முஹ்மீன்களின் தாய் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் வாழ்கை வரலாறு சுருக்கம் 💞
• நபி (ஸல்) அவர்களின் நெருக்கிய தோழர், ஆண்களில் இஸ்லாத்தை ஏற்ற முதல் ஸஹாபி அபூபக்கர் சித்திக் (ரழி) அவர்களுக்கும், சொர்க்கவாசியான உம்மு ரூமான் (ரழி) அவர்களுக்கும் மகளாக ஆயிஷா (ரழி) அவர்கள் பிறந்தார்கள். இவர்கள் உடன்பிறந்தோர் மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி.
• மக்காவில் அன்னை கதிஜா (ரழி) அவர்களுடன் வாழ்ந்து வந்த நபியவர்கள் அவர்கள் இருக்கும் வரை வேறு யாரையும் நிக்காஹ் செய்யவில்லை. பின்பு கதிஜா (ரழி) அவர்கள் மரணித்த பின்பு, நபி (ஸல்) அவர்கள் அன்னை ஸவ்தா (ரழி) அவர்களை மறுமணம் செய்து கொண்டார்கள்.
• சில காலம் கழித்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்றார்கள். அப்போது தான் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களை நபித்துவத்தின் 16 ஆண்டு ஷவ்வால் மாதத்தில் நபியவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.
• நபி (ஸல்) அவர்களின் மனைவிகளில் ஆயிஷா (ரழி) அவர்கள் மட்டும் தான் கன்னிப்பெண், மற்ற மனைவிகளை நபி (ஸல்) அவர்கள் மறுமணமே செய்தார்கள்.
• அன்னையவர்களை நிக்காஹ் செய்யும் முன்பே ஜிப்ரயில் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் கனவில் ஆயிஷா (ரழி) அவர்களை காட்டி இவர் உங்களுக்கு இம்மையிலும், மறுமையில் சொர்க்கத்திலும் மனைவியாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார்கள்.
(நூல் : சுனன் திர்மிதி : 3880)
• மதினாவில் பள்ளிவாசலுக்கு அருகில் ஒரு சிறிய மண் வீட்டில் தான் நபியவர்கள் , ஆயிஷா (ரழி) அவர்களுடன் வாழ்கை நடத்தினார்கள்.
• அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள், உலகப்பற்றற்வர்களாக, மிகவும் இழகிய உள்ளம் கொண்டவர்களாகவும், பிறருக்கு அதிகம் தர்மம் செய்ய கூடியவர்களாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மறைவுக்கு பின்பு அவர்களின் செலவுக்கு குறிப்பிட்ட தொகை கொடுப்பார்கள் ஆனால் அதையும் அவர்கள் தர்மம் செய்ய கூடியவர்களாக இருந்து உள்ளார்கள்.
• அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அதிக நினைவாற்றல் உள்ளவராக திகழ்ந்தார்கள். சிறு வயதில் ஒரு முறை அன்னையவர்கள் இறக்கை உள்ள குதிரை வைத்து விளையாடி கொண்டிருந்தார்கள். அதை பார்த்த நபியவர்கள், என்ன ஆயிஷாவே உன்னுடைய குதிரைக்கு இறக்கை முளைத்துள்ளது என்று கிண்டலாக கேட்டார்கள். அதற்கு அன்னையவர்கள் சுலைமான் (அலை) அவர்களிடம் இருந்த குதிரைக்கு இறக்கை இறந்தல்லவா! என்று பதில் கூறினார்கள்.
(நூல் : சுனன் அபூதாவூத் : 4932)
• ஆயிஷா (ரழி) அவர்கள் வாழ்வில் நடந்த மிக முக்கியமான நிகழ்வு ஒன்று, ஒரு முறை சிறிய போர் ஒன்றுக்கு நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களை அழைத்து சென்றார்கள். இவர்களுடன் முனாபிக்களும் வந்து இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வழக்கம் எப்போதும் போருக்கு சென்றாலும் தங்கள் மனைவிகளிடையே சீட்டு குழுக்கி போட்டு அதில் யார் பெயர் வருகிறதோ அவர்களையே உடன் அழைத்து செல்லுவார்கள்.
