பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, February 5, 2019

வட்டி வட்டி வட்டி வட்டி வட்டி வட்டி*

🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨

*வட்டி வட்டி வட்டி வட்டி வட்டி வட்டி*

*இலவசம் இலவசம் நரகம் இலவசம்..*

*ஒரு இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி நம் நலனுக்காக படியுங்கள்..*

இன்று நம்மில் பல நபர்களுக்கு வட்டி என்பது பெரும்பாவம் என்பதே தெரியாமல் அதை வாங்குகின்றனர்..

முதலில் வட்டி எந்த எந்த வகையில் வாங்குகின்றனர் என்பதை பார்ப்போம்..

1.கல்விக்கடன்
2.வீட்டுக்கடன்
3.வாகனக்கடன்
4.வியாபரக்கடன்
5.சுயக்கடன் (personal loan)
6.விவசாயக்கடன்

இன்னும் ஏராளமான கடன்களை வாங்கி அதற்கு வட்டி கெட்டி அல்லாஹ் தடை செய்த பெரும் பாவங்களில் நம் முஸ்லிம் மக்கள் சிக்கி கொள்கின்றனர்..

அது மட்டும் இல்லாமல் வங்கியில் நாம் பணம் வைத்து இருப்போம் அதற்கு 3 அல்லது 6 மாதத்திற்கு ஒருமுறை வட்டி நமக்கு வங்கி(Bank) தரும் அதில் அதிகமானோர் அதை கண்டு கொள்வதில்லை...

இஸ்லாமை பொருத்தவரையில் வட்டி வாங்குவதும் தவறு வட்டி கொடுப்பதும் தவறு வட்டிக்கு சாட்சி கூறுவது, சாட்சி கையெழுத்து போடுவது போன்ற அனைத்தும் பெரும் குற்றமாகும்...

பிறகு க்ரெடிட் கார்டு (credit card) எனும் கடன் அட்டையை வைத்து நமக்கு வேண்டிய பொருளை வாங்கி பின்பு பணம் செலுத்துதல் போன்ற அனைத்தும் ஹராம் *அல்லாஹ்வால்* தடை செய்யப்பட்டது ஆகும்....

வட்டியை பற்றியும் அதற்கு மறுமையில் கிடைக்கும் தண்டனையை பற்றியும் *அல்லாஹ்* பின்வரும் வசனங்களில் எச்சரிகின்றான்...


*اَلَّذِيْنَ يَاْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِىْ يَتَخَبَّطُهُ الشَّيْطٰنُ مِنَ الْمَسِّ‌ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبٰوا‌ ۘ‌ وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰوا‌  فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰى فَلَهٗ مَا سَلَفَ وَاَمْرُهٗۤ اِلَى اللّٰهِ‌ وَمَنْ عَادَ فَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏ *

  *💐யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.*

*📘(அல்குர்ஆன் : 2:275)*

*يَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَيُرْبِى الصَّدَقٰتِ‌ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِيْمٍ‏ *

*🌾அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.*

*📕(அல்குர்ஆன் : 2:276)*

*يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِىَ مِنَ الرِّبٰٓوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏*

*🌺ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.*

*📗(அல்குர்ஆன் : 2:278)*

*وَّاَخْذِهِمُ الرِّبٰوا وَقَدْ نُهُوْا عَنْهُ وَاَكْلِـهِمْ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ‌  وَاَعْتَدْنَـا لِلْـكٰفِرِيْنَ مِنْهُمْ عَذَابًا اَ لِيْمًا‏*

*🌱வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.*
*🌳(அல்குர்ஆன் : 4:161)*

*وَمَاۤ اٰتَيْتُمْ مِّنْ رِّبًا لِّيَرْبُوَا۟ فِىْۤ اَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُوْا عِنْدَ اللّٰهِ‌ وَمَاۤ اٰتَيْتُمْ مِّنْ زَكٰوةٍ تُرِيْدُوْنَ وَجْهَ اللّٰهِ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُضْعِفُوْنَ‏*

*💐(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.*

*📕(அல்குர்ஆன் : 30:39)*

ஆக இன்றில் இருந்து வட்டி எனும் கொடிய பஅவத்தில் இருந்து நாமும் விலகுவோம் மற்றவர்களையும் விலக்குவோம்...

*இன்ஷா அல்லாஹ்..*