பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

வாந்தி எடுத்தால் நோன்பு முறியுமா?


வாந்தி எடுத்தால் நோன்பு முறியுமா?
இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
நோன்பாளிக்கு அவருடைய விருப்பமில்லாமல் சில விஷயங்கள் நிகழ்கின்றன, உதாரணமாக: காயங்கள் ஏற்படுவது, மூக்கிலிருந்து இரத்தம் கசிவது, வாந்தி எடுப்பது, மேலும் அவர் விரும்பாமல் தண்ணீரை முழுங்கி விடுவது. இது போன்றவற்றால் அவரின் நோன்பு முறியாது!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் தன்னை அறியாமல் வாந்தி எடுக்கிறாரோ அவர் நோன்பை கழா செய்ய தேவை இல்லை, யார் வேண்டுமென்றே வாந்தி எடுக்கிறாரோ அவர் நோன்பை கழா செய்யட்டும்!
(நூல் : சுனன் அபூதாவூத் : 2380)
• மேலே உள்ள நபிமொழி படி யாருக்கு அவரறியாமல் வாந்தி ஏற்படுகிறதோ அவரின் நோன்பு முறியாது. அவர் கழா செய்ய வேண்டிய தேவையும் இல்லை. யார் வேண்டுமென்றே வாந்தி எடுக்கிறாரோ அவரின் நோன்பு முறிந்துவிடும். மேலும் அவர் கழா செய்ய வேண்டும்!
(ஃபதாவா : அல்-இஸ்லாமியா : 2 / 276)
@அல்லாஹ் போதுமானவன் 💞


 

No comments:

Post a Comment