பரக்கத்தை நீக்கும் 9 காரணிகள்!
நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் - பரகத்துகளை - பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்! ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்!
(அல்குர்ஆன் : 7 : 96)
2) அல்லாஹ்வின் பாதையில் செலவளிக்காமல் கஞ்சனாக இருத்தல் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒவ்வொரு நாளும் இரு வானவர்கள் இறங்குகின்றனர்! அவ் விருவரில் ஒருவர், “அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதி பலனை அளித்திடுவாயாக!” என்று கூறுவார். மற்றொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!” என்று கூறுவார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1442)
3) வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் இருத்தல் :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான்! எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 2387)
4) வட்டிக்கு வாங்குதல் :
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்!
(அல்குர்ஆன் : 2 : 276)
5) வியாபாரத்தில் மக்களை ஏமாற்றுதல் :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
விற்பவரும் வாங்குபவரும் பிரியும் வரை (முறித்துக் கொள்ளும்) உரிமை படைத்திருக்கிறார்கள். அவ்விருவரும் உண்மை கூறி (பொருளின் குறையை)த் தெளிவுபடுத்தினால் அவர்களின் வியாபாரத்தில் அவர்களுக்கு பரக்கத் செய்யப்படும். அவ்விருவரும் பொய் கூறி(எதையேனும்) மறைத்தால் அவர்களுக்கு வியாபாரத்தின் பரக்கத் நீக்கப்படும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 2110)
6) பேராசையுடன் செயற்படுதல் :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். இதை(ப் பேராசையின்றி) நல்ல எண்ணத்துடன் பெறுகிறவருக்கு அதில் சுபிட்சம் வழங்கப்படும். மனத்தை அலையவிட்டு(ப் பேராசையுடன்) இதை எடுத்துக் கொள்கிறவருக்கு அதில் சுபிட்சம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்!
(நூல் : ஸஹீஹுல் புஹாரி : 6441)
7) பொய் சத்தியம் செய்து வியாபாரம் செய்தல் :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(பொய்) சத்தியம் செய்வது பொருளை (சுலபமாக) விற்பனை செய்ய உதவும். ஆனால், பரக்கத் (எனும் அருள் வளத்)தை அழித்துவிடும்!
(நூல் : ஸஹீஹுல் புஹாரி : 2087)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் தன்னுடைய அடியானுக்கு கொடுத்த பொருளில் சோதனை செய்கிறான். யார் அல்லாஹ் கொடுத்ததை பொருந்தி கொள்கிறாரோ! அவருக்கு அதில் பரக்கத் செய்கிறான். யார் அல்லாஹ் கொடுத்ததில் திருப்தி கொள்ளவில்லையோ! அதில் அல்லாஹ் பரக்கத் செய்வதில்லை!
(நூல் : முஸ்னது அஹ்மது : 20279)
9) ஹரமான வழியில் பொருளாதாரம் ஈட்டுதல் :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் ஒரு செல்வத்தை உரிய முறையில் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு அதில் வளம் (பரகத்) வழங்கப்படும். யார் ஒரு செல்வத்தை முறையற்ற வழிகளில் எடுத்துக்கொள்கிறாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 1899)
@அல்லாஹ் போதுமானவன் 

No comments:
Post a Comment