பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, November 12, 2019

மறுமை நாளில் - 1

*👺👺மீள் பதிவு👺👺* 

*📚 📚 📚 மறுமை நாளில் என்றால் என்ன ❓ ❓ ❓அது எப்போது வரும் 📚 📚 📚*

 *பாகம் 1* 

 *இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்* 

 *திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு* 

 *மறுமை நாளில் ஏற்படும் நிகழ்வுகள் ……* 

இந்த உலகத்தின் அழிவு நாளே, மறு உலகத்தின் தொடக்க நாள்!

(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை – எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் நம்பிக்கை கொள்ளவில்லை.

 *(திருக்குர்ஆன் 54:1)* 

மனிதர்கள் தான் சம்பாதித்தவற்றின் பிரதிபலனை அடையும் விசாரண நாள் – யுகமுடிவுநாள், அந்த நாள் எப்போது நிகழும் என்பதை தான் மட்டுமே அறிந்த இரகசியம் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

மக்கள் உம்மிடம் மறுமை நாள் பற்றிக் கேட்கிறார்கள். நிச்சயமாக அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறதென நீர் கூறுவீராக! அதை நீர் அறிவீரா? அது சமீபமாக வந்துவிடலாம்.

 *(அல்குர்ஆன் 33:63)* 

“அந்த நாள், ஒரு வெள்ளிக்கிழமையில் ஏற்படும்” என்று மட்டும் கூறிய நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அந்த நாள் வருவதுற்குண்டான சில முன் அறிவிப்புகளை கூறியுள்ளார்கள். பல முன் அறிவிப்புகள் நடந்து முடிந்துவிட்டன, பல நடந்து கொண்டு இருக்கின்றன, பல நடக்க இருக்கின்றன. அவைகளில் 10 பெரிய கியாமத் நாளின் அடையாளங்கள்

 *(1)புகை மூட்டம்* 

 *(2)அதிசயப் பிராணி* 

 *(3)மேற்கில் சூரியன் உதிப்பது* 

 *(4)தஜ்ஜாலின் வருகை:-* 

 *(5) ஈஸா(அலை) அவர்களின் வருகை* 

 *(6) யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் வருகை* 

 *(7) கிழக்கே ஒரு பூகம்பம்,* 

 *(8) மேற்கே ஒரு பூகம்பம்,* 

 *(9) அரபு நாட்டில் ஒரு பூகம்பம் என மூன்று பூகம்பங்கள்* 

 *(10) பெரும் நெருப்பு – இவைகளில் ஒன்று ஏற்பட்டாலும், தொடர்ச்சியாக மற்றவவைகளும் தொடரும், அப்போது ஈமான் கொண்டு எந்த பிரயோஜனமும் இருக்காது.* 

இறுதி நாள் பாவிகளின் மீதே ஏற்படும். அதாவது இறுதி நாள் ஏற்படும் முன் முஃமின்களின் உயிர்களைக் கைப்பற்றக்கூடிய தூய்மையான காற்றை அல்லாஹ் அனுப்பிவைப்பான். அந்த காற்றை முஃமின்கள் சுவாசித்தவுடன் அவர்கள் உயிரை அல்லாஹ் கைபற்றுவான்

இறுதி நாள் ஏற்படும் முன் முஃமின்களின் உயிர்களைக் கைப்பற்றக்கூடிய தூய்மையான காற்றை அல்லாஹ் அனுப்பிவைப்பான். அந்த காற்றை முஃமின்கள் சுவாசித்தவுடன் அவர்கள் உயிரை அல்லாஹ் கைபற்றுவான். இப்போது நல்லவர்கள் யாரும் உயிரோடு இல்லாத நிலையில் அல்லாஹ் இந்த உலகத்தை அழிக்க நினைக்கிறான்.

 *சூர்* ஊதுவதற்கு என்று நியமிக்கப்பட்ட மலக்கு தனது *முதல் ஸூரை ஊதுவார்.* 

ஒரே ஒரு தடவை *ஸூர்* ஊதப்பட்டு, பூமியும், மலைகளும் தூக்கப்பட்டு தூள் தூளாக்கப்படும் போது, அந்நாளில் தான் அந்த நிகழ்ச்சி நடந்தேறும். வானம் பிளந்து விடும். அன்றைய தினம் அது உறுதியற்றதாக இருக்கும். வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அர்ஷை தம் மீது எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள்.

