பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

ஷஃபான் மாதத்தின் சிறப்புகள் பற்றி அறிந்து கொள்ளுவோம்


ஷஃபான் மாதத்தின் சிறப்புகள் பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞
இஸ்லாத்தில் 8 வது மாதம் தான் ஷஃபான் மாதம் ஆகும்! ரஜப் மற்றும் ரமலான் இரண்டு மாதத்திற்கு இடையில் இந்த மாதம் வருவதால் இந்த மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் அதிகம் நோன்பு வைத்து உள்ளார்கள்!
• அல்லாஹ்வின் நாட்டடினால் ரஜப் மாதம் இன்றுடன் முடிகிறது! இன்றைய மஹ்ரிப் பின்பு இருந்து (11 / 02 / 2024) ஷஃபான் மாதம் ஆரம்பம் ஆகுகிறது! இன்ஷாஅல்லாஹ் அடுத்தது ரமலான் மாதம் தான்!!!!
• ரமலானில் நோன்பு வைத்தால் அனைவரும் அறிந்து கொள்ளுவார்கள் ஆனால் இந்த ஷஃபான் மாதத்தில் நோன்பு வைத்தால் பலரும் நம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள் நம்மை படைத்த அல்லாஹ்வை தவிர! எனவே இந்த மாதத்தில் நோன்பு வைப்பதால் இக்லாஸ் (மன தூய்மை) உடன் நம்மால் அமல் செய்ய வாய்ப்பும் நமக்கு கிடைக்கிறது!
• பலர் நோன்பு என்றாலே ராமலனில் மட்டும் வைக்கிறார்கள் இதனால் ஒரு சில நோன்புலயே சோர்ந்து விடுகிறார்கள் இன்னும் சிலர் முடியவில்லை என்று விட்டு விடுகிறார்கள்!
• நாம் ரமலான் வருவதற்கு முன்பு இந்த மாதத்திலயே நோன்பு வைக்க ஆரம்பம் செய்தால் ரமலானில் நோன்பு வைப்பது நமக்கு எளிதாக இருக்கும்!
💟 ஷஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு நேற்க்கலாம் :
• ஷஃபான் மாதத்தில் நம்மால் இயன்ற அளவுக்கு நோன்பு வைக்கலாம் இது சுன்னாஹ் தான் கட்டாயம் இல்லை! ஷஃபான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் அதிகம் நோன்பும் வைத்து உள்ளார்கள் பிறறையும் நோன்பு வைக்க வலியுறுத்தி உள்ளார்கள்!
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் :
ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை! ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1969)
💟 ஷாபானில் அமல்கள் உயர்த்தப்படுகின்றன :
உஸாமதிப்னு ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
நபி (ஸல்) அவர்களிடம் : அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறிய போது,
ஷாபான் - ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும்! இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள்!
இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன! இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமல் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள்!
(நூல் : சுனன் நஸயீ : 2357)
• இதன் காரணமாகவே நபி (ஸல்) அவர்கள் இந்த மாதத்தில் அதிகம் நோன்பு வைத்து உள்ளார்கள்! இதை தவிர வேறு எந்த காரணத்திற்கும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைக்க வில்லை!
• அதே போன்று இதை தவிர ஷஃபானில் நோன்பு நேற்பதற்கு சிறப்புகள் வேறு எதுவும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸ்கள் கிடையாது!
• ஷஃபானில் நோன்பு நேற்ப்பதின் சிறப்புகள் என்று ஏராளமான செய்திகள் உண்டு ஆனால் அவை அனைத்துமே மிக பலகீனமான ஹதீஸ் அல்லது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியாகும்!
💟 தொடர் நோன்பு நேர்க்க கூடாது :
• இஸ்லாத்தில் தொடர் நோன்பு என்பது ரமலான் மாதத்தில் மட்டுமே வைக்க வேண்டும்! நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு வைத்து உள்ளார்கள் ஆனால் மாதம் முழுவதும் நோன்பு வைக்க வில்லை! இவ்வாறு தொடர் நோன்பும் வைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்து உள்ளார்கள் !
