இஸ்லாத்தில் தராவிஹ் தொழுகை பற்றி அறிந்து கொள்ளுவோம் 
• ரமழான் மாத இரவுகளில் தொழப்படும் தொழுகைக்கு ‘தராவீஹ்’ என்று கூறப்படும்! தராவீஹ் என்றால் இடையிடையே ஓய்வெடுக்கும் தொழுகை என்று பொருள் ஆகும்! மக்கள் இந்த தொழுகையை வெகுநேரம் நீட்டி தொழுபவர்களாக இருந்தார்கள்! ஒவ்வொரு 4 ரக்ஆதிற்கும் பிறகு சற்று ஓய்வு எடுப்பது அவர்களின் வழக்கம் ஆகும் இதனால் தான் இந்த தொழுகைக்கு தராவீஹ் என்று பெயர் உருவானது! ஆனால் தராவிஹ் என்ற சொல் ஹதீஸ்களில் கிடையாது!
• நபி (ஸல்) அவர்கள் ரமலான் என்று அல்லாமல் வழமையாக இரவில் தொழ கூடியவர்களா இருந்து உள்ளார்கள்! இதனை கியாமுல் லைல் - இரவில் நின்று தொழுதல் என்பதும் மற்றொரு பெயர் ஆகும்!
• இரவு தொழுகை பற்றி ஹதீஸ்களில் வெவ்வேறு பெயர்களில் வந்து உள்ளது அவைகள் ;
1) ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை)
2) வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை)
3) தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை)
4) கியாமுல் லைல் (இரவில் நின்று தொழுதல்)
• ஆகிய பெயர்களில் தான் இரவு தொழுகை பற்றி ஹதீஸ்களில் காணப்படுகிறது! மேலே உள்ள அனைத்துமே ஒரே தொழுகையை தான் குறிக்கும்! பெயர்கள் மட்டுமே மாறுபடும்!
• நபி (ஸல்) அவர்கள் வழமையாக இரவில் தொழ கூடியவர்களா இருந்தாலும் மற்ற மாதங்களை விட இந்த ரமலான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் இரவு தொழுகைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து தொழுது உள்ளார்கள் இன்னும் பிறரையும் தொழும் படி ஏவி உள்ளார்கள்!
• ரமலான் இரவில் தொழுவது சுன்னா முஅக்கதா மற்றும் சிறந்த அமல் என்று அனைவரும் ஏற்று கொள்ளுகிறோம் ஆனால் எவ்வளவு ரக்ஆத் தொழ வேண்டும் என்பதில் தான் மக்கள் மத்தியில் மிக பெரிய கருத்து வேறுபாடு உள்ளது!
• நபி (ஸல்) அவர்கள் இஷா பின்பு இருந்து பஜ்ர் பாங்கு கூறும் முன்பு வரை இரவில் தொழுது உள்ளார்கள்!
• நாம் இஷா தொழுகைக்கு பிறகு இருந்து பஜ்ர் பாங்கு கூறும் முன்பு வரை இதற்கு இடைப்பட்ட நேரத்தில் எப்போது வேண்டும் என்றாலும் தொழுது கொள்ளலாம்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 1340)
• நபி (ஸல்) அவர்கள் வழமையாக செய்தது செயல்கள் அல்லது அவசியம் செய்யுங்கள் என்று கூறியது சுன்னத்தே மூஅக்கதா (வலியுறுத்தப்பட்ட சுன்னாஹவாகும்)
• நபி (ஸல்) அவர்கள் ரமலான் இரவுகளில் தானும் தொழுது பிறரையும் தொழ சொல்லி ஆர்வம் படுத்தி உள்ளார்கள்! மேலும் இதற்கு தனி சிறப்பும் கூறி உள்ளார்கள்! ரமலான் இரவில் நின்று தொழுவது வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் ஆகும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 37)
• நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதம் என்று இல்லாமல் பொதுவாக அனைத்து நாட்களிலும் இரவில் ( 7 - 8 - 10 - 11 ) ஆகிய எண்ணிக்கையில் தொழுது உள்ளார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1138 - 1147 - 1140 - 1159 - 1198)
• ரமலான் இரவுகளில் தொழுவதில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது ஆனால் எவ்வளவு ரக்ஆத் தொழ வேண்டும் என்பதில் தான் அதிகமான கருத்து வேறுபாடுகள் உள்ளன!
