பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

அல்லாஹ்வின் அல் - வித்ர் - السيد என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம் 💞 ~ அல் அஸ்மா உல் ஹுஸ்னா


அல்லாஹ்வின் அல் - வித்ர் - السيد என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம் 💞
~ அல் அஸ்மா உல் ஹுஸ்னா : 68
• சென்ற பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அர் - ரஃபீக் பற்றி பார்த்தோம்! அதன் தொடராக இந்த பதிவில் அல்லாஹ்வின் மற்றொரு அழகிய பெயரான அல் - வித்ர் பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
• அல் - வித்ர் என்றால் அவன் தனித்தவன், அவனுக்கு யாதோர் இணையுமில்லை என்பது பொருளாகும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான - பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 6410)
• அல் வித்ர் பெயரானது, அவனது ஏகத்துவத்தை அறிவிக்கக்கூடிய பெயர்களில் ஒன்றாகும். அவனுக்கு இணையான யாரும் எதுவும் இல்லை. திருக்குர்ஆனில் இதுகுறித்து ஏராளமான வசனங்கள் வந்துள்ளன.
• அல்லாஹ் தனித்தவன், வணக்க வழிபாடுகளில் தனித்தவனாக உள்ளான். அவனுடைய செயல்களில் தனித்தவனாக உள்ளான், அவனுக்கு நிகராக யாரும் இல்லை. அவனே இப்பிர பஞ்சத்திலுள்ள அனைத்தையும் படைத்தவன், பராமரிக்கக் கூடியவன், நிர்வகிக்கக்கூடியவன் என்றும் நம்புவதாகும்.
• அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும் நமக்கு வலியுறுத்துவது ஒன்றை தான் அல்லாஹ் தனித்தவன் என்பதை. அல்லாஹ் அல் வித்ர் என்றால் அவன் தனித்தவன், அவனுக்கு இணைத்துணை யாரும் கிடையாது.
• அதே போல் அல் வித்ர் என்ற வார்த்தையை நாம் அமல்களில் ஒற்றைப்படையாக செய்வதற்கு பயன் படுத்துவதை காணலாம். உதாரணமாக : உளூ செய்யும் போது ஒற்றைப்படையாக செய்கிறோம், தொழுகையில் ஓதும் திக்ர்கள், தொழுத பின்பு செய்ய கூடிய திக்ர்கள் ஒற்றைப்படையாக செய்கிறோம்.
• அல்லாஹ்வை அல் வித்ர் ஆக உள்ளான் எனவே நாம் அவனை வணக்க வழிபாடுகளில், செயல்களில், பண்புகளில் ஒர்மைப்படுத்தக்கூடியவர்களாக நாம் ஆக வேண்டும்.
• இன்ஷா அல்லாஹ் அஸ்மா உல் ஹுஸ்னா தொடரின் அடுத்த பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அல் முஃதி பற்றி பார்ப்போம்!
@அல்லாஹ் போதுமானவன் 💞
No photo description available.
All reactions:
37


 

No comments:

Post a Comment