மார்க்கத்திலும், நேசத்திலும் ஒன்றிணைந்த தம்பதிகள் உம்மு சுலைம் (ரழி), அபூ தல்ஹா (ரழி) வாழ்கை வரலாறு சுருக்கம்!
• உம்மு சுலைம் (ரழி) அவர்களின் முதல் கணவர் பெயர் மாலிக், இவர் இஸ்லாமை ஏற்க்காமலேயே சிரியாவில் கொல்லப்பட்டார்! இவர்களுடைய மகன் தான் அனஸ் (ரழி), இவர் சிறந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவர் அது மட்டும் அல்லாமல் அல்குர்ஆனுக்கு அதிகம் தப்ஸிர்களும் இவர் கொடுத்து உள்ளார்.
• உம்மு சுலைம் (ரழி) அவர்களின் இரண்டாம் கனவர் தான் அபூதல்ஹா (ரழி), இவர்களது மகனார் தான் உமைர், அப்துல்லாஹ்
• ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஏற்காதவராக இருந்த அபூதல்ஹா (ரழி) அவர்கள், உம்மு ஸுலைம் (ரழி) அவர்களை மிகவும் விரும்பி பெண் கேட்டார்கள். அதற்கு உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள், நீங்கள் நல்ல மனிதராக இருந்தாலும், இறைமறுப்பு கொள்கையில் உள்ளீர்கள். நீங்கள் இஸ்லாத்தை ஏற்றால் அதுவே என்னுடைய மஹ்ராகும். என்று கூறிய பின்பு அபூ தல்ஹா (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்று உம்மு சுலைம் (ரழி) அவர்களை நிக்காஹ் செய்து கொண்டார்கள்.
(நூல் : சுனன் நஸாயி : 3289)
• நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் பயணத்தின் போது சொர்க்கத்தில் உம்மூ சுலைம் (ரழி) அவர்களை பார்த்தார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 4852)
• ஒப்பாரி வைக்க கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் மதினா வாசிகளிடம் பைஅத் (வாக்குறுதி) வாங்கி பொழுது அதை ஒரு சிலர் தவிர பெரும்பாலான மக்கள் பின் பற்ற வில்லை. பின்பற்றியவர்களில் உம்மூ சுலைம் (ரழி) அவர்களும் ஒருவர்.
(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 1703)
• நபி(ஸல்) அவர்கள் போருக்கு செல்லும் போதெல்லாம் உம்மு சுலைம் (ரழி) அவர்களும் இன்னும் சில அன்சாரி பெண்மணிகளும் உடன் செல்வார்கள். போர் வீரர்களுக்கு தண்ணீர் கொடுப்பார்கள், காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை அளிப்பார்கள்.
• ஹுனைன் போரின் போது உம்மு சுலைம் (ரழி) அவர்கள் ஒரு சிறிய கத்தி ஒன்றை வைத்து இருந்தார்கள். எதிரிகள் யாரேனும் தம்மை நேருக்கினால் அவர்களை தாக்க வைத்து இருந்தார்கள் இதை கேள்விப்பட்ட நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 3698, 3697)
• அபூதல்ஹா (ரழி) அவர்கள் மதினாவில் பெரும் செல்வந்தராக இருந்தார். அவரது செல்வங்களிலயே மிகவும் பிரியமானது பைரஹா என்ற தோட்டம் தான் இது மஸ்ஜிதுந் நபவீக்கு எதிரே உள்ளது. இதில் அவ்வப்போது நபி (ஸல்) அவர்கள் சென்று சுவையான நீரை அருந்துவார்கள். நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்” எனும் இந்த (3:92ஆவது) வசனம் அருளப்பெற்ற போது, அபூதல்ஹா (ரழி) அவர்கள் இதை அல்லாஹ்விற்காக தர்மம் செய்து விடுகிறேன் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் நீங்கள் இதை உங்கள் நெருக்கிய உறவினர்களுக்கு கொடுப்பது சிறந்தது என்ற கூற, அவ்வாறே அவர் செய்தார்.
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 1821)
• நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதினாவிற்கு வந்த போது அவர்களுக்கு குறிப்பிட்ட பணியாளராக யாரும் இல்லை. இதை கண்ட அபூதல்ஹா (ரழி) அவர்கள் அனஸ் (ரழி) அவர்களை நபி (ஸல்) அவர்களுக்கு பணியாளராக அனுப்பினார்கள். அனஸ் (ரழி) அவர்கள் உம்மு சுலைமின் (ரழி) அவர்களின் முதல் கணவனின் மகனாவார்.
(நூல் : ஸஹீஹ் புகாரி : 2768)
• உஹுதுப் போரின் போது நபி(ஸல்) அவர்களை தனியே விட்டுவிட்டு மக்கள் தோற்று (ஓடி)விட்டனர். அபூதல்ஹா(ரலி) நபி (ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள் நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். உம்மு சுலைம் (ரழி) அவர்கள் போரில் காயமுற்று வீழ்ந்து கிடக்கும் மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து அவர்களின் வாய்களில் மீண்டும் உற்றிக் கொண்டிருந்தார்கள்.
(நூல் : ஸஹீஹ் புகாரி : 3811)
• அபூதல்ஹா (ரழி) அவர்களின் மகன் உமைர் (ரழி) அவர்கள் நோயுற்று இறந்த போது அவர்கள் வீட்டிலயே நபி (ஸல்) அவர்கள் தொழ வைத்தார்கள்! இவர்களுக்கு இதன் பின்பு அப்துல்லாஹ் என்ற ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
(நூல் : ஹாகிம் : 1350)
• உஸ்மான் (ரழி) அவர்கள் ஆட்சி காலத்தில் கடல் வழியாக ஒரு போருக்கு சென்றார்கள். அப்போது அபூதல்ஹாவிற்கு வயது ஆகி விட்டது இருந்தாலும் அவர்கள் அதில் கலந்து கொண்டு கடலில் பயணம் செய்து கொண்டு இருக்கும் பொழுது இறந்து விட்டார்கள். பின்பு ஒரு தீவில் இவரை நல்லடக்கம் செய்தார்கள்.
@அல்லாஹ் போதுமானவன் 💞
No comments:
Post a Comment