1) நபி (ஸல்) அவர்கள் 8 ரக்ஆத் மற்றும் வித்ரு 3 ரக்ஆத் தொழுது உள்ளார்கள் இதை விட அதிகமாக தொழ கூடாது அவ்வாறு தொழுவது பித்ஆத் என்று கூறுகிறார்கள்!
2) உமர் (ரழி) அவர்கள் 20 ரக்ஆத் தொழுது உள்ளார்கள் அவர்கள் சிறந்த ஸஹாபி அதனால் அவர்கள் செயலை முன் வைத்து 20 ரக்ஆத் தொழ வேண்டும் என்று மற்றொரு சாரார் கூறுகிறார்கள்!
அபூ ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள் :
ரமலானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன்! அதற்கவர்கள் : நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை ’ என்று பதில் கூறினார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1147)
• நபி (ஸல்) அவர்கள் 8 ரக்ஆத் தொழுது விட்டு பின்பு 3 ரக்ஆத் வித்ரு தொழுது உள்ளார்கள் இதை பற்றி நிறைய ஹதீஸ்கள் வந்து உள்ளது!
• இவ்வாறு நாமும் 8 + 3 தொழுவது சுன்னாஹ் ஆகும் ஆனால் இந்த தொழுகை நபி (ஸல்) அவர்கள் தொழ ஆரம்பம் செய்தால் இரவின் ஆரம்பம் பகுதி முதல் இரவின் கடைசி பகுதி வரை நீட்டி தொழுவார்கள்!
• இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து சிலர் நபி (ஸல்) அவர்கள் 8 + 3 தான் தொழுது உள்ளார்கள் இதை விட அதிகமாக தொழ கூடாது என்று கூறுகிறார்கள்!
• நபி (ஸல்) அவர்கள் 8 + 3 தான் அதிகப்படியாக தொழுது உள்ளார்கள் இதை எந்த மார்க்க அறிஞரும் மறுக்க வில்லை ஆனால் நபி (ஸல்) அவர்கள் எந்த இடத்திலும் இதான் அளவு இதை விட அதிகமாக தொழ கூடாது என்றும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தடை விதிக்கவும் வில்லை! நிபந்தனையும் விதிக்க வில்லை!
• முதலில் : நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் சரி எப்போதும் குறிப்பிட்டு 20 ரக்ஆத் இரவில் தொழுதது கிடையாது இதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வித ஆதாரமும் கிடையாது!
• நபி (ஸல்) அவர்களும் 20 ரக்ஆத் இரவில் குறிப்பிட்டு தொழுதது கிடையாது பிறரையும் இவ்வாறு தொழ சொன்னதும் கிடையாது!
• இரண்டாவது : உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் ரமலான் இரவுகளில் 20 ரக்ஆத் தொழ வைத்தார்கள் அல்லது தொழ சொல்லி உள்ளார்கள் என்று ;
(நூல் : தப்ரானியின் கபீர் 10/86 | பைஹகீ 2/496, தப்ரானியின் அவ்ஸத் 2/309 | தப்ரானியின் அவ்ஸத் 12/176 | முஸன்னப் இப்னு அபீஷைபா 2/286 | முஸ்னத் அப்து பின் ஹமீத் 2/271)
• மேற்கண்ட ஹதீஸ் நூல்களில் ஒரு ஹதீஸ் இடம் பெற்று உள்ளது இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்!
• இந்த ஹதீஸ் உடைய அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெரும் அபூஷைபா என்பவர் இந்த ஹதீஸை அறிவிப்பு செய்கிறார்! இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் இவரைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்!
• இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) இமாம் அபூதாவூத் (ரஹ்) இமாம் திர்மிதி (ரஹ்) இமாம் நஸாயீ (ரஹ்) போன்ற ஹதீஸ் கலை இமாம் அனைவரும் இவரை விமர்சனம் செய்து உள்ளார்கள் இவர் அறிவிக்கும் ஹதீஸ்களை ஏற்று கொள்ள கூடாது இவர் பொய் சொல்ல கூடியவர் என்று கூறி உள்ளார்கள்!
(நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் : 1 / 125)
• இது மட்டும் அல்லாமல் இந்த ஹதீஸை பதிவு செய்த இமாம் பைஹகீ (ரஹ்) அவர்களே இந்த ஹதீஸைத் தொடர்ந்து, 'அபூஷைபா எனப்படும் இப்றாஹீம் பின் உஸ்மான் என்பவர் மட்டுமே இதைத் தனித்து அறிவிக்கிறார்! இவர் பலவீனமானவர்' என்று குறிப்பிட்டு உள்ளார்கள்!
• மூன்றாவது : உமர் (ரழி) அவர்கள் 20 ரக்ஆத் + 3 ரக்ஆத் தொழுது உள்ளார்கள் அல்லது பிறரை தொழ சொன்னார்கள் என்று ஒரு ஸஹீஹான ஆதாரம் கிடையாது!
• ஏன் என்றால் உமர் (ரழி) பித்ஆத் உண்டாகி விட கூடாது என்பதில் மிகவும் கவனமாகவும் பேணுதலாகவும் இருந்தவர்கள்! இவர்களுக்கு பின்னால் வந்தவர் சிலர் காலத்தில் தான் இந்த வழிமுறை தோன்றி உள்ளது!
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது :
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை குறித்துக் கேட்டார். அதற்கு (இரவுத் தொழுகை) இரண்டிரண்டு ரக்அத்களாகும். சுப்ஹு (நேரம் வந்துவிட்டதோ) என்று நீங்கள் அஞ்சினால் ஒரு ரக்அத் (வித்ர்) தொழுதுகொள்ளுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 1364)
• இந்த ஹதீஸின் மூலம் இரவு தொழுகை பற்றி சரியான முறையில் விளங்கி கொள்ளலாம்! ஒருவர் இரவில் 8+3 தொழுதாலும் தவறு இல்லை! 20 +3 தொழுதாலும் தவறு இல்லை! அல்லது 20 ரக்ஆத்களை விட அதிகமாகவோ அல்லது 8 ரக்ஆத்தை விட குறைவாகவோ தொழுதாலும் தவறு இல்லை!
• இரண்டு இரண்டு ரக்ஆத்களாக எவ்வளவு ரக்ஆத் வேண்டும் என்றாலும் நம்மால் இயன்ற அளவுக்கு இரவில் தொழுது கொள்ளலாம் ! இதுவும் சுன்னாஹ்வாகும்!
• உதாரணமாக : ஒரு நபரால் இரவில் 50 ரக்ஆத் அல்லது 100 ரக்ஆத் நின்று தொழ முடியும் என்றால் தாராளமாக அந்த நபர் ரமலான் அல்லது ரமலான் அல்லாத நாட்களிலும் தொழுகலாம் கடைசி தொழுகை வித்ருவாக அமைத்து கொள்ள வேண்டும்!
• நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் ரமழான் கால இரவுத் தொழுகையை பள்ளியில் ஜமாஅத்தாக தொழுதார்கள்! இதனால் அதிகமான ஸஹாபாக்களும் பள்ளியில் திரண்டார்கள்! பின்னர் நபி (ஸல்) அவர்கள் இந்த தொழுகையை ஜமாத் ஆக தொழுவதை விட்டு விட்டார்கள்!
