நானும் ஆண் தான்!
நானும் ஆண் தான்! மனைவியின் வீட்டார் பற்றி தவறாக பேசுவேன், அவர்கள் வந்தாலும் அவர்களை அவமானப்படுத்துவேன்! இருந்தாலும் எனக்கு தேவை என்றால் மனைவியை அவள் வீட்டிர்க்கு அனுப்பி ஏதேனும் வாங்கி வர சொல்லுவேன்!
நானும் ஆண் தான்! உன் வீட்டாருக்கு மரியாதை கொடுக்க மாட்டேன்! அவர்கள் வந்தாலும் அவர்களை அவமானப்படுத்துவேன்! நீயும் உங்கள் வீட்டிற்கு செல்ல கூடாது ஆனாலும் என் தயாருக்கு சிறு மனக்கஷ்டம் வராத அளவுக்கு நீ தான் பார்த்து கொள்ள வேண்டும் தவறு அவர்கள் மீது இருந்தாலும் நீ தான் விட்டு கொடுத்து செல்ல வேண்டும்!
நானும் ஆண் தான்! மனைவிக்கு 10 ரூபாய் கொடுப்பதாக இருந்தாலும் சரி! அது என் தாய் கூறினாள் மட்டுமே கொடுப்பேன்! முதலில் உனக்கு என்ன செலவு உள்ளது உனக்கு ஏன் நான் கொடுக்க வேண்டும்?
நானும் ஆண் தான்! உனக்கு செலவு எண்ணி பார்த்து தான் செலவு செய்வேன்! ஆனால் நீ மட்டும் உன்னிடம் உள்ள அனைத்து நகையும் கொடுக்க வேண்டும்! அவ்வப்போது உங்கள் வீட்டாரிடமும் ஏதேனும் வாங்கி வரவேண்டும்!
நானும் ஆண் தான்! உன்னை அடிப்பேன், தவறாக பேசுவேன், பொது இடத்திலும் கூட உன்னை அவமானப்படுத்துவேன்! ஆனால் எனக்கு தேவை என்றால் நீ எப்போதும் வர வேண்டும்!
நானும் ஆண் தான்! நான் எப்படி வேண்டும் என்றாலும் இருப்பேன்! முஸ்லீமாகவும் இருப்பேன் காஃபிர் ஆகவும் இருப்பேன் தேவை என்றால் முனாபிக்காக கூட இருப்பேன் ஆனால் நீ மட்டும் இஸ்லாம் கூறிய முறையில் 100% வீதம் எனக்கு கட்டுப்பட வேண்டும்!
நானும் ஆண் தான்! பிள்ளை வேண்டும் எனக்கு! ஆனால் கர்ப்பமாக இருக்கும் போதும் சரி பிள்ளை பிறந்தாலும் சரி செலவு உன் வீட்டார் தான் பார்க்க வேண்டும்! மற்றப்படி பெயர் வைப்பது, பிள்ளைக்கு யாரேனும் நகை பணம் கொடுத்தால் அதை நாங்கள் தான் எடுத்து கொள்வோம்!
இப்படிக்கு ரோஷம் கெட்ட பெயர் தாங்கிய ஆண்....
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
முஃமின்களில் முழுமையானவர் குணத்தால் அழகானவரே! உங்களில் சிறந்தவர் தம் மனைவியிடம் குணத்தால் சிறந்தவராக இருப்பவரே!
(நூல் : சுனன் திர்மிதி : 1082)
@அல்லாஹ் போதுமானவன் 


No comments:
Post a Comment