 *அல்குர்ஆன் 69:13-17* 

 *முதல் ஸூர்* ஊதப்பட்டவுடன் அனைவரும் இறக்க மாட்டார்கள். இதில் இறைவன் நாடியவர்கள் உயிருடன் இருப்பார்கள். அவர்கள் வானவர்கள் என்பதை மேற்கூறப்பட்ட வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

வானம், நட்சத்திரம், சூரியன், சந்திரன் மற்றும் இதர கோள்கள், பூமி, பூமியில் கடல்கள், மலைகள் என அனைத்தையும் நிர்மூலமாக்க இருக்கும் ஒரு பெரிய நிகழ்வே யுக முடிவு நாள்.

அந்தப் பெரு நடுக்கத்தை ஏற்படுத்தக் கூடியது (ஸூர் ஊதுதல்) நிகழும் நாள்!

 *(அல்குர்ஆன் 79:6)* 

 *அது ஒரே ஒரு சப்தம் தான்! (அல்குர்ஆன் 79:13)* 

பல இலட்சக்கணக்கான மைல்கள் தூரம் எட்டும் சூரியனின் ஒளிக்கற்றைகள் சுருங்கிப் போகும். சூரியன் ஒளியிழந்து விடும். ஏனைய நட்சத்திரங்களும் ஒளியிழக்கும். அவற்றின் வாழ்வின் இறுதிக் காலப்பிரிவுக்கு வந்து விடும். எனவே, அதி பயங்கர இருள் எங்கும் வியாபிக்கும்.

சூரியனின் பிடிமானம் அற்றுப்போகும். கோள்கள் மோதி நொறுங்கும். அதன் ஆரம்பமாக பூமியின் மீதுள்ள மலைகள் வேரோடு பெயர்ந்து மோதிச் சிதறி தூள் தூளாகிப் பறக்கும்.

கடல்கள் எரியும், எமது கண்களை மறைத்திருந்த வானத்தின் அந்த நீலத்திரை அற்றுப் போகும். அப்போது நரகம் அதன் பயங்கரத் தீ நாக்குகளோடு எம் கண்களுக்குத் தெரியும். சுவர்க்கமும் அதன் கவர்ச்சிகளோடு அருகில் நிற்கும்.

 *கடல்கள் தீ மூட்டப்படும் போது, .(அல்குர்ஆன் 81:6)* 

 *கடல்கள் கொதிக்க வைக்கப்படும் போது, (அல்குர்ஆன் 82:3)* 

 *வானம் அகற்றப்படும் போது, .(அல்குர்ஆன் 81:11)* 

சந்திரனுக்குக் கிரகணம் ஏற்படும் போது, சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப் படும் போது,

 *(அல்குர்ஆன் 75:8-9)* 

 *சூரியன் சுருட்டப்படும் போது, .(அல்குர்ஆன் 81:1)* 

 *நட்சத்திரங்கள் உதிரும் போது, .(அல்குர்ஆன் 81:2, 82:2)* 

 *நட்சத்திரங்கள் ஒளியிழக்கும் போது, (அல்குர்ஆன் 77:8)* 

பூமி பேரதிர்ச்சியாகக் குலுக்கப்படும் போது, தனது சுமைகளை பூமி வெளிப்படுத்தும் போது, இதற்கு என்ன நேர்ந்தது? என்று மனிதன் கேட்கும் போது, அந்நாளில் தனது இறைவன் இவ்வாறு அறிவித்ததாக தனது செய்திகளை அது அறிவிக்கும்.

 *(அல்குர்ஆன் 99:1-5)* 

 *அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; (அல்குர்ஆன் 81:3)* 

இதுவே அந்த மறுமை நாளின் தோற்றம்! அப்போது ஜீவராசிகளின் நிலை எவ்வாறிருக்கும்? மறுமை நாளின் ஆரம்ப நிலைகளிலேயே பயந்து போகும் வன விலங்குகள் தம்மையறியாமலேயே ஒன்று திரண்டு பிரமித்துப் போய், செய்வதறியாது நிற்கும். மனிதன் தன்னிடமுள்ள மிகப்பெறுமதியான பொருட்களைக் கூட கவனிக்க முற்படாது திகைத்துப் பிரமித்து செய்வதென்னவென்று தெரியாது நிற்பான். இவ்வாறு தான் நிலைத்து வாழ்ந்த உலகம் தன் கண் முன்னாலேயே அழிவுறுவதை அவன் காண்பான்.