• ஏன் என்றால் அல்லாஹ் இதை உங்கள் மீது கடமையான தொழுகையாக ஆக்கி விடுவான் என்று அஞ்சுகிறேன் என்று கூறினார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 2012)
• நபி (ஸல்) அவர்கள் தராவிஹ் தொழுகை கடமையாக்கப்பட்டு விடும் என்ற பயந்ததினால் தான் ஜமாஅத்தாகத் தொழுவதை நிறுத்தினார்கள்!
அபூதர் (ரழி) அவர்கள் அறிவிப்பு செய்கிறார்கள் :
அல்லாஹ்வின் தூதரே! இந்த இரவின் மீதிப் பகுதியிலும் தொழுவிக்கலாமே’ எனக் கேட்டனர். அதற்கு நபியவர்கள், ஒரு மனிதர் இமாமுடன் தொழ எழுந்து அவர் தொழுது முடிக்கும் வரை அவருடன் தொழுதால் அன்றைய இரவில் நின்று வணங்கியவராகக் கருதப் படுவார் எனக் கூறினார்கள்!
(நூல் : அபூதாவூத் : 1375 | இப்னுமாஜா : 1327)
• ரமலானில் இரவுத் தொழுகையை ஆரம்பம் முதல் இறுதி வரை இமாமுடன் தொழுதால் அன்றிரவு முழுவதும் தொழுத நன்மை கிடைக்கும் அதனால் ரமலான் இரவு தொழுகையை ஜமாத் ஆக தொழுவது சிறந்தது ஆகும்!
• ஜமாஅத்துடன் தொழா விட்டால் கூட தனித்து இரவில் தொழு கூடியவர்கள் தொழக்கூடிய பக்குவம் உள்ளவர்கள், நீண்ட சூராக்களை ஓதி நிதானமாகத் தொழக் கூடிய அளவுக்கு குர்ஆன் மனனம் உள்ளவர்கள் தனித்தும் தொழுகலாம்! அல்லது நமக்கு மனனம் உள்ள சூராக்களை ஓதி தொழுது கொள்ளலாம்!
• தனியாக தொழ முடியவில்லை அல்லது அல் குர்ஆனில் அதிக மனனம் இல்லாதவர்கள் ஜமாஅத்துடன் தொழுவதே சிறந்தது ஆகும்!
• ஏனெனில், தனித்து தொழும் பொழுது சில நேரங்களில் அசதி உடல் சோர்வினால் இரவு தொழுகையை பாதிலயே விட்டு விடுவார்கள் ஆனால் ஜமாத் ஆக தொழும் பொழுது அனைவரும் இருப்பதால் ஒரு ஆர்வம் உடன் தொழுவார்கள்!
• ஜமாத் தொழ முடியவில்லை என்றால் தனியாகவும் தொழுகலாம்! நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் வீட்டில் தான் தனியாக தொழுது உள்ளார்கள்!
• ஒரு வீட்டில் அல்லது அருகில் உள்ள வீட்டின் சேர்த்து ஜமாஅத் ஆக தொழுகலாம்! ஆனால் இமாமாக நிற்கும் பெண் வரிசையின் நடுவில் சற்று முன்னால் நின்று, அதிகம் சத்தம் இல்லாமல் அருகில் உள்ளவர்களுக்கு கேட்கும் அளவுக்கு தனக்கு மனனம் உள்ளத்தை ஓதி தொழ வைக்கலாம்!
(Fatwa : இமாம் இப்னு உதைமின் (ரஹ்) : ஃபதாவா நூர் அலா அத்-தர்ப்)
• பள்ளிவாசலில் ஆண்களுக்கு பின்பு நின்று அல்லது பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்று தராவிஹ் தொழுகை ஜமாத் ஆக தொழுகலாம்!
• சிலர் வீட்டில் தொழும் பொழுது கவனம் இல்லாமல் அல்லது அலட்சியமாக தொழுவார்கள் ஆனால் ஜமாத் ஆக மற்ற பெண்களுடன் தொழும் போது ஒரு ஊக்கமாக இருக்கும்! மேலும் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு நடந்து செல்லும் பொழுது அதிக நன்மையும் கிடைக்கும்! ஆனாலும் பெண்கள் பள்ளியில் தொழுவதை வீட்டில் தொழுவதே சிறந்தது!
