அல்லாஹ் என்றால் யார்? அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மட்டும் தான் தான் கடவுளா?
• இப்போது கடவுள் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம், கடவுள் என்றால் தமிழர்களின் கடவுள் என அர்த்தமா? அல்லது தமிழ் மொழியில் இறைவனை குறிக்க ஒரு சொல்லா?
• ஆங்கிலத்தில் God என்கிறோமே, அப்படியெனில் ஆங்கிலேயனின் கடவுள் என அர்த்தமா? அல்லது ஆங்கில மொழியில் கடவுள் என அர்த்தமா?
• ஆங்கில மொழியில் கடவுளை குறிக்க தானே "God" என்போம். தமிழ் மொழியில் "கடவள்" என்போம்.
• அதே போல தான் அல்லாஹ் என்றால் அரபு நாட்டவர்களின் கடவுள் அல்ல, அரபியில் "Supreme God"ஐ அதாவது உங்களையும் என்னையும் இந்த உலகத்தையும் பிரபஞ்சத்தையும் படைத்த அந்த இறைவனை குறிக்கும் அரபு சொல் தான் அல்லாஹ்.
• கடவுளை ஆங்கிலத்தில் GOD என்றும், தமிழில் கடவுள் என்றும் ஹிந்தியில் பகவான் என்றெல்லாம் அழைக்கின்றார்கள் அதே போல் அரபு மொழியில் கடவுளைக் குறிக்கும் வார்த்தைதான் அல்லாஹ்! இவ்வார்தையின் உண்மைப்பொருள் 'வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன்' என்பது.
• படைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான 'அல்லாஹ்' என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ஏக இறைவனை குறிக்கும் சொல்லே அல்லாஹ் என்பது.
• அரபு மொழியில் இவ்வார்த்தைக்கு ஆண்பாலும் கிடையாது, பெண்பாலும் கிடையாது, பன்மையும் எப்போதும் இது ஒருமையிலேயே விளங்கும்.
• அல்லாஹ் என்பது அரபிச் சொல். இதன் பொருள், வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன் என்பதாகும். அல்லாஹ் என்ற சொல்லின் வேர்ச்சொல் "அலாஹா"
• அலாஹா என்றால் வணங்கப்படுவது என பொருள். இலாஹ் என்ற பொதுப் பெயருடன் அல் என்ற குறிப்புப் பெயரும் சேர்ந்ததே அல்லாஹ் என்பதாகும்.
• தமிழ் மொழியில் கடவுளை குறிக்க பல பெயர்கள் இருக்கின்றன, கடவுள், தெய்வம், நாதன், சக்தி, இறைவன், பகவான், தேவன் பன்மையாக மாற்றலாம். போன்றவைகளை எளிமையாக அதாவது,
• தெய்வம்- தெய்வங்கள் கடவுள் கடவுள்கள், தேவன் - தேவர்கள்; God-Gods; இறைவன் -இறைவி; தேவன் - தேவி; கடவுள் ; God-Goddess; ஆண் பெண் என்பது உறுப்பால் ஆன வித்தியாசம் தான், நம்மை போன்று தான் கடவுளும் என சொல்வது கடவுளை கொச்சைப்படுத்துவது போன்றதாகும்.
• ஆனால் அல்லாஹ் என்ற சொல்லை பன்மையாகவோ பாலினமாகவோ மாற்ற முடியாது. இப்படிப்பட்ட சிறப்புக்களின் காரணத்தால் உலகெங்கும் முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்ற வார்த்தை கொண்டு அழைக்கின்றனர்.
• அதாவது ஒருமையில் இறைவன், தேவன்,பகவான், போன்ற வார்த்தைகளை பன்மையில் இறைவி, தேவி, பகவதி, இறைவி போல் ஒருமை பன்மைக்கு ஏற்றவாறு மாறுவது போல் அல்லாஹ் என்ற பன்மையாக ஒருபோதும் மாற்றமுடியாது.
இஸ்லாமிய நம்பிக்கை படி, நம்மை படைத்தவனுக்கு ஐந்து இலக்கணங்களை வரையறுக்கிறது.
1) ஏகத்துவம் (நம்மை படைத்தவன் வணக்கத்துக்குரியவன் ஒருவன் தான்)
2) இவ்வுலகில் படைப்பாளனை பார்க்கமுடியாது.
3) நாம் பல தேவைகளுக்கு மத்தியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உயிர் வாழ தண்ணீர், உணவு, சூரியன், மரம் செடி கொடிகள் எல்லாம் தேவை. இது போன்று கடவுளுக்கு தேவைகள் இருக்காலாமா? (தேவைகள் என்பது படைத்தவனுக்கு இல்லை)
4) அந்த ஏக இறைவனுக்கு நம்மை போலவே (பெற்றோர், குழந்தைகள், ஒரு/பல்வேறு மனைவிகள்) குடும்பங்கள், ஆசைகள், இச்சைகள், படைத்தவனுக்கு இருக்கக்கூடாது, ஆக படைப்பாளன் யாரையும் பெறவுமில்லை,யாராலும் பெறப்படவுமில்லை.