 *அடுத்தது (இரண்டாம் ஸூர்), அதைத் தொடர்ந்து வரும்! (அல்குர்ஆன் 79:7)* 

இரண்டாவது சூர் ஊதும் பொறுப்பிற்குரிய மலக்கு இஸ்ராஃபீல் இரண்டாவது ஸூர் ஊதுவார்கள்.அல்லாஹ் எல்லாப் படைப்புகளையும் உயிர்ப்பிப்பான்.

நபிமார்கள், நல்லவர்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் அனைவருமே நிர்வாணமாக எழுப்பப்படுவார்கள். எவருமே ஆடை யணிந்திருக்க மாட்டார்கள். மேலும் இவ்வுலகில் கத்னா செய்திருந்தவர்கள் உட்பட அனைவரும் கத்னா செய்யப்படாதவர்களாகவே எழுப்பப்படுவார்கள்.

‘நிச்சயமாக நீங்கள் நிர்வாணமாகவும், செருப்பணியாமலும், கத்னா செய்யப்படாமலும் எழுப்பப்படுவீர்கள்’ என்று நபி (ஸல்) கூறிவிட்டு 

 *அல்குர்ஆன் 21:104*

 வசனத்தை ஓதிக்காட்டினார்கள். *(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)* 

சூர் ஊதப்படும் அந்நேரம் அவர்கள் மண்ணறையிலிருந்து அவர்களின் இறைவனிடம் விரைந்து வருவார்கள்.

 *(அல்குர்ஆன் 36:51)* 

பலி பீடங்களை நோக்கி  விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் அவர்கள் மண்ணறைகளில் இருந்து வேகமாக வெளியேறுவார்கள்

 *(அல்குர்ஆன் 70.43)* 

‘பூமி பிளந்து அவர்கள் வேகமாக வரும் நாள் அது தான். யாவரையும் ஒன்று சேர்க்கும் நாள்! இது நமக்கு மிக எளிதானதேயாகும்’.

 *(அல்குர்ஆன் 50:44)* 

எவ்வாறு பிறந்தார்களோ அவ்வாறே மறுமையில் எழுப்பப்படுவார்கள் என்றாலும் உலகில் வாழும் போது பார்வை, செவி, பேசும் திறனுடன் இருந்து தவறான வழியில் சென்றவர்கள் குருடர்களாகவும் ஊமையர்களாகவும் செவிடர்களாகவும் எழுப்பப்படுவார்கள்.

‘யார் வழிகெட்டு விட்டார்களோ அவர்களுக்கு அவனையன்றி உதவிசெய்வோர் எவரையும் நீர் காண மாட்டீர்! மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் முகம் குப்புற (நடப்பவர்களாக) கியாமத் நாளில் எழுப்புவோம்’.

 *(அல்குர்ஆன் 17:97)* 

‘எவன் என்னுடைய போதனையைப் புறக்கணிக்கின்றானோ அவனுக்கு நிச்சயமாக நெருக்கடியான வாழ்க்கையே இருக்கிறது. மேலும் நாம் அவனைக் கியாமத் நாளில் குருடனாகவே எழுப்புவோம். (அப்போது அவன்) என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்? என்று கூறுவான். (அதற்கு இறைவன்) அவ்வாறு தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்த போது அவற்றை நீ மறந்து விட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய் என்று கூறுவான். ஆகவே எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல் வரம்பு மீறி நடக்கின்றானோ அவனுக்கு இவ்வாறு தான் நாம் கூலி கொடுப்போம். (இதை விட) மறுமையின் வேதனை மிகவும் கடுமையானதும், நிலையானதுமாகும்’.

 *(அல்குர்ஆன் 20:124-127)* 

‘அந்த நாளில் சில முகங்கள் வெண்மையாகவும், மற்றும் சில முகங்கள் கறுப்பாகவும் இருக்கும். எவரது முகங்கள் கறுப்பாக உள்ளனவோ அவர்களிடமும் ‘நீங்கள் நம்பிக்கை கொண்டபின் நிராகரித்தீர்கள் அல்லவா? நீங்கள் நிராகரித்ததற்காக இந்த வேதனையைச் சுவையுங்கள் (என்று கூறப்படும்)”.

 *(அல்குர்ஆன் 3:100)* 

நம்பிக்கை கொள்ளாத மக்கள் எழுப்பப்பட்டதும் கால்களால் நடக்காமல் தலையால் நடந்து வருவார்கள். அவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள் என்பதை முன் கூட்டியே இது அறிவிப்புக் கொடுக்கும் வகையில் அமையும்.