• பள்ளி வாசலுக்கு செல்லும் பெண் முறையாக ஹிஜாப் பேணி, வாசனை திரவியம் எதுவும் பூசாமல், மஹ்ரம் உடன் அல்லது மற்ற பெண்களுடன் சென்று தொழுது வரலாம்!
(Fatwa : ஷேக் இப்னு உதைமின் (ரஹ்) : அல்-லிகா அஷ்-ஷாஹ்ரி)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நம்பிக்கை கொண்டு (நற் கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 37)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மக்களே! ஸலாமைப் பரப்புங்கள். உணவளியுங்கள். இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழுங்கள். மக்கள் உறக்கத்தில் இருக்கும் நேரத்தில், இரவில் தொழுங்கள்! நிம்மதியாகச் சொர்க்கம் செல்வீர்கள்!
(நூல் : சுனன் திர்மி 2485 | அஸ்ஸஹீஹா : 569)
• இன்று நாம் பல ஊர்களில் பார்க்கலாம் அல்லாஹ் பாதுகாக்கணும்! எவ்வளவு வேகமாக ஓதி எவ்வளவு வேகமாக ருக்உ ஸஜ்தா செய்கிறார்கள்!? ஆனால் இவ்வாறு நாம் வாழ்நாள் முழுவதும் தொழுதாலும் அந்த தொழுகை ஏற்கப்படாது!
• சரியான முறையில் தொழாத ஸஹாபியை நபி (ஸல்) அவர்கள் உமது தொழுகை செல்லுபடி ஆகாது என்று கூறி அவருக்கு அறிவுரை கூறி உள்ளார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 389 & 757)
• தொழுகை பொறுத்த வரை அது எந்த தொழுகையாக இருந்தாலும் சரி! அல் குர்ஆனை நிறுத்தி நிறுத்தி பொறுமையான முறையில் ஓத வேண்டும்! ருக்உ மற்றும் ஸஜ்தாவையும் அழகிய முறையில் பொறுமையாக தொழ வேண்டும்! அவ்வாறு தொழ வில்லை என்றால் தொழுகை கூடாது!
• இன்றும் பல ஊர்களில் அல் குர்ஆனை 27 நாட்களில் முடிக்க வேண்டும் கட்டாய கடமை போல், ஓதுவது என்ன வென்று அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு வேகமாக ஓதி தொழுகிறார்கள் ஆனால் இவ்வாறு ஒரு போதும் ஓதி தொழ கூடாது!
குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக!
(சூரத்துல் : அல் முஸம்மில் : 04)
• வித்ரு வாஜிபு அவசியம் தொழ வேண்டும்! ஒற்றை படை எண்ணிக்கையில் தொழ வேண்டும்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களில் யார் இரவின் இறுதியில் எழ முடியாது என அஞ்சுகிறாரோ அவர் (முதலில்) வித்ர் தொழுதுவிட்டுப் பிறகு உறங்கட்டும்! இரவில் தம்மால் எழ முடியும் என உறுதியாக நம்புகின்றவர் அதன் இறுதியில் வித்ர் தொழட்டும்! ஏனெனில், இரவின் இறுதி நேரத்தில் குர்ஆன் ஓதும்போது (வானவர்கள்) பங்கேற்கின்றனர். இதுவே சிறந்ததாகும்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 1381)
• ஒரு நபரால் தஹஜ்ஜத் தொழுகைக்கு எழ முடியும் என்று உறுதியாக நம்பிக்கை இருந்தால் அவர் அவர் தஹஜ்ஜத் தொழுது விட்டு பின்பு வித்ரு வாஜிபு தொழுகலாம்!
