பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

களா நோன்பு எப்போது நிறைவேற்ற வேண்டும்?


களா நோன்பு எப்போது நிறைவேற்ற வேண்டும்?
களா நோன்பை பொறுத்த வரை அதை நாம் நோன்பு வைக்க சூழ்நிலை அமைந்து பின்பு தாமதம் படுத்தாமல் நிறைவேற்ற முடியுமோ அப்போதே நாம் 'களா' செய்வதே சிறந்தது. ஏனெனில், அதுவே நன்மையின் பக்கம் முந்திச் செல்வதாகும்! கடமையை விரைந்து நிறை வேற்றுவதாகும்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் :
எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டு விடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது.
நபி (ஸல்) அவர்களுக்கு ஆயிஷா (ரலி) பணிவிடை செய்ததே இதன் காரணம் என்று யஹ்யா கூறுகிறார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1950)
• இந்த ஹதீஸ் மூலம் தகுந்த காரணம் எதுவுமின்றி ஒருவர் தமது களா நோன்பை அடுத்து வருகின்ற ரமலான் றமளான வரை பிற்படுத்தக் கூடாது!என்பதைப் புரிய முடிகிறது.
• நாம் சூழ்நிலை அமைந்தும் களா நோன்புகளை வைக்காமல் இருந்தால் அது, அடுக்கடுக்காய் நோன்புகள் குவிந்துவிடுவதற்கு வழிவகுத்துவிடும். சிலநேரம் அவற்றை நோற்று முடிக்க அவரால் இயலாமலும் ஆகிவிடலாம். அல்லது அவர் இறந்தும் விடலாம்.
• நோன்பு என்பது தொழுகையைப் போன்று திரும்பத்திரும்ப வரும் வழிபாடாகும். இரண்டாவதின் காலம் வரும் வரை முதலா வதைப் பிற்படுத்தக் கூடாது.
• விடுபட்ட நோன்புகளைக் களா செய்யும்போது, அவற்றின் மொத்த எண்ணிக்கையை அப்படியே தொடர்ச்சியாக வைக்க வேண்டுமா அல்லது வாய்ப்பமையும் நாள்களில் சிறிது சிறிதாக வைத்துக்கொள்ளலாமா என்றொரு கேள்வி எழுகிறது.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சொல்கிறார்கள் :
அல்குர்ஆனில் வேறு நாள்களில் நோற்கலாம் என்று அல்லாஹ் (பொதுவாகவே) கூறுவதால் விடுபட்ட நோன்பு களைப் பிரித்துப் பிரித்து வைப்பதில் தவறில்லை.
(நூல் : கிதாபுஸ் ஸியாம் : 40)
1) களா நோன்பாளி இறந்துவிட்டால் :
• தம்முடைய களா நோன்பை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பே கிடைக்கப் பெறாமலும், அந்த நோன்பை அலட்சியப்படுத்தாமலும் இயலாமையிலேயே நீடித்து இறந்து விட்டால், அவர் அல்லாஹ்வினால் குற்றவாளியாக பிடிக்கப்படமாட்டார்.
• ஏனென்றால், வேறு சில நாள்களில் கணக்கிட்டு நோன்பு வைப்பதைத்தான் அல்லாஹ் அவர் மீது கடமையாக்கியிருந்தான். ஆனால், அப்படிப்பட்ட நாள்களை அவரால் அடையவே முடியவில்லை எனவே, அவரை விட்டும் அக்கடமை நீங்கிவிடுகிறது.
• எப்படி அடுத்த ரமலான் வருவதற்கு முன்னரே ஒருவர் இறந்து விட்டால், அவர் மீது அந்த நோன்பு கடமை இல்லையோ அதைப் போன்றே இதுவும்.
• ஆனால், நிறைவு செய்வதற்குச் சாத்தியம் இருந்தும் அதில் அவர் கவனக்குறைவாக, அசட்டையாக இருந்து மரணித்து விட்டால் எத்தனை நாள்களின் 'களா'வை - சாத்தியமிருந்தும் விட்டு விட்டாரோ அத்தனை நாள்களின் நோன்பை அவருக்குப் பதிலாக அவருடைய பொறுப்பாளர் / வாரிசு நோற்கலாம். அவ்வாறு அவர்கள் நோற்க விரும்பவில்லை என்றால் ஒவ்வொரு நோன்புக்கும் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கலாம்.
