவுக்குமிடையே கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருக்க அவர்கள் தொழுது கொண்டிருப்பார்கள்! அப்போது எனக்கு ஏதேனும் தேவையேற்பட்டால் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் (எழுந்து) உட்கார்ந்து அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த விரும்பாமல் கட்டிலின் இரு கால்கள் வழியாக நான் நழுவிச் சென்றுவிடுவேன் என்று கூறினார்கள்.
(நூல் : ஸஹீஹ் புகாரி : 514)
• இந்த இரு வகை ஹதீஸ்களையும் ஒன்றிணைத்துப் புரியும் விதத்தில் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறும் விளக்கம்:
• தொழுகை முறிந்து விடும் என்பதின் கருத்து இந்த மூன்றும் கடந்து செல்லும் போது இவற்றின் மீது நம்முடைய கவனம் செலுத்துவதால் தொழுகையில் குறைவு ஏற்படும்! இதனாலயே தொழுகை முறிந்து விடுகிறது!
(நூல் : ஷரஹுன்னவவி அலா ஸஹீஹ் முஸ்லிம்)
1) பெண் : பெண் பித்னாவிற்கு வழிவகுக்கும்! ஒரு பெண் வெளியே செல்லும் போது பிறர் கண்களுக்கு ஷைத்தான் அவளை அழகரித்து காட்டுகிறன்!
(நூல் : சுனன் திர்மிதீ : 1173)
2) கழுதை : கழுதை கத்தினால் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட சொல்லி உள்ளார்கள் காரணம் அது ஷைத்தனை பார்த்து கத்துகிறது!
(நூல் : சுனன் அபூதாவூத் : 5103)
3) நாய் : கறுப்பு நாய் ஷைத்தானாகும்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 882)
5) தொழுகையில் மறைக்க வேண்டிய பகுதிகளை வேண்டுமென்றே விலக்குதல் :
• தொழுகையில் நாம் கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதியை மறைத்து தொழ வேண்டும்! மறைக்காமல் ஒருவர் தொழுதால் அவரின் தொழுகை ஏற்கப்படாது! எனவே மறைக்கப்பட வேண்டிய பகுதிகளை அவசியமாக மறைத்தே ஆக வேண்டும்!
• உதாரணத்திற்கு இன்று அதிகமாக வாலிபர்கள் பேண்ட் அணியும் போது அதனை கீழே அதிகமாக இறக்கிதான் அணிகின்றனர்! அல்லது மேலாடையை இறுக்கமாக குறுகிதாக அணிகிறார்கள்! ஸஜ்தா செய்கின்ற போது அவர்களின் பின் பகுதி அப்பட்டமாக தெரிகிறது. இந்த செயலினால் தொழுகை முறிந்து விடும்!
❤️ ஆண்கள் மறைக்க வேண்டிய பகுதிகள் :
• ஆண்கள் ஆடை விசாலமாக இருந்தால் தங்களது தொப்புள் பகுதியிலிருந்து கனுக்கால் முட்டுவரையும், இரு தோள் புஜங்களையும் மறைப்பதும் கட்டாயமாகும்! ஆடை பற்றாக்குறையாக இருந்தால் தொப்புள் பகுதியிலிருந்து கனுக்கால் முட்டு மேல் வரை மறைப்பது கட்டாயமாகும்!
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஆடை விசாலமாக இருந்தால் அதன் ஓர் ஓரத்தை வலது தோளிலும், மற்றொரு ஓரத்தை இடது தோளிலும் சுற்றிக் கொள்ளுங்கள்! ஆடை சிறியதாக இருந்தால் அதை இடுப்பில் வேட்டியை போன்று அணிந்து கொள்ளுங்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 361)
• ஆடை விசாலமாக இருக்கின்ற நிலையில் தொப்புள் பகுதியிலிருந்து முட்டுகால் வரை மறைப்பதுடன் அவசியமாக தோள்புஜத்தையும் மறைக்க வேண்டும்!
