பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

அல்லாஹ்வின் தூதர் தன் உம்மத் விவகாரத்தில் அதிகம் பயந்த 10 விசயங்கள்!

அல்லாஹ்வின் தூதர் தன் உம்மத் விவகாரத்தில் அதிகம் பயந்த  10 விசயங்கள்! 

• நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த ஆரம்ப காலத்தில் நிறைய மூடநம்பிக்கைகள், குற்றங்கள் நடந்து உள்ளன! பின்னர் இஸ்லாம் வந்த பின்பு படிப்படியாக அனைத்தையும் அழிந்து விட்டன!

• இருந்தாலும் இன்னும் சில குற்றங்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடக்க வில்லை இருந்தாலும் இது தற்பொழுது இல்லை என்றாலும் பின்னால் வரும் காலத்தில் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் சில பாவத்தை முன்னறிவிப்பு செய்து உள்ளார்கள்! இந்த பதிவில் அவற்றை பற்றியே பார்க்க போகிறோம் இன்ஷாஅல்லாஹ்!

1) அதிகமான செல்வ செழிப்பு :

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச்செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று, 

உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, (மறுமையின் எண்ணத்திலிருந்து திருப்பி) அவர்களை அழித்துவிட்டதைப் போன்று உங்களையும் அ(ந்த உலகாசையான)து அழித்துவிடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்!

(நூல் : ஸஹீஹ் புஹாரி : 4015) 

2) வழிகெட்ட அறிஞர்கள் :

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நிச்சயமாக, நான் என் உம்மத்தில் பயப்படுவதுயேல்லாம் வழிகெட்ட அறிஞர்கள் பற்றியே!

(நூல் : சுனன் திர்மிதி : 2229)

3) முகஸ்தூதி (சிறிய இணைவைப்பு) :

மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நான் உங்கள் மீது மிகவும் பயப்படுவது சிறிய இணை வைத்தலாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்! அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணை வைத்தல் என்றால் என்ன? என்று கேட்டனர்! அதற்கு நபி (ஸல்) அவர்கள், ரியா (முகஸ்துதி) என்று பதிலளித்தார்கள்! 

நீங்கள் உங்கள் அமல்களை உலகத்தில் யாருக்குக் காட்டுவதற்காகச் செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள்! அவர்களிடம் கூலி கிடைக்குமா என்று பாருங்கள்! என்று அடியார்களின் அமல்களுக்குக் கூலி கொடுக்கும் நாளில் அல்லாஹ் கூறி விடுவான்!

(நூல் : முஸ்னது அஹ்மத் : 22528)

4) ஓரினச்சேர்க்கை செயல் :

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என் சமூகத்தின் மீது நான் அதிகம் அஞ்சுவது லூத் சமுதாயத்தின் (தன்பாலினம் ஈர்ப்பு) நடத்தையை தான்!

(நூல் : இப்னு மாஜா : 2563 | திர்மிதி : 1457)

5) ஹரமான வழியில் பொருள் ஈட்டுவது :

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என் உம்மத்தில் தீர்ப்புக்காக லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் சோதனையை பற்றி நான் அஞ்சுகிறேன்!

அவ்ஃப் இப்னு மாலிக் அறிவித்தார்: 

(நூல் : ஸஹீஹ் அல் ஜாமி : 216)

6) அல்குர்ஆனை கொண்டு வாதம் புரியும் நயவஞ்சகன் :

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என் உம்மத்தில் நான் இரண்டு விஷயங்களை கண்டு அஞ்சுகிறேன்! அதில் ஒன்று, நயவஞ்சகர்கள் குர்ஆனை கற்று அதை கொண்டு ஈமான் கொண்டவர்களிடம் வாதம் புரிவார்கள்!

(நூல் : முஸ்னது அஹ்மத் : 17318)

7) உறவுகளை துண்டித்து வாழ்வது :

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என் உம்மத்தில் உறவுகளை துண்டித்து வாழக்கூடிய நபர்களின் சோதனையை பற்றி நான் அஞ்சுகிறேன்!

(நூல் : ஸஹீஹ் அல் ஜாமி : 216)

8) அறிவு உடன் பேசும் நயவஞ்சகன் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எனக்குப் பின் என் சமுதாயத்தின் விஷயத்தில் நான் மிகவும் அஞ்சுவது!
அறிவுப்பூர்வமாகப் பேசி அநியாயமாகச் செயல்படும் ஒவ்வொரு நயவஞ்சகர்களையும் தான்!

(நூல் : ஷுஅபுல் ஈமான் : 1641)

9) மன இச்சைகளை பின் பற்றுதல் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்கள் வயிறுகள் ஹராமான உணவுகளை சாப்பிடடுதல், மர்மஸ்தானத்தை ஹரமான வழியில் பயன்படுத்துதல் போன்ற மன இச்சைகளில் நீங்கள் மூழ்கிவிடுவதையும், (உங்களை சத்தியப் பாதையிலிருந்து வழி தவறி) வழிகேட்டின் பக்கம் இழுத்துச் செல்லும் மன இச்சைகளில் நீங்கள் மூழ்கிவிடுவதையும் நான் பயப்படுகிறேன்!

(நூல் : சஹீஹ் அல் தர்கீப் : 52)

10) ஐந்து நிகழ்வுகள் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எனக்குப் பின் என் சமுதாயத்தின் விஷயத்தில் நான் மிகவும் அஞ்சுவது!
அறிவீன தலைவர்கள், கொலை பெருகுவது, லஞ்சம் வாங்கும் அதிகாரி, குடும்ப உறவுகளை துண்டித்தல், குர்ஆனை இசை போன்று எடுத்து எடுத்து கொள்ளக்கூடியவர்கள்!

(நூல் : சஹீஹ் அல் ஜாமி : 216)

@அல்லாஹ் போதுமானவன் 💞

No comments:

Post a Comment