❤️ முதல் வகை : விரும்பினால் வாரிசுகள் நோற்கலாம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் :
ஜுஹைனா கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?' என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், 'ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய், உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய். எனவே, அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்' என்றார்கள்.
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1852)
• பொறுப்பாளர் என்பவர் அவருடைய வாரிசோ, உறவினரே ஆவார். இறந்தவரின் மீது எத்தனை நாள்களின் நோன்பு கடமைய உள்ளதோ அத்தனை நாள்களின் கணக்கில் ஒரு குழுவினர் ஒரே நாளில் அவர் சார்பாக நோற்பதும் கூடும்.
ஹசன் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள் :
இறந்தவர் சார்பாக முப்பது பேர் ஒரே நாளில் நோன்பு நோற்றாலும் அது கூடும்.
(நூல் : கிதாபுஸ் ஸியாம் : 42)
❤️ இரண்டாம் வகை : விரும்பினால் உணவளிக்கலாம் :
இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் நோன்பு நோற்பார்.
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1952)
• இந்த ஹதீஸின் அடிப்படையில் இறந்தவர் சார்பாக அவரின் வாரிசுகள் ரமலானில் களா நோன்புகளை நோற்க வேண்டும் என்று சட்டம் கூறப்படுவதுண்டு. ஆனால், இது நேர்ச்சை நோன்புகளையே குறிக்கும் என்பதை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் கீழ்வரும் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள் :
இறந்து விட்டவர் சார்பாக அவருடைய பொறுப்புதாரி றமளானுடைய ஒவ்வொரு நாள் நோன்புக்குப் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இறந்து விட்டவர் (நோன்பு நோற்பதாக) நேர்ச்சை செய்திருந்து அதை நிறைவேற்றாது மரணித்திருந்தால் அவர் சார்பாக அவரு டைய பொறுப்புதாரிகள் யாரேனும் நோன்பு நோற்க வேண்டும்.
(நூல் : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் : 7651)
• றமளான் மாத நோன்பை நிறைவேற்றாது இறந்துவிட்டவர் குறித்து இப்னு அப்பாஸ் அவர்கள் கூறும்போது 'அவர் சார்பாக ஏழைக்கு உணவளியுங்கள்' என்று கூறினார்கள். நேர்ச்சை நோன்பு குறித்து கூறும்போது 'அவர் சார்பாக அவருடைய பொறுப்புதாரி அந்த நோன்பை நிறைவேற்றுவார்' என்று கூறினார்கள்.
(நூல்: அஸ் ஸுனனுல் குப்ரா பைஹகீ : 8492)
• இந்த ஆதாரங்கள் மேலே இமாம் புகாரீ (ரஹ்) பதிவுசெய்து அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் நபிமொழியை விளக்குவதாக உள்ளன. அந்நபிமொழியில் இறந்தவருக்குக் கடமையான நோன்பு இருப்பதைப் பற்றிப் பொதுவாகக் கூறப்பட்டுள்ளது.
• ஆனால், அந்தக் கடமை என்பது நேர்ச்சை நோன்புகளையே குறிப்பிடும் என்பதை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களால் விளங்கிக்கொள்கிறோம். ஆக, றமளான் நோன்புக்கு இறந்தவரின் பொறுப்புதாரி மீது கடமை இல்லை. ஏழைக்கு உணவளிப்பதே போதுமானதாகும். எனினும், பொறுப்புதாரி விரும்பினால் இறந்தவர் சார்பாக நோன்பு வைக்கவும் அனுமதி உண்டு என்பது கருத்து.
(அல்லாஹ் மிக அறிந்தவன்.)
@அல்லாஹ் போதுமானவன் 💞


 

No comments:

Post a Comment