முந்தியவர்களில் ஒருவர் ஹாபில் ஸாலிம் (ரழி) அவர்களின் வாழ்கை சுருக்கம்
• மக்காவில் ஆரம்ப காலத்தில் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் பற்றி மறைமுகமாக எடுத்து சொல்லி கொண்டு வந்தார்கள். அப்போது மக்கா காஃபிர்கள் இதை கடுமையாக எதிர்த்தார்கள். இஸ்லாத்தில் இணைத்த மக்களையும் கடுமையாக வேதனை செய்தார்கள்.
• அதில் ஒருவன் தான் உத்பா இப்னு ரபீஆ மக்கா தலைவர்களில் இவன் ஒருவன். இவனின் மகன் தான் அபூஹுதைஃபா (ரழி) ஆவார்கள். இவரின் மனைவி பெயர் தான் சஹ்லா பின்த் சுஹைல். இவர்களிடம் அடிமையாக இருந்தவர் தான் ஸாலிம் பின் மஅகில் (ரழி).
• ஸாலிம் (ரழி) அவர்கள் ஒரு ஈரானியர். பாரசீகத்தைச் சேர்ந்த 'அஸ்த்தக்ரி 'ல் பிறந்த அவர்களைச் சிறுவர்களாக அடிமைச் சந்தையில் விலை பேசி வாங்கி யாத்ரிபுக்கு அழைத்து வந்தவர் அன்ஸார்களைச் சார்ந்த அபூஹுதைஃபா (ரலி) அவர்களின் மனைவி.
• இஸ்லாம் மக்காவில் பரவிய நேரத்தில் ஒரு சிலரே இஸ்லாத்தை ஏற்று இருந்தார்கள் அவர்களில் அபூஹுதைஃபா (ரலி) அவர்களும் அவர்களது மனைவி மற்றும் ஸாலிம் (ரழி) அவர்களும் ஒருவர்.
• தம்மிடம் அடிமையாக இருந்த ஸாலிம் (ரழி) அவர்களை அபூஹுதைஃபா (ரலி) அவர்கள் விடுதலை செய்து வளர்ப்பு மகனாக ஆக்கி கொண்டார்கள். இதனால் இவர்கள் ஸாலிம் இப்னு அபூஹுதைஃபா என்று அழைக்கப்பட்டார்கள்.
• ஸாலிம் (ரழி) அவர்கள் அல்குர்ஆன் ஓதுவதிலும், மனனம் செய்வதில் சிறந்தது விளங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் நான்கு நபர்களிடம் அல்குர்ஆன் ஓத கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அதில் ஸாலிம் (ரழி) அவர்களும் ஒருவர்.
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 4862)
• நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வருவதற்கு முன்புவரை ஸாலிம் (ரழி) அவர்கள் தான் தாம் மக்களுக்கு இமாமாகத் தொழுகை நடத்தினார்கள்.
(நூல் : ஸஹீஹ் புகாரி : 692)
• ஸாலிம் (ரழி) அவர்கள் அழகிய முறையில் அல்குர்ஆன் ஓதக்கூடியவராக இருந்தார்கள். ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் ஸாலிம் (ரழி) அவர்கள் அல்குர்ஆன் ஓதி கொண்டு இருந்ததை கேட்ட நபி (ஸல்) அவர்கள் அப்படியே நின்று அதை கேட்டு கொண்டு இருந்தார்கள். பின்பு இவரைப் போன்றவர்களை என் சமுதாயத்தில் ஏற்படுத்தித் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறினார்கள்.
(நூல் : இப்னு மாஜா : 1338)
• மதினாவில் சில காலம் பின்பு வளர்ப்புப் பிள்ளைகளுக்குரிய சட்டம் அல்லாஹ் அருளினான். இதன் பின்பு மவ்லா அபூ ஹுதைஃபா (அபூ ஹுதைஃபாவினால் வளர்க்கப் பெற்றவர்) எனப் பெயரில் அழைக்கப்பட்டார்கள்.
• நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட
பத்ர், உஹதுப் போர்கள் உட்பட அனைத்துப் போர்களிலும் இவர்கள் பங்கேற்றுள்ளனர்.
• தன்னை நபி என்று வாதிட்ட பொய்யன் முஸைலிமாவிற்கு எதிராக யமாமாவில் போர் நடைபெற்றது. அபூபக்கர் (ரழி) அவர்கள் முஹாஜிர்களின் போர்க்கொடியைத் இவர்களிடம் தந்தனுப்பினார்கள்.
• போர் கடுமையாக நடைபெற்றது, இதில் அபூ ஹுதைஃபா (ரழி) அவர்களும், ஸாலிம் (ரழி) அவர்களும் கடுமையாக போரிட்டு இருவரும் ஒன்றாக ஒரே இடத்தில் ஷஹீத் ஆனார்கள்.
• இந்த போரில் தான் அதிமான ஹாஃபிழ்ல்கள் ஷஹீத் ஆனார்கள். இதன் பின்பு தான் உமர் (ரழி) அவர்கள் அல்குர்ஆனை ஒன்று திரட்டி எழுதுவதற்கு அபூக்கர் (ரழி) அவர்களிடம் ஆலோசனை கூறி அந்த பணியை செய்ய வைத்தார்கள்.
• கலீஃபா உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் கத்தியால் குத்தப்பட்டுக் மரணப்படுக்கையில் கிடந்த நேரம். அடுத்த கலீஃபாவாக யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற முக்கியமான சூழல். நபி (ஸல்) அவர்களின் அன்பிற்கு மிகவும் உரியவர்களான, பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்ட ஆறுபேரை உமர் தேர்ந்தெடுத்தார்கள்.
• அந்த நபர்கள் 1) அலீ (ரழி), 2) உதுமான் (ரழி), 3) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், (ரழி), 4) ஸஅத் பின் அபீவக்காஸ் (ரழி), 5) ஸுபைர் இப்னுல் அவ்வாம் (ரழி), 6) தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரழி).
• அத்தருணத்தில் தம் எண்ணம் ஒன்றைக் கூறினார் உமர் (ரழி) அவர்கள் “ஸாலிம் மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால் அனேகமாய் அவரை நான் தேர்ந்தெடுத்து இருப்பேன்”.
رَضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ
அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி அடைவார்கள்.
(அல்குர்ஆன் : 98:8)
@அல்லாஹ் போதுமானவன் 💞
No comments:
Post a Comment