இஸ்லாத்தில் ஸஃபர் மாதமும் அனாச்சாரமும் பற்றி அறிந்து கொள்ளுவோம் 
• மார்க்கத்தை சரியாக விளங்காத பல முஸ்லீம்கள், இன்னும் சிலர் உலக லாபத்திற்கு இஸ்லாம் தடுத்தவைகளை எல்லாம், இஸ்லாத்தில் இல்லாதவற்றை எல்லாம் மார்க்கம் என்ற பெயரில் மக்களிடம் சிறப்புகளை கூறி பரப்புகிறார்கள் உதாரணமாக : பால் கிதாப், வளர் பிறை தேய் பிறை பார்ப்பது, போன்று,
• உண்மை மார்க்கமாகிய இஸ்லாத்தில், இஸ்லாமியர்களாக இருந்து கொண்டு மற்ற மதங்களில் காணப்படுகின்ற கலாச்சாரங்களை நம்முடைய முன்னோர்கள் அறியாமையினால் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நம்முடைய முஸ்லிம்களும் அதையே செய்யக்கூடியவர்களா இன்னும் அதை மார்க்கமாகவும் எண்ணி செய்து கொண்டு உள்ளார்கள் என்பதை நாம் பல இடங்களில் கண்கூடாக பார்க்கிறோம்! அதற்கு ஒரு உதாரணம் இந்த ஸஃபர் மாதமும் ஆகும்!
• அல்லாஹ் பாதுகாக்கணும் இன்னொரு கூட்டம் மாதம்தோறும் ஏதாவதொரு ஒரு அறியாமை செயல் அல்லது மாற்று மத வழிமுறை அல்லது இஸ்லாம் கூறாத ஒன்றை செய்து சொர்க்கம் பெற்று விடலாம் எண்ணி ஏதேனும் செய்து கொண்டு உள்ளார்கள்!
உதாரணமாக : முஹர்ரம் மாதம் பாஞ்சாகம், ஸஃபர் மாதம் வந்தால் ஸஃபர் கழிவு அல்லது ஒடுக்கத்து புதனென்றும், ரபிஉல் அவ்வல் மாதம் வந்து விட்டால் மீலாது விழா கொண்டாட்டமென்றும், ரஜப் மாதத்தில் பூரியான், பாயாசம் பாத்திஹாவென்றும், ஷாஃபான் மாதத்தில் ஷபே பராஅத் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன நவுதுபில்லாஹ்!
• ஆனால் இஸ்லாத்தில் ஒரு அமல் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இரண்டு அடிப்படை நிபந்தனைகள் உள்ளன அவை,
1) இக்லாஸ் என்னும் மனத்தூய்மை
2) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நபி (ஸல்) அவர்கள் கூறிய வழிமுறையில் இருக்க வேண்டும்!
• இவ்வாறு இல்லாமல் முன்னோர்கள் பெரியார்கள் செய்தார்கள் என்று நாம் செய்வோமேயானால் நாளை மறுமையில் எந்த பயனும் கிடைக்காது மாறாக இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை செய்ததற்கு தண்டனையை கிடைக்கும்!
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும்!
காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்!
(நூல் : சுனன் நஸயீ : 1560)
• இஸ்லாத்தில் மாதங்கள் 12 ஆகும் மனிதர்கள் அறிந்து கொள்ள நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்து உள்ளான்!
• இஸ்லாத்தின் இரண்டுவது மாதம் ஸஃபர் மாதம் ஆகும்! ஆரம்ப காலத்தில் வாழ்ந்த மக்கா காஃபிர்கள் இந்த மாதத்தில் தான் அதிகம் பிறர் உடன் அவர்களுக்கு சண்டை ஏற்படும்! மேலும் இந்த மாதங்களில் தான் அதிகம் அவர்களின் பொருட்கள் கொள்ளையும் போகும் இதனாலே இந்த மாதத்தை துர்சகுணம் உள்ள மாதமாக பார்த்தார்கள்!
• ஆரம்ப கால முஸ்லீம்கள் மட்டும் அல்ல! தற்காலத்திலும் முஸ்லிம்கள் பலர் ஸபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி அதில் பல மார்க்கம் கூறாத வழிமுறைகளை செய்து கொண்டு உள்ளார்கள்!
• இந்த மாதம் துர்சகுணம் உள்ள மாதம் இதை போக்க பலர் கடற்கரைகளுக்குச் சென்று மூழ்கி வருவார்கள்! இன்னும் பலர் புல்வெளிகளுக்குச் சென்று புற்களை மிதிப்பார்கள் இதனால் பீடை போகும் என்பது இவர்கள் நம்பிக்கை!
• இன்னும் இந்த மாதத்தில் நிக்காஹ் செய்ய மாட்டார்கள் நிக்காஹ் ஆகி இருந்தாலும் கணவன் மனைவி ஒன்றாக இருக்க கூடாது! புது வீடு கட்டி இருந்தாலும் அதில் செல்ல மாட்டார்கள் இவ்வாறு சொல்லி கொண்டே போகலாம் ஆனால் இஸ்லாம் இதை எல்லாம் அடிப்படையில் இருந்தே முழுமையாக தடுத்து உள்ளது!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஸஃபர் மாதம் பீடை என்பதும் கிடையாது
(நூல் : ஸஹீஹ் புகாரி : 5757)
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் :
ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகின்றான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு பகலை நானே புரட்டி வருகிறேன்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 4826)
• இஸ்லாத்தில் நல்ல நாள் நல்ல நேரம் கெட்ட நாள் கெட்ட நேரம் என்று எதுவும் கிடையாது! ஆனால் மார்க்கம் விளக்கம் இல்லாமல் பலர் மாற்று மதத்தினர் போன்று இஸ்லாத்திலும் நல்ல நாட்கள் நல்ல நேரம் பார்க்கிறார்கள் இன்னும் சிலர் வளர் பிறை தேய் பிறை பார்க்கிறார்கள் நவுதுபில்லாஹ் ஆனால் இது அல்லாஹ்விடம் குறை பார்ப்பது போன்று ஆகும்!
