தொழுகையில் இருக்கும் நபருக்கு நாம் ஸலாம் கூறலாமா?
சுஹைப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் தொழுதுக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு அருகே சென்றேன். அப்போது அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அதற்கு அவர்கள் சாடை செய்து பதிலளித்தார்கள்!
(நூல் : அபூதாவூத் : 925 | நஸயீ : 1186 | திர்மிதி : 367 | தரம் : ஸஹீஹ் : அல்பானி (ரஹ்))
ஷேக் முஹம்மது இப்னு உதைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
1) தொழுது கொண்டுக்கும் நபருக்கு ஸலாம் கூறுவது அனுமதிக்கப்பட்ட செயலாகும்! நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு ஸலாம் கூறிய நபரை கண்டிக்க வில்லை!
2) ஆனால், நாம் ஸலாம் கூறுவதால் அவருக்கு தொழுகையில் குழப்பம் ஏற்பட்டு விடும் யென்றால் நாம் ஸலாம் கூறுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்!
3) நாம் தொழுகையில் ஸலாம் கூறிய நபருக்கு பதில் அளிக்க ஒரு போதும் வாயினால் கூற கூடாது! ஒரு கையை மட்டும் சற்று உயர்த்தி சைகையினால் மட்டுமே பதில் ஸலாம் கூறவேண்டும்!
4) நமக்கு ஸலாம் கூறிய நபர் நாம் தொழுது முடிக்கும் வரை அந்த இடத்தில் இருந்தால் நாம் தொழுத பின்பு அவருக்கு வாயினால் மீண்டும் பதில் ஸலாம் கூறலாம்! அவர் சென்று விட்டால் நாம் எதுவும் செய்யவேண்டியது கிடையாது!
(Fatwa : Liqa’ al-Baab il-Maftooh : 24/31)
@அல்லாஹ் போதுமானவன் 

No comments:
Post a Comment