• இந்த போரில் அவ்வாறே ஆயிஷா (ரழி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்து சென்றார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் தன்னுடைய மற்றொரு சகோதரி அஸ்மா (ரழி) அவர்களிடம் ஒரு கழுத்து மாலை கடன் வாங்கி போட்டு இருந்தார்கள்.
• கடைசி இரவு பகுதியில் சுய தேவை நிறைவேற்ற படைகளை விட்டு சற்று தூரமாக சென்று வந்தார்கள். அப்போது அவர்கள் அணிந்து இருந்து கழுத்து மாலை காணாமல் போக அவர்கள் அதை தேடி மீண்டும் வந்த வழியே சென்றார்கள்.
• திரும்பி படை இருக்கும் இடத்திற்கு வந்து பார்க்கும் பொழுது, படையினர் அனைவரும் புறப்பட்டு விட்டனர். பெண்களை அப்போது உள்ள காலத்தில் ஒரு பெட்டி போன்ற ஒன்றில் வைத்து சுற்றிலும் திரையிட்டு மறைத்து விடுவார்கள். பின்பு அதை தூக்கி ஒட்டகத்தின் மீது வைத்து விடுவார்கள்.
• ஆயிஷா (ரழி) அவர்கள் ஒல்லியாக இருந்ததால் உள்ளே நபர் உள்ளாரா இல்லை என்று பார்க்காமல் அனைவரும் சென்று விட்டார்கள். விட்டு சென்றவர்கள் மீண்டும் தேடி வருவார்கள் என்று அதே இடத்தில் அமர்ந்து விட்டார்கள்.
• படை சென்ற பின்பு ஏதேனும் பொருள் படை தங்கிய இடத்தில் விட்டு சென்று இருக்கும் என்று எப்போதும் ஒரு நபரை படை இருந்த இடத்திற்கு அனுப்பி பார்த்து வர சொல்லுவார்கள். அவ்வாறே அந்த நேரத்தில் சஃப்வான் (ரழி) அவர்கள் வருகிறார்கள். அவர்கள் வந்து பார்த்த பொழுது ஆயிஷா (ரழி) அவர்கள் ஹிஜாப் அணிந்து முகத்தை மறைத்த நிலையில் அசதியில் உறங்கி விட்டார்கள்.
• இதை பார்த்த ஸஹாபி இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்று சத்தமாக கூறினார் இதை கேட்ட ஆயிஷா (ரழி) அவர்கள் விழித்து விட்டார்கள். பின்பு அவர் ஒட்டகத்தை அவர்கள் பக்கம் அமர வைக்க ஆயிஷா (ரழி) அவர்கள் அதில் ஏறி கொண்டார்கள் பின்பு அந்த ஸஹாபி ஒட்ட கத்தின் கயிற்றை பிடித்து கொண்டு படைகள் இருக்கும் இடத்திற்கு வந்து விட்டார்கள்.
• இதை பார்த்த நயவஞ்சகர்கள் ஆயிஷா (ரழி) அவர்களை அந்த ஸஹாபியுடன் வைத்து அவதூறு பேச ஆரம்பித்து விட்டார்கள். இந்த செய்தி எல்லா இடங்களிலும் பரவ ஆரம்பிக்கிறது. ஆனால் இதை பற்றி எந்த ஒன்றும் ஆயிஷா (ரழி) அவர்களுக்கு தெரியாது. சில நாட்கள் கழித்து தான் மக்கள் தன்னை பற்றி இவ்வாறு பேசுகிறார்கள் என்று செய்தி அவர்களுக்கு தெரிய வர, தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று விசாரிக்க தான் கேள்வி பட்டு செய்தி உண்மை என்று தெரியவர அழ ஆரம்பித்து விட்டார்கள்.
• மூன்று நாட்கள் தாய் வீட்டில் அமர்ந்து சோகத்திலும், அழுகையிலும் இருந்தார்கள் தாயும், தந்தையும் ஆறுதல் கூறியும் அதை கேட்கும் மன நிலையில் அவர்கள் இருக்கவில்லை. பின்பு நபி (ஸல்) அவர்கள், அவர்களின் வீட்டுக்கு வந்து தவறு செய்து இருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேள் என்று கூறினார்கள்.
