ஸகாதுல் ஃபித்ர் (பெருநாள் தர்மம்) பற்றி அறிந்து கொள்ளுவோம் 
• இது ஒவ்வொரு முஸ்லீம் மீதும் இந்த ஸகாதுல் ஃபித்ர் கடமையாகும்! கொடுக்கா விட்டால் குற்றம் ஏற்படும்!
இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது :
ரமளான் நோன்புப் பெருநாள் தர்மத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு கடமையாக்கினார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 1791)
• ஸதக்கதுல் ஃபித்ர் உடைய சட்டங்கள் ஒன்று தான் ஆனால் மத்ஹப் சேர்ந்தவர்கள் நான்கு வகையான சட்டம் நான்கு வகையான ஸதக்கதுல் ஃபித்ர் அளவை கூறுவார்கள் இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் கிடையாது!
• ஸகாதுல் ஃபித்ரை மூன்று நோக்கங்களுக்காக இதை அனைத்து முஸ்லீம்கள் மீது கடமை ஆகும் !
1) நோன்பாளி வீணான காரியங்கள், பேச்சுக்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாக ஸகாதுல் ஃபித்ரை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்!
2) ஏழைகளும் பெருநாள் அன்று மகிழ்ச்சியுடன் கொண்டாட அவர்களுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டும் நோன்புப் பெருநாள் தர்மத்தை (ஸகாதுல் பித்ர்) நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்!
3) ரமலானில் முழுமையாக நோன்பு வைக்கவும் - இரவில் நின்று வணங்கவும் - நம்மால் இயன்ற அளவுக்கு நல்ல அமல்கள் செய்திடவும் அல்லாஹ் உதவி புரிந்ததற்கு நன்றி செலுத்த விதமாக நாம் ஸகாதுல் ஃபித்ர் எனும் தர்மத்தை கொடுக்கின்றோம்!
(நூல் : சுனன் இப்னுமாஜா : 1817 | சுனன் அபூதாவுத் : 1427)
முஸ்லிம்களில் சுதந்திரமானவர்கள் ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள்! என அனைவரின் மீதும் ஸகாதுல் ஃபித்ர் கொடுப்பது கடமை ஆகும்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 1795)
• ஸதக்கதுல் ஃபித்ர் நோன்பு கடமையான அனைத்து முஸ்லீம்கள் மீதும் கட்டாய கடமையாகும்! அவர்கள் நோன்பு வைத்தாலும் சரி நோன்பு வைக்க வில்லை என்றாலும் சரி அவர்கள் மீது நோன்பு கடமை இல்லை என்றாலும் சரி ஸதக்கதுல் ஃபித்ர் கொடுக்க வேண்டும்!
• ஒருவர் தனக்காக ஸகாதுல் ஃபித்ர் கொடுத்து கொள்ளலாம் இது சிறந்தது ஆகும் அல்லது ஒரு முஸ்லீமின் கீழ் உள்ள அவனின் மனைவி பிள்ளைகள் பெற்றோர்கள் என அனைவருக்கும் சேர்த்து அந்த குடும்பத்தின் பொறுப்புதாரி ஸகாதுல் ஃபித்ர் வழங்க வேண்டும்!
(நூல் : பைஹகீ : 7685)
• கர்ப்பிணி பெண் தனது வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஸகாதுல் ஃபித்ர் கொடுக்க வேண்டியது கிடையாது! அவளுக்கு மட்டும் கொடுத்தால் போதுமானது ஆகும்!
• ஸதக்கதுல் ஃபித்ரை நம்முடைய வீடுகளில் அருகில் வசிக்கும் அன்றாடம் கஷ்டம் படும் ஏழை முஸ்லீம்களுக்கு வழங்க வேண்டும்!
• ஸதக்கதுல் ஃபித்ரை ஒரே நபருக்கும் நாம் கொடுக்கலாம் அல்லது அதை பிரித்து பலருக்கும் கொடுக்கலாம்!
• ஒரு போதும் ஸதக்கதுல் ஃபித்ரை வீடு கட்ட அல்லது பள்ளி மதரஸா கட்டவோ கொடுக்க கூடாது!
• நபி (ஸல்) அவர்கள் ஸதக்கதுல் ஃபித்ர் ஆக பேரீத்தபழம், கோதுமை, திராச்சை கொடுத்து உள்ளார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 1795)
• நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காலத்தில் அரபு மக்களின் பிரதான உணவு ரொட்டி பேரீத்தபழம் தான்! அதனால் நம்முடைய நாட்டில் பிரதான உணவான அரிசி கோதுமை இது போன்றதை மட்டும் மக்களுக்கு வழங்க வேண்டும்!
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது :
முஸ்லிம்களில் சுதந்திரமானவர்கள், அடிமைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய அனைவர் மீதும் பேரீச்சம் பழத்தில் ஒரு "ஸாஉ" அல்லது தோல் நீக்கப்படாத (வாற்) கோதுமையில் ஒரு "ஸாஉ" (ஏழைகளுக்கு வழங்குவது கடமையாகும்) என ரமளான் நோன்புப் பெருநாள் தர்மத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு நிர்ணயித்தார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 1791)
• நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸாஉ ஸதக்கதுல் ஃபித்ர் ஆக கடமையாக்கினார்கள்! ஸாஉ என்பது அரபு மக்களிடம் காணப்பட்ட ஒரு அளவீட்டு முறையாகும்!
• நம்முடைய அளவீட்டின் படி ஒரு ‘ஸாஉ’ என்பது 2.5 kg அல்லது 3 kg யை குறிக்கும்!
(மஜ்மூ ஃபதாவா : ஷேக் இப்னு பாஸ் (ரஹ்) : 14 / 200)
• ஒரு வீட்டில் 5 நபர்கள் உள்ளார்கள் என்றால் நாம் 5 நபர்களுக்கும் கணக்கு செய்து ஸதக்கதுல் ஃபித்ர் கொடுக்க வேண்டும் : 5 × 3 = 15 கிலோ (அரிசி அல்லது கோதுமை)
• உங்களிடம் வசதி உள்ளது அல்லது இன்னும் அதிகம் கொடுக்க விரும்பினால் இதை விட அதிகமும் கொடுக்கலாம்!
1) ஸதக்கதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகைக்கு முன்னால் கொடுக்கப்பட்ட வேண்டும்! பெருநாள் தொழுகை ஆரம்பம் ஆகி விட்டால் ஸதக்கதுல் ஃபித்ர் உடைய நேரம் முடிந்து விடும்!
• ஸதக்கதுல் ஃபித்ர் பெருநாளுக்கு முந்தைய நாளின் சூரிய மறைவிலிருந்து இதன் நேரம் ஆரம்பம் ஆகும்! அல்லது,
2) பெருநாள் ஒரு நாளைக்கு அல்லது இரண்டு நாளைக்கு முன்னால் கூட நாம் ஸதக்கதுல் ஃபித்ரை வழங்கலாம்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1511)
• பெருநாள் தொழுகைக்கு முன்னால் வழங்குவது சிறந்தது ஆகும்! பெருநாள் தொழுகைக்கு பின்பு ஸதக்கதுல் ஃபித்ரை நாம் கொடுத்தால் அது தர்மமாக ஆகி விடும்! ஸதக்கதுல் ஃபித்ரில் சேராது!
(நூல் : சுனன் அபூதாவூத் : 1609)
• பெருநாள் தர்மத்தினைப் பெறக்கூடிய மக்கள் பெருநாளைக்கான உணவுகளை தயார்படுத்திக்கொள்ள வசதியாக ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் முன்னதாக ஸதக்கதுல் ஃபித்ர் கொடுத்து விடுவது சிறந்தது!
• இன்னும் சில ஊர்களில் ஸதக்கதுல் ஃபித்ரை ரமலான் ஆரம்பத்தில் இருந்து கொடுக்க ஆரம்பம் செய்து விடுவார்கள் ஆனால் இவ்வாறு செய்ய கூடாது!
இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள் :
நபி (ஸல்) அவர்கள் ஸதக்கதுல் ஃபித்ராவாக ஒரு ஸாஉ (உணவுப்பொருளை) கடமையாக்கினார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1503)
• நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் தீனார் அல்லது திர்ஹம் என்று பண மதிப்பு இருந்தும் நபி (ஸல்) அவர்கள் உணவு பொருட்களை தான் ஸதக்கதுல் ஃபித்ர் ஆக கடமை ஆக்கினார்கள்!
1) ஸதக்கதுல் ஃபித்ர் உணவு பொருளுக்கு பதிலாக அதனுடைய விலையை பணமாக கொடுப்பது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமானது ஆகும்!
2) ‘ஸகாத்துல் ஃபித்ர்’ இபாதத்தாக இருப்பதால் அதைக் குறிப்பிட்ட விதத்திலேயே செய்ய வேண்டும்!
3) ஒரு சிலர் ஏழைகளின் நலன் நாடியே பணத்தை வழங்கலாம் என்று கூறுகின்றனர்! ஸகாத்துல் ஃபித்ர் உணவு பொருளாக தான் கொடுக்க வேண்டும் என்று தெளிவான ஆதாரம் இருக்கும் போது, ஏன் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத ஒன்றின் பக்கம் நாம் செல்ல வேண்டும்!?
4) நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலோ அல்லது ஸஹாபாக்கள் வாழ்ந்த காலத்திலோ அல்லது தாபியீன்கள், தபா தாபியீன்கள் காலத்திலோ யாரும் ஸதக்கதுல் ஃபித்ரை பணமாக கொடுத்தார்கள் என்று ஒரு ஸஹீஹான ஹதீஸ் கிடையாது!
உதாரணமாக : ஸதக்கதுல் ஃபித்ரை அரிசி அல்லது கோதுமை ஆக கொடுத்தால் நமது கடமை நீக்கி விடுமா அல்லது ஏற்று கொள்ளப்படுமா என்றால் அனைத்து மார்க்க அறிஞர்களின் கருத்து ஏற்று கொள்ளப்படும் என்று!
• ஆனால் பணமாக கொடுக்கும் போது ஏற்று கொள்ளப்படுமா அல்லது படாத என்பதை உறுதியாக கூற முடியாது!
• அதனால் நபி (ஸல்) அவர்களின் வழிமுறை பேணி நாம் ஸதக்கதுல் ஃபித்ர் ஆக அரிசி அல்லது கோதுமை கொடுக்க வேண்டும்!
• நீங்கள் விருப்பம் பட்டால் ஸதக்கதுல் ஃபித்ர் கொடுக்கும் போது அதனுடன் சேர்த்து தனியாக ஸதகாவாக பணம் கொடுக்கலாம் இது உங்களின் தனிப்பட்ட விருப்பம் ஆகும்! ஆனால் ஸகாத்துல் ஃபித்ர் முழுவதும் பணமாகவே கொடுக்க கூடாது!
@அல்லாஹ் போதுமானவன் 


No comments:
Post a Comment