5) படைப்பாளனுக்கு எவரும் நிகரில்லை.
• இப்படி பகுத்தறிவுக்கு மாற்றமில்லா இறைவனை இஸ்லாம் வரையறுக்கிறது. காரணம் கடவுளின் பெயரால் உலகில் மக்களை ஏமாற்றி பிழைப்பதும், வதைப்பதும், மோசடி செய்வது போன்ற வித்தைகள் அனைத்திற்கும் மேற்கண்ட இலக்கணம் முட்டுகட்டை போடுகிறது.
அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மட்டும் தான் தான் கடவுளா?
• வானம், பூமி, சூரியன், சந்திரன், கிரகங்கள், கடல், மலைகள், நீர்,உயிரினங்கள் மனித இனங்கள் போன்ற படைப்புகள் இருப்பதே படைப்பாளன் இருப்பதற்கான சான்றாகும்.
• பகுத்தறிவை நாம் பயன்படுத்தும் போது இறைவன் எத்தனை என்ற கேள்விக்கு முதலில் விடை கிடைக்கின்றது. ஒன்றிற்கு மேற்பட்ட கடவுள்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒரு கடவுள் ஒருவரை தண்டிக்கவும் மற்றொரு கடவுள் அவரை காப்பாற்றவும் முனைந்தால்-கடவுள்களுக்குள்ளே போர் மூண்டு உலகம் என்றோ அழிந்து போயிருக்கும். வானம் பூமி மற்றும் கோள்களின் இயக்கங்கள் படைக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை ஒரே சீராக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
• இன்று வரை ஒரே சீராக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதுவே இவற்றை நிர்வாகம் செய்பவன் ஒரே ஒருவனாகத் தான் இருக்க முடியும் என்பதை நம் பகுத்தறிவுக்குத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
• இஸ்லாம் போதிக்கும் கடவுள் கொள்கை உலகில் உள்ள மற்ற மதங்களின் இறைக் கொள்கைகளை விட சற்று வேறுபட்டு நிற்கிறது. காரணம் இஸ்லாம் ஓரிரைக் கொள்கையை போதிக்கிறது மற்ற மதங்கள் அனைத்தும் பல கடவுள் கொள்கையை போதிக்கிறது.
• உண்மையில் படைத்த இறைவனை வழிபடுவதற்கு எந்தப் பொருட்செலவும் தேவை இல்லை. அவனை நேரடியாக வணங்குவதற்க்குத்தான் இறைத்தூதர்கள் கற்றுத்தந்தார்கள். அவனை அழைப்பதற்கோ, நம் தேவைகளை கேட்பதற்கோ நமக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த தரகர்களும் தேவை இல்லை.
• எந்த வித வீண் சடங்குகளுக்கும் அங்கு இடமில்லை. ஆனால் படைத்தவனை விட்டு விட்டு போலி தெய்வங்களை வணங்க முற்படும்போது இறைவழிபாடு என்பது கடினமாக்கப்படுகிறது. வீண் சடங்குகளும் மூட நம்பிக்கைகளும் இடைத்தரகர்களும் இடையே நுழைந்து இது மாபெரும் வியாபாரமாக்கப் படுகிறது. மக்களை ஏய்த்துப் பிழைப்பதற்கான எளிமையான மார்க்கமாக இது மாறிவிடுகிறது.
• இஸ்லாத்தில் மிக முக்கியமான மற்றும் அடிப்படையான கருத்தாக ஏகத்துவம், அதாவது ஒரே கடவுள் மீதான நம்பிக்கை உள்ளது. பிரபஞ்சத்தைப் படைத்த ஒரே கடவுள், அதில் உள்ள அனைத்தின் மீதும் அதிகாரம் கொண்டவர் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அவர் தனித்துவமானவர், அவர் படைக்கும் அனைத்திற்கும் மேலாக உயர்ந்தவர், அவருடைய மகத்துவத்தை அவருடைய படைப்புகளுடன் ஒப்பிட முடியாது. மேலும், அவர் மட்டுமே எந்த வழிபாட்டிற்கும் தகுதியானவர்,
• மேலும் அனைத்து படைப்புகளின் இறுதி நோக்கம் அவருக்கு அடிபணிவதுதான். ஏகத்துவத்தைப் பற்றிய தூய்மையான மற்றும் தெளிவான புரிதலை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், கடவுளைப் பற்றிய இஸ்லாமிய புரிதல் பல்வேறு விஷயங்களில் மற்ற அனைத்து மதங்கள் மற்றும் நம்பிக்கைகளிலிருந்தும் வேறுபட்டது. இது தான் இஸ்லாத்தின் அடிப்படை ஆகும்.
• இப்படிபட்ட காரணங்களால் முஸ்லிம்கள் வேறு ஏதோ கடவுளை வணங்கவில்லை உங்களையும் எங்களையும் அகிலத்தையும் படைத்த அந்த படைப்பாளனையே வணங்குகிறோம் எனவே அல்லாஹ் என்பவன் அகில உலகிற்கான இறைவன் என்பதே சரியானது.
@அல்லாஹ் போதுமானவன் 

No comments:
Post a Comment