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களில் ஒருவர் தன் இரு தோள் புஜங்களின் மீது எதுவும் இல்லாதிருக்க ஒரு ஆடையுடன் தொழ வேண்டாம்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 359)
❤️ பெண்கள் மறைக்க வேண்டிய பகுதிகள் :
• பெண்கள் தங்கள் உடலின் முகம், இருகைகளின் மணிக்கட்டுகள் தவிர மற்ற அனைத்து பாகங்களையும் மறைக்க வேண்டும்! அந்நிய ஆண்கள் பார்க்கின்ற நிலை ஏற்பட்டால் முகத்தையும் மறைக்க வேண்டும்!
நபி அவர்கள் கூறினார்கள் :
தலையை மறைக்கும் முக்காடு அணியாமல் தொழும் (பருவ வயதை அடைந்த) பெண்ணின் தொழுகையை அல்லாஹ் ஏற்கமாட்டான்!
(நூல் : சுனன் அபுதாவூத் : 641)
இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
பெண்கள் தொழும்போது அவர்களின் முடிகளில் இருந்து ஏதேனும் வெளிப்பட்டால் அவளின் தொழுகை ஏற்கப்படாது என்று கல்விமான்கள் கூறுகின்றார்கள்!
(நூல்: ஜாமியுத் திர்மிதி : 378)
நபி அவர்கள் கூறினார்கள் :
பெண் (அவள் முழு உடலும்) மறைக்கப்பட வேண்டியதாகும்!
(நூல் : சுனன் திர்மிதி : 1206)
• பெண்கள் தங்களின் கால்களின் மேல் பகுதியையும் மறைத்து தொழு வேண்டும்! ஸஜ்தாவிற்கு செல்லும் போது கால்களின் உட்பகுதி தெரிவதில் குற்றமேதுமில்லை!
உம்மு ஸல்மா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நான் நபி (ஸல்) அவர்களிடம், பெண் கீழாடையின்றி மேலங்கி மற்றும் முக்காடுடன் தொழுவது கூடுமா என்று நான் கேட்டேன்! அதற்கு அவர்கள், கால்களின் அவர்கள் மேலங்கி (விசாலமாக மேற்பகுதியை மறைத்தவாறு இருந்தால் தொழலாம் என்றார்கள்!
(நூல் : சுனன் அபுதாவூத் : 640)
6) தொழுகையில் கிப்லா திசையை விட்டு திரும்புவது :
• தொழுகையில் கிப்லாவை முன்நோக்குவது தொழுகையின் நிபந்தனையாகும்! எனவே ஒருவர் வேண்டுமென்றே கிப்லா திசையை விட்டு வேறு திசையை நோக்கினால் தொழுகை முறிந்து விடும்!
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் :
தொழுகையில் திரும்பிப் பார்ப்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். ஓர் அடியானுடைய தொழுகையை ஷைத்தான் அதன் மூலம் பறித்துச் செல்கிறான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 751)
7) தொழுகையில் பர்ளானா செயல்களை விட்டு விடுவது :
தொழுகையின் அடிப்படைகள், நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை வேண்டு மென்றே விட்டுவிட்டாலும் தொழுகை முறிந்து விடும்! உதாரணத்திற்கு : சூரத்துல் ஃபாத்திஹா ஓதாமல் விட்டு விடுவது! ருக்உ அல்லது ஸஜ்தாவை விட்டுவிடுவது!
😎 தொழுகையின் அடிப்படையில் ஏதேனும் ஒன்றை மாற்றி விடுதல் :
• தொழுகையின் அடிப்படைகளில் ஏதேனும் ஒன்றை வரிசையமைப்பிற்கு மாற்றமாக செய்வதினாலும் தொழுகை முறிந்து விடும்! உதாரணத்திற்கு ருகூஉ செய்வதற்கு முன்பே ஸஜ்தா செய்தால் தொழுகை முறிந்து விடும்!
@அல்லாஹ் போதுமானவன் 💞


 

No comments:

Post a Comment