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள் :
நபி (ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறு எந்த மாதமும் முழுமையாக நோன்பு நோற்க மாட்டார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1971)
• நாம் இந்த மாதத்தில் அதிகம் நோன்பு வைக்க விரும்பினால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு வைத்து கொள்ளலாம்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டு விடுவீராக! இதுதான் தாவூத் நபியின் நோன்பாகும்! நோன்புகளில் இதுவே சிறந்ததாகும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1976)
💟 ஷாபான் மாதத்தில் உங்களால் இயன்ற அமல்களை செய்யுங்கள் :
• ஷாபான் மாதத்தில் நோன்பு வைப்பதை இஸ்லாம் வலியுறுத்தி உள்ளது இதை தவிர்த்து வேறு எந்த ஒரு அமலையும் குறிப்பிட்டு கூறவில்லை! ஆனால் நாம் வழமையாக செய்யும் அமலில் இயன்ற அளவுக்கு செய்தாலே போதும்!
• பர்ளான தொழுகைகளை நேரம் உடன் தொழுதல், பர்ளு தொழுகையின் முன் பின் சுன்னத் தொழுகைகள், நபிலான தொழுகைகள், அல் குர்ஆன் ஓதுதல், தஸ்பீக் செய்தல், தர்மம் செய்தல், தவ்பா செய்தால் இது போன்று நம்மால் இயன்ற அமல்களை இந்த மாதத்தில் செய்ய வேண்டும்!
• நோன்பை தவிர வேறு எந்த அமலையும் இந்த மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டு செய்தது கிடையாது! பிறறையும் செய்ய சொன்னதும் கிடையாது! சிறிய அமல் ஆக இருந்தாலும் அதை தொடர்ந்து செய்தால் அதுவே போதுமானது ஆகும் மேலும் இதுவே சிறந்தது ஆகும்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1970)
💟 ஷஃபான் நோன்பு எப்படி வைக்க வேண்டும் :
• இந்த ஷஃபான் மாதத்தில் வைக்கும் நோன்பும் வழமையாக நாம் நோன்பு வைப்பது போன்று தான் இதற்கு என்று தனிப்பட்ட வழி முறைகள் எதுவும் இஸ்லாம் நமக்கு கூறவில்லை!
1) பொதுவாக எந்த நோன்பாக இருந்தாலும் சரி நாம் நாளை நோன்பு வைப்பதாக இருந்தால் அன்று இரவே உள்ளத்தில் நாளை நோன்பு வைக்க வேண்டும் என்று எண்ணி கொள்ள வேண்டும்!
• ஏன் என்றால் நாம் காலையில் நோன்பு வைக்க எழாமல் உறங்கி விட்டாலும் காலையில் எழுந்து அப்படியே நோன்பை தொடரலாம்! ஸஹர் நேரம் முடிவதற்கு முன்பு நாம் எழுந்து விட்டால் ஸஹர் செய்து விட்டு நோன்பு வைத்து கொள்ளலாம்!
(நூல் : சுனன் திர்மதி : 730)
2) ஸஹர் செய்து கொள்ளுங்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
சஹர் செய்யுங்கள்! ஏனெனில், சஹர் செய்வதில் அருள்வளம் (பரக்கத்) உள்ளது!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2000)
3) நோன்பிற்கு நிய்யத் வைத்து கொள்ளுங்கள் :
• நிய்யத் என்ற அரபுச் சொல்லுக்கு எண்ணம் , தீர்மானம் , உறுதி போன்ற பொருள்கள் ஆகும்!
• அனைத்து அமல்களுக்கும் நிய்யத் எனும் எண்ணம் கட்டாயம் வைக்க வேண்டும்! ஆனால் நபி (ஸல்) அவர்கள் எந்த ஒரு அமலுக்கும் இப்படி தான் நிய்யத் வைக்க வேண்டும் என்று கூற வில்லை யாருக்கும் சொல்லியும் கொடுக்க வில்லை!
• நோன்பை பொறுத்த வரை இதே தான் எந்த ஒரு நோன்பிற்கும் நபி (ஸல்) அவர்கள் நிய்யத் கற்று கொடுக்க வில்லை! அதனால் நாம் உள்ளத்தில் நோன்பு வைக்கிறேன் என்ற எண்ணம் இருந்தால் போதுமானது ஆகும்! வாயினால் கூற வேண்டிய அவசியமில்லை!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பஜ்ர்க்கு முன்பு நிய்யத் வைக்க வில்லை என்றால் நோன்பு செல்லுபடி ஆகாது!