 *இரண்டாவது ஸூர் ஊதப்பட்டதும்,*

 குற்றவாளிகள் எவ்வாறு எழுப்படுவார்கள் என்று தொடர் 3ல் ,பார்த்தோம், இனி நல்லவர்களை பற்றி பார்ப்போம்.

இந்த உலகம் அழிக்கப்பட்டு, புரட்டப்பட்டு, வேறு உலகம் தோற்றுவிக்கப்பட்டு, மனிதர்கள் உயிர்த்தெழ அல்லாஹ்வால் உத்தரவு இடப்பட்டதும். அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்தான் முதலாவதாக எழுப்பப்படுவார்கள்.

, “மனிதர்களை எழுப்புவதற்கான ஸூர் ஊதப்பட்டதும், நான் தான் முதலில் எழுவேன். ஆனால் எனக்கு முன்பே மூஸா நபி அர்ஷைப் பிடித்துக் கொண்டு நிற்பார்கள். இவ்வுலகில் இறைவனைப் பார்க்க ஆசைப்பட்டு அவர்கள் ஏற்கனவே மூர்ச்சையாகி விட்டதால் இப்போது மூர்ச்சையாகாமல் இருந்தாரா? அல்லது மூர்ச்சையாகி எனக்கு முன் எழுந்தாரா? என்று எனக்குத் தெரியாது” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

 *(புகாரி 2411, 2412, 3408, 6517, 6518, 7472)* 

நல்லடியார்கள் நல்லடக்கம் செய்யப்பட்டதும், அவர்களிடம் முன்கர், நன்கீர் ஆகிய இரு மலக்குகளின் கேள்விகள் கேட்கப்பட்டு முடிக்கப்பட்டதும், அந்த மலக்குகள், அந்த நல்லடியானிடம்…

“புது மாப்பிள்ளை உறங்குவது போல் (அயர்ந்து) உறங்கு! என்பார்கள். அல்லாஹ் அவனை மண்ணறையிலிருந்து எழுப்பும் வரை அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பார்கள்.” என்று அல்லாஹ்வின் திருத்தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.  *அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) நூல் : திர்மிதீ.* -இப்படிப்பட்ட நல்லடியார்கள், மீண்டும் உயிர்த்தெழும் போது, எந்தவிதமான திடுக்கமும் இன்றி எழுவார்கள்.

பல்லாயிரம் ஆண்டுகள் மண்ணறைகளில் புதைந்து கிடந்தவர்கள் உட்பட எவருமே தாம் மண்ணறைகளில் தங்கியிருந்த கால அளவை உணரமாட்டார்கள். ஏதோ சற்று நேரம் உறங்கி விட்டு எழுந்திருப்பதாகவே அனைவரும் உணர்வார்கள். இதைப் பின்வரும் வசனங்கள் விளக்குகின்றன.

‘இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில் பகலில் சிறிது நேரம் தவிர (மண்ணறைகளில்) இருக்க வில்லை என்பது போல் அவர்களுக்குத் தோன்றும்’. 

*(அல்குர்ஆன் 46:35)* 

‘நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில் காலையிலோ, மாலையிலோ சொற்ப நேரமே தங்கியிருந்ததாக அவர்களுக்குத் தோன்றும்’.

 *(அல்குர்ஆன் 79:46)* 

‘அன்றியும் அந்த நாள் வரும்போது சற்று நேரமே தங்கியிருந்ததாக குற்றவாளிகள் சத்தியம் செய்து கூறுவார்கள்’. 

*(அல்குர்ஆன் 30:55)* 

எங்களுக்கு ஏற்பட்ட துக்கமே (எங்கள் உறங்குமிடங்களிலிருந்து) எங்களை எழுப்பியவர்கள் யார்?’ *(அல்குர்ஆன் 36:52) இதை 10:45, 17:62 வசனங்களும் கூறுகின்றன.* கப்ருகளில் வேதனை செய்யப்பட்டதும், பல்லாண்டு மண்ணறைகளில் கழித்ததும் அவர்களுக்குத் தெரியாது. உறங்கிய போது ஏற்பட்ட கனவாகவே அதை அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். எங்கள் உறக்கத்திலிருந்து எழுப்பியவர் யார் என்று அவர்கள் கேட்பது இதனால்தான்.

