அல்குர்ஆனின் ஞானமுடையவர், மதினாவின் முதல் அழைப்பாளர் முஸ்அப் இப்னு உமைர் ரழியல்லாஹு அன்ஹு வாழ்கை வரலாறு சுருக்கம் 💞
• முஸ்அப் இப்னு உமைர் (ரழி) மக்காவின் குறைஷி குலத்தில் பனூ அப்துத்தார் பிரிவை சேர்ந்த உமைர் இப்னு ஹாஷிம் மற்றும் ஹுனாஸ் பின்த் மாலிக் ஆகியோரின் மகனாக மக்காவில் பிறந்தார்கள்.
• இவரின் மனைவி பெயர் ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரழி), இவர்கள் நபி (ஸல்) அவர்களின் மனைவியான ஜனைப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்களின் சகோதரி மேலும் ஹம்ஜா (ரழி) அவர்கள் இவர்களுக்கு தாய் மாமன் ஆவார்கள்.
• இவரது பெற்றோர் மக்காவில் பெரிய செல்வந்தர்களாவர். இவர் இளம் வயதில் குறைஷிகள் கூட்டும் கூட்டங்களில் கலந்து கொள்ள இவரது பெற்றோர் அனுமதி அளித்திருந்தனர். இவரது தோற்றம் இவர் மிகவும் அழகானதாகவும், மேலும் இவர் மிகவும் அழகாக உடையணிபவராகவும் இருந்தார்.
• இவர் கடைத்தெருவில் செல்லும் போது, எல்லோரும் இவரைப் பார்த்து வியந்து போவார்கள். இவர் வழக்கமாக அணியும் ஆடை, மற்றும் இவரது காலணிகள் யமனில் செய்யப்பட்டடு இருந்தன!!
• இஸ்லாம் மக்காவில் பரவிய ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை இவர் ஏற்றுக்கொண்டார்கள். பின்பு அர்கம் (ரழி) அவர்கள் வீட்டில் இருந்து மார்க்கத்தை கற்றுகொண்டார்கள். இவர் இஸ்லாத்தை ஏற்றது அவரின் பெற்றோர்களுக்கு தெரியவர, அவரின் தயார் வீட்டில் அடைந்து கொடுமை செய்து வந்தார்கள் இருந்தாலும் இவர் தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்தார்கள்.
• பின்பு முஸ்லீம்கள் அபிஸினியாவிற்கு ஹிஜ்ரத் செய்து செல்ல போகிறார்கள் என்று தெரியவர இவரும் வீட்டில் இருந்து வெளியேறி அவர்களுடன் சேர்த்து சென்று விட்டார்கள்.
• பின்னர் சில காலம் கழித்து மக்காவில் முஸ்லீகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலை அமைந்து விட்டது என்ற தவறான தகவலை நம்பி மீண்டும் மக்காவிற்கு வர அவர் பெற்றோர்களிடம் இவர் மாட்டி கொண்டார்.
• மீண்டும் வீட்டில் இவரை சிறை வைத்து சரியாக உணவு கொடுக்காமல் கொடுமை செய்தார்கள் அப்போதும் இவர் தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்தார். பின்பு இவரை பெற்றோர்களே மானத்தை மறைக்கும் அளவுக்கு பழைய ஆடை ஒன்று மட்டும் அணிய கொடுத்து விட்டு வீட்டில் இருந்து விரட்டி விட்டார்கள். இவர் நபி (ஸல்) அவர்களின் சபைக்கும் வரும் பொழுது இவரின் நிலையை பார்த்து ஸஹாபாக்கள் கண்களக்கி விட்டார்கள்.
• மக்கா காஃபிர்கள் பனு ஹாஷிம் கிளை நபி (ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்று அந்த குலத்தை ஊருக்கு வெளியே 3 வருடங்கள் ஒதுக்கி வைத்தார்கள். அதிலும் இவர் நபி (ஸல்) அவர்களுடனே இருந்தார்.