• நான் தவறு இழைக்கவில்லை என்று கூறினாலும் யாரும் என்னை நம்ப மாட்டார்கள். நான் தவறு செய்யவில்லை என்பதை அல்லாஹ் மட்டும் அறிந்தவன் என்று கூறினார்கள்.
• பின்பு அல்லாஹ் ஆயிஷா (ரழி) அவர்கள் தூய்மையானவர்கள் தவறு இழைக்கவில்லை என்று சூரா அந்நூரில் வசனம் 11 முதல் 21 வரை அருளினான். இதன் பின்பு தான் ஆயிஷா (ரழி) அவர்கள் நிம்மதி அடைந்தார்கள். இஸ்லாமிய வரலாற்றில் இந்த சம்பவத்தை உஃபுக் என்று அழைக்கப்படுகிறது.
(நூல் : ஸஹீஹ் புகாரி : 2661)
• இந்த சம்பவத்திற்கு பின்பு ஆயிஷா (ரழி) அவர்கள் மீது நபி (ஸல்) அவர்களுக்கு அதிகமான பிரியம் உண்டானது. மனைவிகளில் மற்றவர்களை விட அதிகமாக ஆயிஷா (ரழி) அவர்களையே நேசித்தார்கள்.
• நபி (ஸல்) அவர்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து மார்க்க பணி செய்தார்களோ அதே அளவுக்கு குடும்பத்துடன் நேரம் செலவழித்துள்ளார்கள். இதற்கு பல சான்றுகளை நாம் ஆயிஷா (ரழி) அவர்கள் வரலாற்றில் காணலாம்!
• நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களின் மகிழ்ச்சிக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரு முறை வெளியே சிலர் மல்யூத்தம் செய்து கொண்டு இருந்தார்கள் அதை ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் தோல்பட்டையின் மீது தலை வைத்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்கள் அது வரையும் நபி (ஸல்) அவர்களும் அதே இடத்தில் நின்று கொண்டு இருந்தார்கள்.
(நூல் : ஸஹீஹ் புகாரி : 988)
• மற்றொரு முறை நபி (ஸல்) அவர்கள் வெளியே செல்லும் பொழுது ஆயிஷா (ரழி) அவர்களை அழைத்து சென்றார்கள். அப்போது ஓர் இடத்தில் இருவரும் ஒட்ட பந்தயம் நடத்தினார்கள். முதலில் வைத்த ஒட்ட பந்தயத்தில் நபி (ஸல்) அவர்கள் வெற்றி பெற்றார்கள். இரண்டாவது முறை வைக்கும் பொழுது ஆயிஷா (ரழி) அவர்களுக்கு விட்டு கொடுத்து நபி (ஸல்) அவர்கள் தோற்று போனார்கள்.
(நூல் : முஸ்னத் அஹ்மத் : 25075)
• நபி (ஸல்) அவர்கள் பஜ்ர் அதான் கூறி விட்டால் சுன்னத் தொழுது விட்டு ஆயிஷா (ரழி) அவர்கள் விழித்து இருந்தால் அவர்களுடன் அமர்ந்து பேசி கொண்டு இருப்பார்கள்.
(நூல் : ஸஹீஹ புகாரி : 1119)
• நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா (ரழி) அவர்களை ஆயிஷ் என்று செல்ல பெயர் வைத்தும் அழைப்பார்கள்!
(நூல் : ஸஹீஹ முஸ்லீம் : 4837)
• இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மீது திருப்தியுடன் உள்ளார்களா அல்லது கோபவமாக உள்ளார்களா என்று நன்கு அறிந்து வைத்து இருந்தார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்கள் மீது காட்டிய அன்பு முக்கியத்துவம் பற்றி சொல்லி கொண்டே போகலாம்.
(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 4826)
• ஒரு முறை ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்கள், அன்னை ஆயிஷா (ரழி) அவர்களும், இன்னும் மற்ற ஸஹாபாக்களும் சென்று இருந்தார்கள். அப்போது ஆயிஷா (ரழி) அவர்கள் அணிந்து இருந்த கழுத்து மாலை மறுபடியும் தொலைந்து விட்டது, ஸஹாபாக்கள் அதை தேடி கொண்டு இருந்தார்கள்.
