💞 முந்தியவர்களில் ஒருவர் அப்துல்லாஹ் இப்னு சுஹைல் (ரழி) வாழ்கை வரலாறு சுருக்கம் 💞
• மக்காவில் செல்வமும் அரசியல் வளமும் மிக்க சுஹைல் இப்னு அம்ர், ஃபாகிதா இவர்கள் இருவருக்கும் மகனாக அப்துல்லாஹ் இப்னு சுஹைல் (ரழி) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள்! அபு ஜந்தல் (ரழி) என்ற ஒரு சகோதரும் இவருக்கு உண்டு!
• இவரின் தந்தை சுஹைல் இப்னு அம்ர், குரைஷ் குலத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர்! மேலும் குரைஷ் குலத்தின் முக்கிய பேச்சாளர்,
மக்காவின் அரசியல்–தூதரகத் தலைவராகவும் விளக்கினார்! மக்காவில் இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்தவர்களில் இவரும் ஒருவர். முஸ்லீம்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தவர். இதற்கு நிறைய ஆலோசனைகளும் கூறியுள்ளார்கள்!
• இந்த அளவிற்கு தந்தை கடுமையாக இஸ்லாத்தை எதிர்த்தாலும், இவரின் மகன் அப்துல்லாஹ் இப்னு சுஹைல் (ரழி), நபித்துவத்தின் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரு சிலரில் இவரும் ஒருவர் அதை வெளிப்படுத்தாமல் மறைமுகமாகவே வைத்திருந்தார்கள்!
• குரைஷிகளின் சபைகளை புறக்கணித்து விட்டு, அர்கம் (ரழி) அவர்கள் வீட்டில் மறைமுகமாக இஸ்லாத்தை பற்றி கற்றுக்கொள்வார்கள்! தந்தைக்கு இந்த விசியம் தெரியவர இவரை கண்டித்தார்கள் மேலும் பொருளாதாரம் எதையும் கொடுக்கமாட்டேன் என்றும் கடுமையாக கூறினார்கள்!
• ஒரு கட்டத்தில் மக்காவில் இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு, மக்கா காஃபிர்கள் அதிகம் கொடுமை இழைக்க, நபி (ஸல்) அவர்கள், ஸஹாபாக்களை அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்ய சொன்னார்கள், அதில் அப்துல்லாஹ் இப்னு சுஹைல் (ரழி) அவர்களும் ஒருவர் என்பதை வரலாற்று அறிஞர் இப்னு ஹிஷாம் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்!
• பின்பு, சில மாதம் கழித்து ஹிஜ்ரத் செய்தவர்கள் மக்கா வர, அப்துல்லாஹ் (ரழி) அவர்களை அவர் தந்தை வீட்டிலயே சிறை வைத்தார். இவ்வாறு சில நாட்கள் செல்ல, இவரின் சகோதரன் அபு ஜந்தல் (ரழி) அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
• பத்ருப் போர் சமயத்தில் இவர் தந்தையும் முஸ்லீம்களுக்கு எதிராக போர் புரிய தயாராகினார். அப்போது அப்துல்லாஹ் (ரழி) சாமர்த்தியாக சிந்தித்து, தந்தையிடம் மன்னிப்பு கேட்டு தான் நம்முடைய பழைய மார்க்கத்திற்கே வந்து விட்டேன்! என்னையும் உங்களுடன் போருக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறினார். இதை உண்மை என்று நம்பிய தந்தை அவரையும் உடன் அழைத்து சென்றார்.
• போர் ஆரம்பம் ஆகும் முன்பே, பிறர் தன்னை கவனிக்காத சூழ்நிலையில் முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டார் அப்துல்லாஹ் (ரழி). அந்த வகையில் இவரும் பத்ர் போரில் கலந்து கொண்டு ஸஹாபி ஆவார்!
• இதன் பின்பு, மதினாவிலயே தங்கி இருந்தார்கள்! இவர் பத்ர் போர், உஹத் போர், அகழ்ப்போர், யர்மூக் போர், யமாமா போர் போன்றவற்றில் கலந்து கொண்டு வீரமாக போரிட்டுள்ளார்.