• மார்க்கபற்று மிக்க முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்கள் அதுவரை இறக்கி இருந்த அல்குர்ஆன் வசனங்களை முழுவதும் மனனம் செய்து இருந்தார்கள். இதனால் இவருக்கு “அல்முக்ரி” (அல்குர்ஆனின் ஞானமுடையவர்) என்று பெயரும் வந்தது.
• மதினாவில் இருந்து சில நபர்கள் வந்து நபி (ஸல்) அவர்களின் கையினால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்! பின்பு தங்கள் ஊரிலும் மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்க வேண்டும் அவர்களுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் இதற்கு யாரேனும் மார்க்கம் கற்றவர்களை அனுப்புமாறு நபி (ஸல்) அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள்.
• மார்க்கபற்றும், மார்க்க கல்வியிலும் நன்கு தேற்றிபெற்றுந்த வாலிபரான முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அவர்களுடன் அனுப்பி வைத்தார்கள்!
• முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்கள் மதீனாவில் அஸ்அது இப்னு ஜுராரவின் வீட்டில் தங்கினார். பின்பு மதீனாவாசிகளிடையே மிக உற்சாகத்துடன் இஸ்லாமைப் இருவரும் பரப்பினார்கள். நபி (ஸல்) அவர்கள் வருவதற்கு முன்பே மதினாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் இஸ்லாம் மார்க்கத்தை பற்றி செய்தி இவர்கள் சேர்த்து விட்டார்கள்.
• பழைய ஆடை ஒன்றே அணிந்து கொண்டு மக்களிடையே இஸ்லாம் பற்றி அறிவித்து கொண்டு இருந்தார்கள். இவருடைய பிரச்சாரம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது இவரின் மூலமே இவருடைய ஸஅத் இப்னு முஆது, உஸைத் இப்னு ஹுதைரும் இஸ்லாத்தைத் தழுவினர்கள்.
• பின்பு அடுத்த வருடம் ஹஜ் செய்ய வந்த மதினாவாசிகள் இந்த முறை இஸ்லாத்தை ஏற்க 73 ஆண்களும், 2 பெண்களும் வந்தனர். நபி (ஸல்) அவர்களிடம் அனைவரும் இஸ்லாத்தை ஏற்பதாக கூறி வாக்குறுதி கொடுத்தார்கள். இதன் பின்பு தான் நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள்.
• நபி (ஸல்) அவர்களும் மக்காவில் இருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த பிறகு, மக்கா காஃபிர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பத்ர் போர் நடைபெற்றது. அப்போது கொடியை முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்களிடமே நபி (ஸல்) அவர்கள் வழங்கினார்கள்.
• உஹது போரிலும் இவர் கலந்து கொண்டார். அப்போதும் இஸ்லாமிய கொடியை இவரிடமே நபி (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். போரில் கடுமையாக இவர் சண்டையிட்டார்கள்.
• நபி (ஸல்) அவர்களைத் தாக்கச் சென்று கொண்டிருந்த இப்னு கமிஆ மற்றும் அவனது நண்பர்களை எதிர்த்து சண்டையிட்டார். அவர்கள் முஸ்அபின் வலக்கரத்தை வெட்டிவிடவே கொடியை தனது இடக்கரத்தால் பற்றிக் கொண்டார். பின்பு, இடதுகையையும் வெட்டிவிடவே மண்டியிட்டு தனது கழுத்தாலும் நெஞ்சாலும் அதை அணைத்துக் கொண்டார். பின்பு அவரை வெட்டினார்கள். முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்கள் போரில் ஷஹீத்தானர்கள்.
• முஸ்அப் தோற்றத்தில் நபியவர்களைப் போன்று இருந்தார்கள். இதனால் எதிரி இப்னு கமிஆ முஸ்அபைக் கொன்று விட்டு, தான் நபியவர்களைக் கொன்றதாக எண்ணி, இணைவைப்பவர்களிடம் சென்று நிச்சயமாக முஹம்மது கொல்லப்பட்டார் என்று கூச்சலிட்டான்.
