சகோதரிகளே! இவர்களிடம் கவனமாக இருங்கள்!
• இவர்களுக்கு தெரிந்தது முஸ்லீம் பெண்களை மட்டும் தான்! மார்க்கத்தை கற்று கொள்ள வேண்டும் எனக்கு மார்க்கம் பற்றி தெரியாது என்னுடைய குடும்ப சூழ்நிலை அப்படி உங்களை பார்த்தால் நன்கு மார்க்க விளக்கம் உள்ள நபராக தெரிகிறது எனக்கு சொல்லி கொடுக்க முடியுமா? இவ்வாறு கூறி ஆரம்பம் செய்வார்கள் இதில் முஸ்லீம் அல்லது முஸ்லீம் அல்லாத நபராக இருந்தாலும் சரி விதி விளக்கு கிடையாது!
• எவ்வளவு மார்க்கத்தை பின் பற்றும் சகோதர்கள் இருந்தும் இவர்களை பெண்களை நாடியே வருகிறார்கள்! நேரடியாக பெயர் ஊர் வயது எண் கேட்க முடியாது! அதனால் தான் இவர்கள் மார்க்கம் என்ற பெயரில் மார்க்கத்தை பயன் படுத்தி அதன் மூலமாக ஆரம்பம் செய்கிறார்கள்!
• ஆரம்பத்தில் பெண்களை நன்கு புகழ்ந்து பின்பு படி படியாக ஆரம்பம் செய்கிறார்கள்! பெண்களும் நாம் உறுதியாக உள்ளோம்! தவறாக பேச போவது கிடையாது மார்க்கம் பற்றி தான் சொல்லி கொடுக்க போகிறோம்! இது நன்மைக்குரிய ஒன்று தான் என்ற நோக்கத்தில் ஆரம்பம் செய்வார்கள்!
• ஆரம்பம் ஹலால் ஆக ஆரம்பம் ஆகும் போக போக அது ஹராமிலயே முடிகிறது!!!
• கண்ணியத்திற்குரிய சகோதரிகளே! இதில் கவனமாக இருங்கள்! நேரடியாக யாரேனும் வந்தால் சகோதர் யாரேனும் பார்த்து கொள்ளுங்கள் என்னிடம் வராதீர்கள் என்று உறுதியாக கூறி விட்டு விலகி கொள்ளுங்கள் அந்த நபர் என்ன கூறினாலும் சரியே!
• சமூகவலைத்தளத்திலும் சரி யாரேனும் வந்தால் முதலில் replay செய்ய வேண்டாம்! உங்களிடம் பேச என்ன கதைகள் கூற முடியுமோ அந்த அளவுக்கு கூறுவான் இவ்வாறு நபர்களை முற்றிலும் தவிர்த்து கொள்ளுங்கள்! அல்லது வேறு சகோதரர் ID கொடுத்து இவரிடம் கேட்டு கொள்ளுங்கள் என்று கூறி விட்டு விலகி கொள்ளுங்கள்! அதிலயே இருந்து விளக்கம் கொடுக்க வேண்டாம்!!!!
• நன்மைகளை பெறுவதற்கு எவ்வளவு எளிதான வழிகளை இஸ்லாம் நமக்கு கூறி உள்ளது அவற்றை நம்முடைய சக்திக்கு இயன்ற அளவுக்கு செய்து கொள்ளுவோம்! பித்னாவில் சிக்குவதை விட தனிப்பட்ட முறையில் அமல் செய்வது சிறந்தது!
• அல்லாஹ் நம்மை இவ்வாறான தீங்குகளை விட்டும் பாதுகாப்பானாக ஆமின்!
@அல்லாஹ் போதுமானவன் 


No comments:
Post a Comment