• மக்காவிற்கு உம்ராவிற்காக நபி (ஸல்) அவர்களுடன், 1,400 ஸஹாபாக்கள் வந்தார்கள். மக்கா காபிர்கள் இவர்கள் போருக்கு வந்து உள்ளார்கள் என்று உள்ளே விடமால் ஹுதைபியா எனும் இடத்திலயே தடுத்து விட்டார்கள். இதன் பின்பு முஸ்லீம்கள் வந்த நோக்கத்தை பற்றி எடுத்து கூற உஸ்மான் (ரழி) அவர்கள் மக்காவிற்கு சென்றார்கள்.
• சில நாட்கள் ஆகியும் உஸ்மான் (ரழி) அவர்கள் திரும்பி வராததால் உஸ்மான் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார் என்று ஒரு தகவல் பரவுகிறது! இதற்கு கண்டிப்பாக நாம் பதிலடி கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) ஒரு மரத்தின் கீழ் (பைஅத்துர் ரிள்வான்) ஸஹாபாக்களிடம் மரணம் வரும் வரை போரிடுவோம், மாறாக, (எந்தச் சூழ்நிலையிலும்) நாங்கள் புறமுதுகிட்டு ஓட மாட்டோம் என்று உறுதிமொழி வாங்கினார்கள்! அதில் அப்துல்லாஹ் (ரழி) அவர்களும் ஒருவர்! ஸஹாபாக்களின் இந்த உறுதியை பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் வசனமே அருளியுள்ளான்!
முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.
(அல்குர்ஆன் : 48:18)
• இதன் பின்பு முஸ்லீம்களுக்கும், மக்கா காஃபிர்களுக்கும் இடையே நடைபெற்ற ஹுதைபியா உடன் படிக்கையில் முஸ்லீம்கள் சார்பாக நபி (ஸல்) அவர்கள், அபூக்கர் (ரழி) உமர் (ரழி) போன்ற பெரும் ஸஹாபாக்கள் சாட்சியாக முத்திரையிட அப்துல்லாஹ் (ரழி) அவர்களும் அதில் கலந்து கொண்டு தன்னுடைய கையெழுத்தை முத்திரையாகயிட்டார்கள்! காஃபிர்களின் சார்பாக சுஹைல் இப்னு அம்ர் கலந்து கொண்டார்.
• இதன் பின்பு சில மாதம் கழித்து மக்கா வெற்றியின் போது, முஸ்லீம்கள் மக்காவிற்கு உள்ளே நுழைந்தார்கள்! அப்போது தன்னுடைய தந்தையான சுஹைல் இப்னு அம்ர் அவருக்காக நபி (ஸல்) அவர்களிடம் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் மன்னிப்பு கேட்டார்கள் நபி (ஸல்) அவர்களும் அவரை மன்னித்தார்கள். அவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்!
• நபி (ஸல்) அவர்கள் இறப்பிற்கு பிறகு, மக்காவில் குழப்பம் ஏற்பட அப்போது சுஹைல் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் தான் மக்களுக்கு உபதேசம் செய்து அந்த குழப்பத்தை போக்கி, முஸ்லீம்களை ஈமானில் உறுதியாக இருக்கும்படி செய்தார்கள்!
• நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்பு, அபூபக்கர் (ரழி) அவர்கள் ஆட்சி காலத்தில் யமாமா என்ற இடத்தில் பொய்யன் நபி முஸைலமாவிற்கும், முஸ்லீம்களுக்கும் இடையே பெரும் போர் ஒன்று நடைபெற்றது.
• போர் மிக கடுமையாக நடைபெற்றது. இதில் பல ஸஹாபாக்கள் வீரமாக போரிட்டு ஷஹீத் ஆனார்கள். அவ்வாறு போரிட்டு ஷஹீத் ஆனவர்களில் ஒருவர் தான் அப்துல்லாஹ் பின் சுஹைல் (ரழி).
• மக்காவில் செல்வம், அரசியல் பலமிக்க, வசதியான வாய்ப்புகள் உள்ள வீட்டில் பிறந்தாலும் இஸ்லாத்திற்காக அனைத்தையும் விட்டு வந்தார்கள். முஸ்லீம்களிடம் ஆட்சியில், அதிகமான செல்வங்கள் வந்த போதும் அதை எதையும் அனுபவிக்காமல் இஸ்லாத்திற்காக தன்னையே அர்ப்பணம் செய்தவர் தான் அப்துல்லாஹ் பின் சுஹைல் ரலியல்லாஹு அன்ஹு!
@அல்லாஹ் போதுமானவன் 💞
No comments:
Post a Comment