இந்த உணர்வுடன் எழுவோர் குற்றவாளிகள் தாம், நல்லடியார்கள் உலகில் வாழும் போதே மறுமை நாளை நம்பியவர்கள் இந்த நிகழ்ச்சிகள் ஏற்படும் என்பதை குர்ஆனிலிருந்து படித்து அறிந்த மக்கள் இவ்வாறு எண்ண மாட்டார்கள். *திருக்குர்ஆன் 30:55* வசனத்தில் ‘குற்றவாளிகள்’ என்று கூறப்படுவதிலிருந்து இதை அறியலாம். *திருக்குர்ஆன் 30:56* வசனத்தில் நல்லடியார்கள் இவ்வாறு எண்ண மாட்டார்கள் என்பதைத் தெளிவாகவும் இறைவன் கூறுகிறான்.

ஆதம்(அலை) அவர்கள் தொடங்கி, கியாமத் நாள் வரை உள்ள அனைத்து மனித சமுதாயமும், உயிரூட்டப்பட்டு எழுப்பட்டதும், அவர்கள் ஒரு இடத்தில் ஒன்று திரட்டபடுவார்கள்.

 *ஒன்று திரட்டப்படும் இடம் எவ்வாறு இருக்கும்?* 

“சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று தூய வெண்மையான (சம) தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள்”

. *புஹாரி 6521, 6520* 

அந்நாளில் பூமி, வேறு பூமியாகவும், வானங்களும் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும்.

 *(அல்குர்ஆன் 14.48)* 

“உமது இறைவனிடம் அவர்கள் வரிசையாக நிறுத்தப்படுவார்கள்.

ஆரம்பத்தில் உங்களை நாம் படைத்தது போலவே நம்மிடம் வந்து விட்டீர்கள். எச்சரிக்கப்பட்ட இடத்தை உங்களுக்கு ஏற்படுத்த மாட்டோம் என்று நினைத்தீர்கள் (எனக் கூறப்படும்).

 *(அல் குர்ஆன் 17:13)* 

இங்கே நிறுத்தப்படுபவர்களை இறைவன் இரண்டு வகையாக பிரிக்கின்றான்.

முதலில் நல்லடியார்களை சற்று பார்த்துவிட்டு, பின்பு பொதுவான இறைவனின் சட்டத்தை பார்ப்போம்.

அந்நாளில், அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.

 *(அல்குர் ஆன் 30:14)* 

அந்நாளில் மக்கள் தமது செயல்களைக் காண்பதற்காகப் பல பிரிவினர்களாக ஆவார்கள்.

 *(அல்குர்ஆன் 99.6)* 

எவ்வித மறுப்புமின்றி அந்நாளில் அழைப்பாளரைப் பின் தொடர்வார்கள். அளவற்ற அருளாளனிடம், ஓசைகள் யாவும் ஒடுங்கி விடும். காலடிச் சப்தம் தவிர வேறெதனையும் நீர் செவியுற மாட்டீர்!

 *திருக்குர்ஆன் 20:108* 

“மறுமையில் அனைவரும் நிர்வாணமாக எழுப்படும் போது, முதன் முதலில் ஆடை அணிவிக்கப்படுபவர் இப்ராஹீம்(அலை)அவர்கள்”

 *(இப்னு அப்பாஸ்(ரலி)– புகாரி 3349* 

‘நானே மறுமை நாளில் இறைத் தூதர்களிலேயே அதிமானவர்களால் பின்பற்றப்படுபவன் ஆவேன்; நானே சொர்க்கத்தின் வாசலை முதன் முதலில் தட்டுபவன் ஆவேன்” என்று நபி  (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

 *(அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: முஸ்லிம் 331)* 

”மறுமை நாளில் ஆதமின் மக்கள் அனைவருக்கும் தலைவன் நானே!” என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

 *(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்  4575)*  

மஹ்ஷர் மைதானத்தில் மக்கள் தங்களிடையே தீர்ப்புச் செய்யப்படுவதையும் கேள்வி கணக்குக் கேட்கப்படுவதையும் எதிர்பார்த்தவர்களாக அங்கு நீண்ட நேரமிருப்பார்கள்.

”மறுமை நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு அருகில் கொண்டுவரப்படும். எந்த அளவுக்கென்றால், அவர்களுக்கும் அதற்கும் இடையில் ஒரு மைல் தொலைதூரமே இருக்கும். அப்போது மக்கள் தம் செயல்களுக்கேற்ப வியர்வையில் மூழ்குவார்கள். 

