பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, November 8, 2019

நன்மைகளை வாரி - 23

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*✍🏼...நன்மைகளை வாரி*
                          ⤵
         *வழங்கும் தொழுகை*

         *✍🏼...தொடர் [ 23 ]*

*☄தொழுகைக்காக*
            *நடந்து செல்வதன்*
                          *சிறப்புகள் { 02 }*

*☄சொர்க்கத்தில்*
          *மாளிகை கட்டப்படும்☄*

*🏮🍂தொழுகைக்காக ஒவ்வொரு முறை நாம் பள்ளியை நோக்கிச் செல்லும் போதும் அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகையைத் தயார் செய்கின்றான்.*

*சுப்ஹானல்லாஹ்! தொழுகை நமக்கு எவ்வளவு பெரிய பாக்கியங்களையெல்லாம் பெற்றுத் தருகிறது.*

حَدَّثَنَا  أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ  حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ،  عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، *عَنْ أَبِي  هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏"‏ مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ أَوْ رَاحَ أَعَدَّ اللَّهُ لَهُ فِي الْجَنَّةِ نُزُلاً كُلَّمَا غَدَا أَوْ رَاحَ ‏"*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் பள்ளிவாசலுக்குக் காலையிலோ மாலையிலோ சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகையை (அல்லது விருந்தை)த் தயார் செய்கிறான்.*_

*🎙அறிவிப்பவர்:*
                *அபூஹுரைரா (ரலி),*

*📚நூல்: முஸ்லிம் (1187)📚*

*🏮🍂அறவே தொழுகையை நிறைவேற்றாமல் இருப்பவர்களும், தொழுகை விஷயத்தில் பொடும்போக்காக இருப்பவர்களும் இத்தகைய பாக்கியங்களை எப்படி அடைந்து கொள்ள முடியும்❓*

*🏮🍂தொழுகைக்காக நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டிற்கும் எத்தகைய பாக்கியங்களை அல்லாஹ் வழங்குகிறான் என்பதைப் பின்வரும் நபிமொழிகள் நமக்குத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄ஒவ்வொரு எட்டிற்கும்*
             *பத்து நன்மைகள்☄*

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் அங்கத் தூய்மை செய்து விட்டு பிறகு தொழுகை நிறைவேற்றுவதற்காக பள்ளிவாசலுக்கு வந்தால் அவன் பள்ளிவாசலை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டிற்காகவும் பத்து நன்மைகளை அவனுடைய இரண்டு எழுத்தர்களும் பதிவு செய்கிறார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
               *உக்பா பின் ஆமிர் (ரலி),*

*📚நூல்: இப்னு ஹிப்பான் (2045)*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment