பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

மறுமை நாளில் அல்லாஹ் பார்க்காத, பேசாத, தூய்மைபடுத்தாத 9 நபர்களை பற்றி உங்களுக்கு தெரியுமா?


மறுமை நாளில் அல்லாஹ் பார்க்காத, பேசாத, தூய்மைபடுத்தாத 9 நபர்களை பற்றி உங்களுக்கு தெரியுமா?
மனிதன் பலகீனமான படைக்கப்பட்டு உள்ளான்! இதனால் சில நேரம் பாவத்தில் விழுந்து விடுகிறான்! இதனால் தான் அல்லாஹ் தவ்பா எனும் ஒன்றை வைத்து உள்ளான்!
• ஆனால் இன்னும் சிலர் அந்த பாவத்திலயே நிலைத்து விடுகிறார்கள்! இதனால் உலக லாபத்தை மட்டும் பார்க்கிறார்கள்! அல்லாஹ் பாதுகாக்கனும்! அல்லாஹ் இதனால் தான் சிலரை மறுமை நாளில் அவர்களிடம் பேச மாட்டான், அவர்களை பார்க்க மாட்டான் இன்னும் அவர்களை தூய்மைப்படுத்தவும் மாட்டான்!
• இதில் அல்லாஹ் பார்க்க மாட்டான் பேச மாட்டான் என்பது, அல்லாஹ் இவர்களை நல்லவார்த்தைகளால் அன்போடு பேசமாட்டான்! கருணையோடு பார்க்க மாட்டான்! என்பதாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்!
• யார் இவர்கள் எதனால் இந்த தண்டனையை அல்லாஹ் கொடுக்கிறான் என்பதை பற்றி பார்ப்போம்!
1) வேதத்தை மறைத்தவர்கள் :
எவர்கள் வேதத்தில் அல்லாஹ் இறக்கியவற்றை மறைத்துவிட்டு அதற்கு விலையாகச் சொற்பத் தொகையைப் பெற்றுக்கொள்கின்றனரோ அவர்கள் நிச்சயமாகத் தங்கள் வயிற்றில் நெருப்பையே நிரப்பிக் கொள்கிறார்கள். மறுமையில் அல்லாஹ் அவர்களுடன் (விரும்பிப்) பேசவும் மாட்டான். அவர்களை (மன்னித்து)ப் பரிசுத்தமாக்கி வைக்கவும் மாட்டான். அவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனைதான் உண்டு!
(அல்குர்ஆன் : 2 : 174)
2) பொய்சத்தியம் செய்து வியாபாரம் செய்பவன்!
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேசமாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு துன்பம் தரும் வேதனை தான் உண்டு அதில், (ஒருவன் தன் பொருளை அதிக விலைக்கு) விற்பதற்காக வாடிக்கையாளர் கொடுக்கும் விலையை விட அதிக விலைகொடுத்து வாங்கியதாக (பொய்) சத்தியம் செய்தவன்!
(நூல் : ஸஹீஹ் புகாரீ : 2369)
3) தேவைக்கு போக உபரியான தண்ணீரை பிறருக்கு தர மறுப்பவன் :
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேசமாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு துன்பம் தரும் வேதனை தான் உண்டு அதில்,
தன் தேவைக்கு மேல் எஞ்சியிருந்த தண்ணீரை (மக்கள் உபயோகிப்பதைத்) தடுத்தவன் ஆவான். (மறுமையில்) அவனை நோக்கி உன் கரங்கள் உருவாக்காத தண்ணீரின் மீதத்தை மக்கள் உபயோகிக்கவிடாமல் தடுத்ததைப் போலவே இன்று நான் எனது அருளிலிருந்து உன்னைத் தடுக்கிறேன் என்று அல்லாஹ் கூறுவான்!
(நூல் : ஸஹீஹ் புகாரீ : 2369)
4) கணுக்காளுக்கு கீழே ஆடை அணியும் ஆண் :
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேசமாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு துன்பம் தரும் வேதனை தான் உண்டு அதில், தமது ஆடையை (கணுக்காளுக்கு) கீழே இறக்கிக்கட்டியவர்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் :171)
• பெண்களுக்கு இதில் விதி விலக்கு உண்டு! பெண்கள் கரண்டை காலுக்கு கிழே பாதம் மறையும் வரை ஆடை அணியலாம்!
(நூல் : சுனன் திர்மிதி : 1653)
5) செய்த உதவியை சொல்லிக்காட்டுபவன் :
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேசமாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு துன்பம் தரும் வேதனை தான் உண்டு அதில், (செய்த உபகாரத்தை) சொல்லிக்காட்டுபவர்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் :171)
6) விபச்சாரம் செய்த முதியவர் :
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேசமாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு துன்பம் தரும் வேதனை தான் உண்டு அதில் ஒருவன், விபச்சாரம் புரிகின்ற முதியவர்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் :172)
7) மக்களிடையே பொய் கூறும் அரசன் :
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேசமாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு துன்பம் தரும் வேதனை தான் உண்டு அதில் ஒருவன் , பொய் கூறும் அரசன்
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் :172)
😎 பெருமையடிக்கும் ஏழை :
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேசமாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு துன்பம் தரும் வேதனை தான் உண்டு அதில் ஒருவன், பெருமையடிக்கும் ஏழை!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் :172)
9) ஆட்சித் தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே பைஅத் செய்து கொடுத்தவர் :
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேசமாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு துன்பம் தரும் வேதனை தான் உண்டு அதில் ஒருவன்,
ஆட்சித் தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்து கொடுத்தவர் ஆவார். ஆட்சித் தலைவரிடமிருந்து ஆதாயம் கிடைத்தால் (பிரமாணத்தின் அடிப்படையில்) அவரிடம் விசுவாசமாக நடந்துகொள்வார். கிடைக்காவிட்டால் விசுவாசமாக நடந்து கொள்ளமாட்டார்.
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 173)
• அல்லாஹ் நம்மை இவ்வாறான செயல்களை விட்டும் பாதுகாப்பானாக ஆமின்!
@அல்லாஹ் போதுமானவன் 💞


 

No comments:

Post a Comment