வீரப்பெண்மணி உம்மு உமாரா (ரழி) வாழ்கை வரலாறு சுருக்கம் 💞
• மதினாவில் பனு நஜ்ஜார் எனும் அன்சாரிக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தான் நுஸைபா பின்த் கஅப் (ரழி) எனும் உம்மு உமாரா (ரழி).
• இவரின் முதல் கணவர் பெயர் ஜைத் இப்னு ஆஸிம் (ரழி) இவரின் மூலம் அப்துல்லாஹ் (ரழி) மற்றும் ஹபீப் (ரழி) என இரண்டு ஆண் பிள்ளைகள் உண்டு.
• முதல் கணவர் பத்ர் போரில் ஷஹீத் ஆன பின்பு அரபா இப்னு அம்ர் (ரழி) என்பரை மறுமணம் செய்து கொண்டார்கள் இவரின் மூலம் தமீம் என்று ஒரு ஆண் பிள்ளையும், ஃகவ்லா என்று ஒரு பெண் பிள்ளை பிறந்தது.
• மதினாவாசிகளுடன் நபி (ஸல்) அவர்களுடன் நடைபெற்ற இரண்டாவது கணவாய் உடன்படிக்கை இதை பைஅத்துல் அகபதிஸ்ஸானியா என்றும் கூறுவார்கள். இதில் மொத்தம் ஆண்கள் 73 நபர்களும் பெண்களில் இருவர் கலந்து கொண்டார்கள் 1) உம்மு உமாரா (ரழி) 2) அஸ்மா பின்த் அம்ர் (ரழி) ஆவர்.
• இந்த நிகழ்வின் போது தான் உம்மு உமாரா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை முதன் முதலாக சந்தித்தார்கள்! இதன் பின்பு தான் மதினா வாசிகள் நபி (ஸல்) அவர்களிடம் வாக்குறுதி கொடுத்தார்கள். இந்த உடன்படிக்கை பின்பு தான் நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள்.
• இந்த உடன்படிக்கைக்கு பின்பு மதினாவிற்கு சென்ற உம்மு உமாரா (ரழி) அவர்கள் தமது குடும்பத்தார்களையும் மதீனத்துப் பெண்களையும் சந்தித்து அவர்களை ஏகத்துவக் கொள்கையின் பக்கம் அழைக்கவும், அதுபற்றி நற்செய்தி அறிவிக்கவும் செய்தார்கள்.
• அல்குர்ஆனில் ஆண்கள் குறிப்பிடுவது போல் ஏன் பெண்களை பற்றி குறிப்பிடவில்லை என உம்மு உமாரா (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்க, அல்லாஹ் (அல்குர்ஆன் : 33 : 35) வசனத்தை அருளினான்.
• உஹது போரில் உம்மு உமாரா (ரழி) அவர்களும், அவர்களின் கணவன் மற்றும் மூத்த மகனுடன் ஆகியோருடன் கலந்து கொண்டார்கள். போர் கடுமையான போது பல முஸ்லீம்கள் புறமுதுகிட்டு ஓட , அந்த நேரத்திலும் நபி (ஸல்) அவர்களை சுற்றி சில ஸஹாபாக்கள் பாதுகாப்பு அளித்தார்கள் அதில் குறிப்பாக இரண்டு ஸஹாபாக்கள் முன்னனியாக நின்று எதிரிகளை எதிர்த்தார்கள். அதில் ஒருவர் தான் உம்மு உமாரா (ரழி). இந்தப்போரில் இவர்கள் வாள் எடுத்தும் சண்டை போட்டுள்ளார்கள்.
• போரின் போது உம்மு உமாரா (ரழி) அவர்களுக்கு தோள் பகுதியில் பெரிய வெட்டு காயம் ஏற்பட்டது, இதைக் கவனித்து விட்ட நபியவர்கள், நுஸைபாவின் மகனை நோக்கி, உம்மு உமாராவின் மகனே! உன் தாயார்! உன் தாயார்! அவரது காயத்திற்குக் கட்டுப் போடு, என்று உத்தரவிட்டார்கள்.
• நபி (ஸல்) அவர்கள் உஹது போர் முடிந்த பின்பு இவ்வாறு கூறினார்கள் : இன்று இவர்கள் அனைவரை விடவும் உம்மு உமாரா (ரழி) அதிக வீரத்தைக் காட்டினார்கள்.
இப்னு ஹிஷாம் தமது ஸீராவில் எழுதியது அதில் உம்மு உமாரா (ரழி) அவர்கள் கூறியதாக:
எதிரிகளின் குதிரைப் படையினர் தான் எங்களை அதிகமாகத் தாக்கினார்கள். எங்களைப் போன்று அவர்களும் வாகனமின்றி வந்திருந்தால் இன்ஷா அல்லாஹ் அவர்களை ஒரு கை பார்த்திருப்போம். ஒருவன் குதிரை மீது வந்து என்னைத் தாக்கினான். நான் கேடயத்தின் மூலம் அவனது தாக்குதலிலிருந்து என்னைத் தற்காத்தேன். அவன் தனது வாளால் எதையும் சாதிக்க முடியாமல் திரும்பினான். அப்போது அவனது குதிரையின் குதிங்கால் வெட்டினேன். குதிரை கீழே விழுந்தது. உடனே நபி (ஸல்)அவர்கள் என்னுடைய மகனை அழைத்து அப்துல்லாஹ்வே உன்னுடைய தாயைப்பார், உனது தாயைப் பார் என்று சப்தமிட்டார்கள். என்னுடைய மகன் வந்து எனக்கு உதவினார்.
• உம்மு உமாரா (ரலி) அவர்களின் மகன் ஹபீப் (ரலி) அவர்களை பொய்யன் நபி முஸைலிமா ஒரு இடத்தில் கைது செய்து தன்னை நபி என ஏற்றுக்கொள்ளுமாறு நிர்பந்தம் செய்தான். அவர் அதை மறுக்க சித்திரவதை செய்து அவரை கொன்று விட்டான்.
• அபூபக்கர் (ரழி) அவர்கள் ஆட்சி காலத்தில் தன்னை நபி என்று வாதிட்ட பொய்யன் முஸைலிமாவிற்கு எதிராக யமாமாவில் போர் நடைபெற்றது. இதில் கலந்து கடுமையாக போர் செய்த உம்மு உமாரா (ரழி) அவர்களுக்கு ஒரு கையை முழுவதுமாக வெட்டப்பட்டது. படைத்தளபதியான காலித் இப்னு வலீத் (ரழி) அவர்கள் இவருக்கு ஒலிவ எண்ணெயின் மூலம் சிகிச்சை அளித்தார்.
• யமாமா போரில் இவரின் மற்றோரு மகன் அப்துல்லாஹ் (ரழி) அவர்களும் ஷஹீத் ஆனார்கள். இந்த போரில் உம்மு உமாரா (ரழி) அவர்கள் உடலில் சிறிய பெரிய 12க்கும் அதிகமான வெட்டு காயம் ஏற்பட்டு இருந்தது.
• ஒரு முறை உமர் (ரலி) அவர்களிடம் பொன்னிழை கலந்து நெய்யப்பட்ட மிகமிக விலையுயர்ந்த இரு பட்டுப்புடவைகளை கனீமத் பொருளாக வந்தது அப்போது உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள் :
• உம்மு உமாரா (ரழி) அவர்கள் தான் தான் இதற்கு தகுதியானவர் ஏனெனில் உஹதுப் போருக்குப்பிறகு நபி (ஸல்) அவர்கள் உம்மு உமாராவின் வீரம் குறித்து இவ்வாறு கூறக் கேட்டுள்ளேன்: உஹதுப்போரில் வலது பக்கம் இடது பக்கம் எங்கு நோக்கினும் உம்மு உமாராவே போரிட்டுக் கொண்டிருப்பதை நான் கண்டேன்.
• கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் ஹிஜ்ரீ 13 வரை உயிர் வாழ்ந்து பின்பு மரணித்தார்கள். நுஸைபா
ரலியல்லாஹு அன்ஹா!
• அல்லாஹ் இவர்களை பொருந்தி கொள்ளுவானாக, சொர்க்கத்திலும் உயர்ந்த பதவிகளை வழங்குவனாக.
@அல்லாஹ் போதுமானவன் 💞
No comments:
Post a Comment