பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

அல்குர்ஆனை பார்த்து ஓதி தொழுகலாமா?


அல்குர்ஆனை பார்த்து ஓதி தொழுகலாமா?
நாம் பொதுவாக அனைத்து தொழுகையிலும் அல் குர்ஆனை மனனமாக ஒதுவதே சிறந்தது ஆகும் ஏன் என்றால் மனனமாக அல் குர்ஆனை ஓதுவதால் உள்ளச்சத்துடன், உடல் அமைதியுடன் தொழுவதற்கு ஏற்றதாக இருக்கும்!
• ஆனால் நம்மில் சிலருக்கு அல்-குர்ஆனிலிருந்து ஒரு சில சிறிய ஸூராக்கள் மட்டுமே மனனமாக இருக்கும் தனக்கு மனனமில்லாத சிறிய, பெரிய ஸூராக்களை ஓதி நீண்ட நேரம் நின்று தொழ வேண்டும் என்று நம்மில் பலரும் விரும்பவோம்!
• தொழுகையில் அல் குர்ஆனை பார்த்து ஓதி தொழுகலாமாக என்றால் இதற்கு இஸ்லாத்தில் எந்த தடையும் கிடையாது!
• பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் : இமாம் அஹ்மத் (ரஹ்) இமாம் ஸுஹ்ரி (ரஹ்) இமாம் நவவி (ரஹ்) இமாம் ஷாபிஈ (ரஹ்) போன்ற அறிஞர்கள் அல் குர்ஆனை பார்த்து ஓதி தொழுகலாம் என்று கூறி உள்ளார்கள் : இதற்கு முக்கிய ஆதாரமாக கிழே உள்ள செய்தியை உள்ளது!
(நூல் : அல்-மஜ்மூஃ : 4 : 22)
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களை அவர்களது அடிமை தக்வான் குர்ஆனைப் பார்த்து ஓதி தொழுகை நடாத்துபவராக இருந்தார்கள்!
(நூல் : பத்ஹ் அல்-பாரி : 2/185)
• மேலே உள்ள செய்தியை முக்கிய ஆதாரமாக கொண்டு பெரும்பாலான இமாம்கள் தொழுகையில் அல் குர்ஆனை பார்த்து ஓதி தொழுகலாம் என்று கூறி உள்ளார்கள்!
• நாம் நபில் அல்லது சுன்னத் தொழுகையில் அல் குர்ஆனை பார்த்து ஓதி தொழுது கொள்ளலாம்! மிகுந்த அவசிய தேவை ஏற்பட்டால் மட்டும் பர்ளு தொழுகையிலும் அல் குர்ஆனை பார்த்து ஓதி தொழுது கொள்ளலாம்!
(நூல் : அல் முக்னீ : 1 / 335)
• அல்குர்ஆனை பார்த்து ஓதுவதற்கு முன்பு நமது அருகில் அல்குர்ஆனை வைக்க சற்று உயரமான நாற்காலி அல்லது வேறு ஏதேனும் வைத்து கொள்ள வேண்டும்.
• பின்பு, அல்குர்ஆனை கையில் வைத்து கொண்டு பார்த்து ஓதி தொழுகலாம் அல்லது அல்குர்ஆனை நமக்கு ஓதுவதற்கு ஏற்றால் போல் சற்று உயரமான நற்காலி அல்லது வேறு ஏதேனும் ஒன்றின் மீது வைத்து அதை பார்த்து ஓதலாம்.
• நாம் ருக்உ மற்றும் ஸஜ்தாவிற்கு செல்லும் போது அல்குர்ஆனை அருகில் இருக்கும் நாற்காலியின் மீது வைத்து விட்டு ருக்உ - ஸஜ்தா செய்ய வேண்டும்!
• இவ்வாறு நாம் ஒவ்வொரு ரக்ஆத்திலும் பார்த்து ஓதி தொழுது கொள்ளலாம்! அதே நேரம் நாம் அல் குர்ஆனில் உள்ள சூராக்களையும் இயன்ற அளவுக்கு மனனம் செய்ய முயற்சி வேண்டும்!
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏
நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
(சூரத்துல் : அல் கமர் : 17)
@அல்லாஹ் போதுமானவன் 💞


 

No comments:

Post a Comment