(நூல் : சுனன் திர்மதி : 730)
4) நோன்பை விரைவாக திறந்து கொள்ளுங்கள் :
• சூரியன் மறைந்து விட்டது என்று தெரிந்து விட்டால் விரைவாக நோன்பு திறந்து விட வேண்டும் கால தாமதம் செய்ய கூடாது!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2003)
💟 விடுப்பட்ட நோன்புகளை வையுங்கள் :
• நாம் ரமலானில் மார்க்கம் அனுமதித்த காரணத்தினால் விட்ட நோன்புகள் அல்லது நேர்ச்சை நோன்புகள் போன்றவற்றை இந்த மாதத்தில் வைத்து கொள்ளலாம்!
ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் :
எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டு விடும்! அதை ஷஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1950)
💟 களா நோன்பு வைக்க கால அவகாசம் எவ்வளவு நாட்கள் :
• களா நோன்பு என்பது நம் மீது கடமையான நோன்பு ரமலான் நோன்பு மார்க்கம் அனுமதித்த காரணத்தில் விட்டு விட்டால் அல்லது நம் மீது நாமே கடமையாக்கி கொண்டு நேர்ச்சை நோன்புகள் வைக்க முடியவில்லை என்றால் நாம் பின்னர் வரும் நாட்களில் வைத்து கொள்ள வேண்டும்!
• அப்படி வைக்க முடியவில்லை என்றால் நாம் நமக்கு நோன்பு வைக்க சூழ்நிலை அமையும் வரை நோன்பை கால தாமதம் செய்யலாம் மார்க்கம் அனுமதித்த காரணம் இருந்தால் மட்டுமே!
உதாரணமாக : கர்ப்பிணி பெண்கள் - பிள்ளைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் - நோயாளி!
• களா நோன்பு பொறுத்த வரை இஸ்லாம் நமக்கு எந்த ஒரு வரையரையும் கொடுக்க வில்லை இந்த நாட்கள் முடிவதற்கு முன்பு வைத்து விட வேண்டும் என்று எந்த ஒரு நிபந்தனையும் நமக்கு விதிக்க வில்லை!
(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) - ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்!
(சூரத்துல் : அல் பகரா : 184)
• அல்லாஹ் பின்னால் வரும் காலங்களில் நோன்பு வைத்து கொள்ளுங்கள் என்று கூறி உள்ளான் ஆனால் இந்த நாட்கள் வைக்க வேண்டும் இல்லை என்றால் எப்போதும் வைக்க முடியாது என்று நமக்கு கூற வில்லை!
• நாம் விட்ட நோன்புகளை கணக்கு வைத்து கொண்டு பின்னால் வரும் காலங்களில் எப்போது வேண்டும் என்றாலும் வைத்து கொள்ளலாம்! ஆனால் அதற்கு என்று வைக்க சூழ்நிலை நேரம் இருந்தும் அலட்சியம் செய்ய கூடாது!
💟 வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை மட்டும் நோன்பு வைக்க கூடாது :
• பர்ளான நோன்பு மற்றும் சுன்னத் நோன்புகளை தவிர்த்து நபில் ஆன நோன்புகளை வெள்ளிக்கிழமை மட்டும் அல்லது சனிக்கிழமை மட்டும் நோன்பு நேர்க்க கூடாது!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1985 | சுனன் அபூதாவூத் : 2423)
• வெள்ளிக்கிழமை நபில் நோன்பு வைக்க வேண்டும் என்றால் : வியாழன் வெள்ளிக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நோன்பு வைக்க வேண்டும்!
• சனிக்கிழமை நபில் நோன்பு வைக்க வேண்டும் என்றால் : வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அல்லது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமை நோன்பு வைக்க வேண்டும்!
💟 ஷஃபான் மாதத்தில் குறைந்தது 2 நோன்புகள் வைக்க முயற்சி செய்ய வேண்டும் :
• ஷஃபான் மாதத்தில் நாம் குறைந்தது ஒரு நோன்பாவது நோற்க்க வேண்டும்! நபி (ஸல்) அவர்கள் நமக்கு இந்த ஷஃபானில் நோன்பு வைக்க வலியுறுத்தி உள்ளார்கள்!