• அல்லது ஒரு நபருக்கு தஹஜ்ஜத் தொழுகைக்கு எழுவது சந்தேகம் என்றால் அவர் இஷாவிற்கு பிறகு தொழுவதே சிறந்தது!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இரவுகளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 998)
• சிலர் மேலே உள்ள ஹதீஸை தவறாக விளங்கியதன் காரணமாக தூங்கி எழுந்த பின்பு தான் வித்ரு தொழ வேண்டும் அல்லது தஹஜ்ஜத் தொழுகை நேரத்தில் தான் வித்ரு தொழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள்!
• இன்னும் நம்மில் சிலர் வித்ரு தொழுகைக்கு பின்பு தொழ கூடாது என்று கூறுகிறார்கள் ஆனால் இது தவறு ஆகும்! வித்ரு தொழுகைக்கு பின்பு நபில் அல்லது சுன்னத் தொழுகை தொழுது கொள்ளலாம்!
நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழுகைக்கு பின்பும் தொழுது உள்ளார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 1344)
• வித்ரு தொழுகை ஒரு முறை மட்டும் தான் வித்ரு தொழ வேண்டும் இரண்டு முறை வித்ரு தொழ கூடாது! சிலர் இஷாவிற்கு பின்பு தொழுவார்கள் பின்பு தஹஜ்ஜத் நேரத்திற்கு எழுந்தால் மீண்டும் ஒரு முறை வித்ரு தொழுவார்கள் ஆனால் இவ்வாறு தொழ கூடாது!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு இரவில் இரண்டு வித்ர் கிடையாது!
(நூல் : சுனன் திர்மிதீ : 432)
• இன்றும் பல இடங்களில் வித்ரு தொழுகையை மஹ்ரிப் தொழுகை போன்று தொழுவார்கள் ஆனால் இதற்கு எந்த வித ஸஹீஹானா ஹதீஸ்களும் கிடையாது இவ்வாறு தொழுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்து உள்ளார்கள்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
‘ மூன்று ரக்அத்கள் வித்ரு (தொழுதால்) மக்ரிபைப் போல் தொழாதீர்கள் ’
(நூல் : பைஹகீ : 3 /3 1 | ஹாக்கீம் : 1 / 403)
1) இரவு தொழுகைக்கு என்று நபி (ஸல்) அவர்கள் எந்த சிறப்பு துஆவும் கூறியதும் கிடையாது பிறருக்கு கற்று கொடுத்ததும் கிடையாது!
2) இரவு தொழுகைக்கு என்று எந்த சூராவும் குறிப்பிட்டு ஓத வேண்டும் என்றும் கிடையாது! நமக்கு மனனம் உள்ள சூராக்கள் சிறியதோ அல்லது பெரியதோ ஓதி தொழுது கொண்டால் போதுமானது ஆகும்!
3) சில ஊருகளில் 4 ரக்ஆத் தொழுது விட்டு இடையில் ஸலவாத் என்று ஒன்றை ஓதுவார்கள் முதலில் நபி (ஸல்) அவர்கள் மீது பின்பு நான்கு கலீபாக்கள் மீது ஆனால் இதற்க்கு அல் குர்ஆனிலோ அல்லது ஹதீஸ்களிலோ எந்த ஆதாரமும் கிடையாது! இது பித்ஆத் ஆனா செயல் ஆகும் இவ்வாறு செய்ய கூடாது!
4) இஷாவிற்கு பிறகு தான் இரவு தொழுகை கட்டாயம் தொழ வேண்டும் என்று கிடையாது நாம் சீக்கிரம் உறங்கி விட்டு பின்பு கடைசி இரவில் கூட எழுந்து தொழுது கொள்ளலாம்!
5) கணவன் தன் மனைவிக்கு இமாமத் செய்து தொழ வைக்கலாம்! ஆனால் மனைவி கணவனுக்கு இமாமத் செய்ய கூடாது எந்த சூழ்நிலையிலும்!
@அல்லாஹ் போதுமானவன் 


No comments:
Post a Comment