• பாலைவனம் வேறு பஜ்ர் தொழுகைக்கு நேரமும் ஆகி விட்டது தண்ணீரும் மிக குறைவாக உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு ஆயிஷா (ரழி) அவர்கள் செய்த தவறு தான் காரணம் என்று சில ஸஹாபாக்கள் கடித்து கொண்டார்கள். அபூபக்கர் (ரழி) அவர்களும் தன் மகளை கண்டித்தார்கள். அப்போது தான் அல்லாஹ், அல்குர்ஆன் வசனத்தை அருளி (அல்குர்ஆன் : 4 :43) தயம்மும் சட்டத்தை முஸ்லீம்களுக்கு கடமையாக்கினான்.
(நூல் : ஸஹீஹ் புகாரி : 3672)
• ஜிப்ரயில் (அலை) அவர்கள் மனித உருவத்தில், நபி (ஸல்) அவர்களை பார்க்க வந்தார்கள். அப்போது ஜிப்ரயில் (அலை) அவர்களை ஆயிஷா (ரழி) அவர்கள் பார்த்தார்கள். பின்பு நபி (ஸல்) அவர்களிடம் இந்த நபர் யார் என்று விசாரிக்கும் பொழுது, நபி (ஸல்) அவர்கள் ஆச்சரியத்துடன் உங்கள் கண்களுக்கு அந்த மனிதர் தெரிந்தாரா? என்று கேட்டு விட்டு அவர் தான் ஜிப்ரயில் (அலை) என்று கூறினார்கள். இவ்வாறு இரண்டு முறை நடந்துள்ளது.
(நூல் : ஸஹீஹ் புகாரி : 6602)
• ஆயிஷா (ரழி) அவர்கள் சிறந்த ஹதீஸ் அறிவிப்பாளாராக வரலாற்றில் திகழ்ந்துள்ளார்கள். மேலும் சிறந்த கல்வி ஞானம் மிக்கவராக இருந்துள்ளார்கள். இதனால் தான் பல மூத்த ஸஹாபாக்கள் கூட அன்னையிடம் வந்து மார்க்கம் குறித்த சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றார்கள்.
• அன்னையவர்கள் நபி (ஸல்) அவர்களின் தனிப்பட்ட வாழ்கை முறை, குடும்பவியல், சொத்துரிமை சட்டம், வாரிசுரிமை சட்டம், தூய்மை சட்டம் குறித்து நன்கு அறிந்து வைத்து இருந்தார்கள்.
• அதிகம் ஹதீஸ் அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் இவரும் ஒருவராக திகழ்ந்தார்கள். அன்னையவர்கள் மொத்தம் 2210 ஹதீஸ்களை அறிவிப்பு செய்துள்ளார்கள். இமாம் தகபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : மற்ற ஸஹாபி பெண்களை காட்டிலும், அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கினார்கள்.
• ஆயிஷா (ரழி) அவர்களுக்கு ஜிப்ரயில் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மூலமாக ஸலாம் கூறியுள்ளார்கள் அதற்கு அன்னை அவர்களும் பதில் ஸலாம் கூறினார்கள்.
(நூல் : ஸஹீஹ முஸ்லீம் : 4837)
• நபி (ஸல்) அவர்கள் கடைசி காலத்தில் உடல் நலமுற்று இருக்கும் பொழுது ஆயிஷா (ரழி) அவர்கள் வீட்டில் இருக்கவே ஆசைப்பட்டார்கள். அன்னையவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஓதி விடவும், மிஸ்வாக் கொண்டு பல் துலக்கவும் செய்தார்கள். ஆயிஷா (ரழி) அவர்களின் நெஞ்சின் மீது சாய்ந்து இருந்தவாரே நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.
• ஆயிஷா (ரழி) அவர்கள் வீட்டிலயே நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள். அப்போது அன்னையவர்களுக்கு 18 வயது ஆகி இருந்தது.
(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 2780)
• அன்னையவர்கள் ஹிஜ்ரி 58 ஆம் ஆண்டு தனது 66 வயதில் மரணித்தார்கள். அபூஹுரைரா (ரழி) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தி ஜன்னத்துல் பக்கீயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
@அல்லாஹ் போதுமானவன் 💞
No comments:
Post a Comment