அல்லாஹ்வின் அருளும், நற்பாக்கியமும் பெற நபி (ﷺ) அவர்கள் கேட்ட அழகிய துஆ 
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(ف)ழ்(ض)லிக வ ரஹ்மதிக ப(ف)இன்னஹு லா யம்லிகுஹா இல்லா அன்த
பொருள் : யா அல்லாஹ்! உனது நற்பாக்கியத்திலிருந்தும், அருளிலிருந்தும் உன்னிடம் கேட்கிறேன். உன்னைத் தவிர அதற்கு அதிகாரம் படைத்தவர்கள் வேறு எவரும் இல்லை.
துஆவின் சிறப்பு : நபி (ﷺ) அவர்களிடம் ஒரு முறை ஒரு விருந்தினர் வந்தார். நபி (ﷺ) அவர்கள் தனது மனைவியரிடம் ஏதும் உணவு இருக்கின்றதா? என்று பார்த்து வருமாறு ஆளனுப்பினார்கள், ஆனால் எந்த உணவும் அவர்களிடம் இருக்கவில்லை. அப்போது நபி (ﷺ) அவர்கள் இந்த பிரார்த்தனையை ஓதினார்கள். அவர்களுக்கு பொறித்த ஒரு ஆடு அன்பளிப்பாக வந்தது. இது அல்லாஹ்வின் நற்பாக்கியத்தில் நின்றும் உள்ளதாகும், அவனது ரஹ்மத்தை நாம் எதிர்பார்த்தவர்களாக இருக்கின்றோம் என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி)
(நூல் : அல் ஜாமிஅஃ : 1278 | ஸஹீஹ் : அல்பானி (ரஹ்))

No comments:
Post a Comment