• நமக்கு அல்லாஹ் சோதனை கஷ்டம் என்று விதி எழுதி இருந்தால் நாம் எங்கு சென்றாலும் அது நம்மை அடைந்தே திரும்! அல்லாஹ்வை தவிர வேறு யாராலும் அதை நீக்க முடியாது!
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது!
(சூரத்துல் : யூனுஸ் : 107)
1) ஸஃபர் மாதத்தின் கடைசி புதன் கிழமையை கழிவு அல்லது ஒடுக்கத்து புதன் என்று அழைப்பார்கள்! அன்று ஒரு சில அரபி வார்த்தைகளை மா இலைகளிலும் தட்டுகளிலும் மை கொண்டு எழுதி, அப்படி எழுதிய வாசகங்களை தண்ணீரில் கரைத்து குடித்து, வீடுகளில் தெளித்து, தலையில் தெளித்து குளித்தால் முஸீபத்துகள் நீங்கும் என்று செய்து வருகிறார்கள்!
2) ஸஃபர் மாத கடைசி புதனன்று பீடை நீங்க வேண்டும் என்று அந்த நாளில் வீட்டை முழுவதும் கழுவி விட்டு, வீட்டார் உடன் கடற்கரைக்கு சென்று மூழ்கி வருவார்கள்! இன்னும் பலர் புல் வெளிகளுக்கு சென்று புற்களை மிதிக்கின்றார்கள் இதனால் பீடை நீங்கும் என்பது இவர்கள் நம்பிக்கை நவுதுபில்லாஹ்!
3) இன்னும் சிலர் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை எடுத்து அதை தங்களின் வழிமுறைக்கு ஏற்றால் போல் எடுத்து கொண்டு அல்லது கட்டுக்கதைகளை வைத்து இந்த வசனத்திற்கு இந்த விளக்கம் இந்த ஹதீஸ் கருத்து இதான் என்று இது பீடை மாதம் என்று கூறுவார்கள் ஆனால் இது தெளிவான வழி கேடு ஆகும்!
அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) கூறினார்கள் :
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 2697)
• அல்லாஹ் உலகில் ஏற்படுத்தும் விளைவுகள் மனிதர்களின் செயலை பொறுத்து தான் தவிர! தவிர நாட்களை பொருத்து அல்ல!
• எல்லா மனிதர்களுக்கும் நன்மை மட்டுமே தருகின்ற எந்த நாளும் உலகில் இல்லை! எல்லா மனிதர்களுக்கும் தீமை செய்யும் ஒரு நாளும் உலகில் இல்லை! என்பது தான் மார்க்கம் நமக்கு கூறுவது ஆகும்!
• ஸஃபர் மாதத்தை அல்லாஹ்வும் சரி நபி (ஸல்) அவர்களும் சரி இது துர் சகுனம் உள்ள மாதம் பீடை உள்ள மாதம் என்று கூறியது கிடையாது! இந்த நாளில் எந்த செயலும் செய்ய கூடாது என்று தடுத்ததும் கிடையாது! அதே போல் இந்த மாதத்தை சிறப்பித்து குறிப்பிட்ட அமல்களும் செய்ததும் கிடையாது!
• நபி (ஸல்) அவர்கள் வழிமுறையை முழுமையாக பின் பற்றிய ஸஹாபாக்களும் சரி, நேர்வழிபெற்ற கலீஃபாக்கள் நான்கு ஸஹாபிகளும் சரி இந்த மாதத்தையோ அல்லது குறிப்பிட்ட நாளையோ பீடையாக துர்சகுனம் உள்ள ஒன்றாக கருதியதும் கிடையாது!
• இஸ்லாத்தில் இவ்வளவு தெளிவாக உள்ளதை எப்படி பலர் மறுத்து தங்கள் விருப்பதிற்கு ஏற்றால் போல் ஒன்றை உருவாக்கி செய்து கொண்டு உள்ளார்கள் இவர்கள் யாரை பின் பற்றுகிறார்கள்???
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும்!
காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்!
(நூல் : சுனன் நஸயீ : 1560)
• இந்த மாதத்திற்கு என்று எந்த ஒரு சிறப்பும் இஸ்லாம் கூறவில்லை! இதுவும் மற்ற மாதங்களை போன்று தான்! இந்த மாதத்திற்கு என்று செய்ய சிறப்பு துஆ திக்ர் சூரா தொழுகை முறை என்று எதுவும் இஸ்லாம் நமக்கு கூறவில்லை!
• மற்ற மாதங்களில் நாம் என்ன அமல்கள் செய்கின்றோமோ அதே அமல்களை இந்த மாதத்திலும் நாம் செய்து கொள்ளலாம்!
@அல்லாஹ் போதுமானவன் 

No comments:
Post a Comment