(நூல் : இப்னு ஹிஷாம்)
• இவரை வெட்டி வீழ்த்தியதும், தான் நபி (ஸல்) அவர்களையே வெட்டி வீழ்த்தி விட்டதாகக் இப்னு கமிஆ கூக்குரலிடவே அது கேட்டு முஸ்லிம்கள் பெரிதும் சோர்வுற்றார்கள். முஸ்லிம்களுக்குத் தோல்வி முகம் காட்டத் தொடங்கியது. பின்னர் நபி (ஸல்) அவர்கள் உயிரோடிருப்பதை அறிந்து முஸ்லிம்கள் வீரத்துடன் போரிட்டார்கள். முஸ்அப் (ரழி) கொல்லப்பட்டவுடன் நபி (ஸல்) அவர்கள் கொடியை அலீ இப்னு அபூதாலிபிடம் வழங்கினார்கள்.
• போர் முடிந்த பின்பு நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் போரில் ஷஹீத் ஆனவர்களை அடையாளம் கண்டு அடக்கம் செய்ய ஆரம்பம் செய்தார்கள். போரில் ஷஹீத் ஆனவர்களின் உடலை மறைப்பதற்குப் போதுமான துணிகள் கூட அப்போது இருக்கவில்லை.
• பின்பு நபி (ஸல்) அவர்கள் முஸ்அப் (ரழி) அவர்களின் தலைப் பகுதியை துணியால் மறைத்து விட்டு, அவருடைய கால்கள் மீது "இத்கிர்" எனும் ஒருவகை வாசனைப் புல்லை இட்டு மறைக்குமாறு கூறினார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 1715)
• போர் முடிந்து மதினாவிற்கு நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் திரும்பினார்கள். ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்களை பார்த்து நபி (ஸல்) உன் சகோதரனின் மறுமை வாழ்கைக்கு துஆ செய்து கொள் என்று கூறினார்கள். இவரின் சகோதரன் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரழி) அவர்கள் போரில் ஷஹீத் ஆகி இருந்தார்கள். இதை கேட்ட அவர்கள் நாம் அனைவரும் அல்லாஹ்விற்கே உரியவர்கள், அவனிடமே திரும்ப செல்ல இருக்கின்றோம். யா அல்லாஹ் அவரை மன்னிப்பாயாக, அவர் மீது கருணை பொழிவாயாக என்று கூறினார்கள்.
• பின்பு, நபி அவர்கள் உன்னுடைய தாய் மாமனின் மறுமை வாழ்கைக்கு துஆ செய்து கொள் என்று கூறினார்கள் இதை கேட்டதும் மேலே உள்ளவாறு மீண்டும் கூறினார்கள். இவரின் தாய் மாமன் ஹம்ஜா (ரழி) அவர்கள் போரில் ஷஹீத் ஆகி இருந்தார்கள்.
• பின்பு, நபி அவர்கள் உன்னுடைய கணவன் முஸ்அப் (ரழி) அவர்களுக்கு மறுமை வாழ்கைக்கு துஆ செய்து கொள் என்று கூறினார்கள். இதை கேட்டதும் அழுகையை அடக்க முடியாமல் அழ ஆரம்பித்து விட்டார்கள்.
• பின்னால் சிலகாலம் கழித்து, தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி) அவர்கள், இவர்களை மறுமணம் செய்து கொண்டார்கள்.
• அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் முன் உணவு வைக்கப்பட்டால் அழ ஆரம்பித்து விடுவார்கள். முஸ்அப் (ரழி) அவர்களை போன்றவர்கள் எல்லாம் உலகத்தில் எதையும் பெறாமல், முழுவதையும் மறுமைக்கு சேகரித்து வைத்து எடுத்து சென்று விட்டார்கள். எங்களுக்கு எல்லாமே உலகத்திலேயே கிடைத்துவிடுமோ, மறுமையில் எதுவுமே கிடைக்காமல் போய் விடுமோ என்று!
• இன்றைய காலத்தில் உள்ள வாலிபர்களுக்கு இவர்களின் வாழ்கை வரலாறு சிந்திக்க வேண்டிய ஒன்றாக இருக்கும்!
@அல்லாஹ் போதுமானவன் 💞
No comments:
Post a Comment