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் இறுதியில் ஏதேனும் நோன்பு நோற்றீரா? என்று கேட்டார்கள்! அம்மனிதர், இல்லை என்றார்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீர் ரமளான் நோன்பை முடித்ததும் அதற்குப் பகரமாக இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக! என்று கூறினார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2155)
💟 ஷாபான் மாதத்தின் கடைசி இரண்டு நாட்கள் நோன்பு நோற்க்க கூடாது :
• ஷஃபான் கடைசி இரண்டு நாட்கள் மட்டும் நோன்பு வைக்க கூடாது! ஏன் என்றால் ஷஃபான் நோன்பும் ரமலான் நோன்பும் ஒரு தொடர்ச்சியாக ஆகி விட கூடாது என்பதால் நபி (ஸல்) அவர்கள் இதை தடை செய்து உள்ளார்கள்!
• ஆனால் வழமையாக திங்கள் & வியாழன் நோன்பு வைக்க கூடியவர்கள் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு வைக்க கூடியவர்கள் - ஷாபான் கடைசியில் நோன்பு வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் இவர்கள் மட்டும் ஷாபான் கடைசியில் நோன்பு நோர்க்கலாம்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளானுக்கு முந்தைய நாளும் அதற்குமுந்தைய நாளும் நோன்பு நோற்காதீர்கள். (வழக்கமாக அந்த நாளில்) ஏதேனும் நோன்பு நோற்கும் மனிதரைத் தவிர! அவர் அந்நாளில் நோன்பு நோற்கட்டும்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 1976)
💟 ஷஃபான் பிறை 15_க்கு பிறகு பின் நோன்பு நோற்க்க கூடாதா :
ஷஃபானின் நடுப்பகுதியை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்!
(நூல் : சுனன் அபூதாவுத்)
• இந்த ஹதீஸ் பலகீனமான செய்தியாகும்! மற்றும் ஏற்று கொள்ள கூடாது! என இமாம் அஹ்மத் (ரஹ்) , இமாம் பைஹகீ (ரஹ்) போன்ற பல ஹதீஸ்கலை வல்லுனர்கள் கூறி உள்ளார்கள்!
• நபி (ஸல்) அவர்கள் ஷாபான் இறுதி இரண்டு நாட்கள் நோன்பு வைக்க வேண்டாம் என தடை செய்து உள்ளார்கள்! அந்த இரண்டு நாட்களை தவிர்த்து ஷபானின் மற்ற நாட்களில் நோன்பு பிடிக்கலாம்!
💟 அதிகம் நோன்பு வைப்பதின் சிறப்பு :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
'சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1896)
💟 நோன்பை தவிர வேறு என்ன சிறப்பு அமல்கள் இந்த ஷஃபானில் செய்யலாம்?
• நபி (ஸல்) அவர்கள் நோன்பை தவிர வேறு எந்த சிறப்பான அமல்களையும் ஷாபான் மாதத்தில் செய்யவும் இல்லை! பிறரை செய்ய சொல்லவும் இல்லை!
அல்கமா (ரஹ்) அறிவித்தார்கள் :
நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட சில நாள்களை வணக்கத்திற்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்களா? என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன்! அதற்கவர்கள் இல்லை! அவர்களின் அமல் (வணக்கம்) நிரந்தரமானதாக இருக்கும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1987)
• ஆனால் இன்று அல்லாஹ் பாதுகாக்கணும் இஸ்லாத்தின் பொய்யான செய்திகளை கூறி இந்த மாதத்தில் இந்த சூரா ஓதினால் நாம் நாடியாது கிடைக்கும்! இந்த திக்ர் செய்தால் இவ்வளவு சிறப்பு இந்த சிறப்பு தொழுகை இந்த சூரா ஓதி தொழுதால் இவ்வளவு சிறப்பு என்று சுபஹானல்லாஹ் ஒரு கட்டுரை எழுதும் அளவுக்கு கூறி உள்ளார்கள்! ஆனால் இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!
• இது இல்லாமல் ஷஃபான் 15 யில் பராஆத் இரவு என்று ஒன்றை ஏற்படுத்தி அந்த இரவில் திக்ர் துஆ சிறப்பு தொழுகை என்று நிறைய சிறப்புகள் கூறி அமல் செய்வார்கள் ஆனால் இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது! இதை பற்றி இன்ஷாஅல்லாஹ் விரிவாக பதிவு செய்கிறோம்!
@அல்லாஹ் போதுமானவன் 💞


 

No comments:

Post a Comment