 *அறிவிப்பாளர்: மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள், நூல் : முஸ்லிம் 5497* 

“அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். 

*புஹாரி 660.* 

அந்நாளில் மக்கள் கடினமான தாகத்திலிருப்பார்கள். அன்றைய ஒரு நாள்(நம் கணக்குப் படி) ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும். எனினும் முஃமினுக்கு ஒரு தொழுகையை நிறைவேற்றும் அளவுக்கு அந்நேரம் கழிந்துவிடும்.

அந்நாளில் மக்கள் கடினமான தாகத்திலிருப்பார்கள். அன்றைய ஒரு நாள்(நம் கணக்குப் படி) ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும். எனினும் முஃமினுக்கு ஒரு தொழுகையை நிறைவேற்றும் அளவுக்கு அந்நேரம் கழிந்துவிடும்

 

கேள்வி கணக்குகள் தொடங்கும் நாள், தான் சம்பாத்திவற்றின் மீதுள்ள பரினாமங்கள், பதிவேடுகளால் வெளிப்படுத்தும் நாள்.

கேள்விகணக்குகள் அனைவருக்கும் உண்டு, சிலருக்கு லேசானதாகவே இருக்கும், சிலருக்கு துருவி துருவி கேட்கப்படும். யாருக்கு முழுவதுமாக கேள்விகள் கேட்கப்படுகின்றனவோ, அவர்கள் விளங்கி கொள்ளவேண்டும், சொர்க்கம் தடை செய்யப்பட்டுவிட்டது என்று,

வேறு பூமிமியாக மாற்றப்பட்ட(14:48) அந்நாளில்,

“பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். (பதிவுப்) புத்தகம் (முன்) வைக்கப்படும். நபிமார்கள் மற்றும் சாட்சிகள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பு வழங்கப்படும்.அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்:- 30 : 68,69)

அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம். அன்றியும் அவர்கள் செய்வதை பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும். அவர்களின் கால்களும் சாட்சி கூறும். (அல்குர்ஆன் 86:65)

அந்த நாள் வரும் போது அவனுடைய அனுமதியின்றி எவரும் பேச இயலாது. (அல்குர்ஆன் 11:105)

இது அவர்கள் பேச முடியாத நாள். ஏதேனும் சமாதானம் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 77:35)

அனைத்து சப்தங்களும் (அந்நாளில்) ஒடுங்கிவிடும். காலடிச் சப்தத்தைத் தவிர வேறு எதனையும் நீர் செவியுற மாட்டீர். (அல்குர்ஆன் 20:108)

குற்றவாளிகள் சகலமும் அடங்கி அஞ்சி பயத்துடன் நிற்பார்கள், இதோ பட்டோலைகள் வழங்கப்பட போகிறதே! அதில் என்ன விஷயங்கள் நம்மை குறித்து உள்ளனவோ என்ற கவலையில் இருப்பார்கள்.

ஆனால், நல்லடியார்களின் நிலை வேறுமாதிரி இருக்கும், சூரியன் மக்களின் மிக அருகே கொண்டு வரப்பட்டதால் அனைவரும் மிகுந்த தாகத்தில் இருக்கும் போது, நல்லடியார்கள் மட்டும் நபி(ஸல்) அவர்களின் தண்ணீர்த் தடாகத்திற்கு வந்து தண்ணீர் அருந்துவார்கள். தண்ணீர்த் தடாகமென்பது நமது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் கொடுத்த மிகப்பெரும் மரியாதையாகும். மறுமை நாளில் நபி(ஸல்) அவர்களின் சமுதாயத்தினர் இதில் நீர் அருந்துவார்கள்.

(அதன் நீளம்) என்னுடைய தடாகத்தின் நீளம் ஒரு மாதம் நடக்கும் தூரமாகும் அதன் அகலமும் அது போன்றதே அதன் தண்ணீர் பாலைவிட வெண்மையானது அதன் மனம் கஸ்தூரியை விட வாசமானது அதன் பாத்திரங்கள் வானத்தில் இருக்கும் நட்சத்திரத்தின் எண்ணிக்கையை போன்றது அதனை அருந்துபவர் ஒரு போதும் தாகித்தவராக ஆகமாட்டார். நூல் : புகாரி, முஸ்லிம். அப்துல்லாபின் உமர்(ரலி)

மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கியவர்கள் (பித்அத்) செய்தவர்கள் இதில் தண்ணீர் குடிப்பதை விட்டும் விரட்டப்படுவார்கள். நூல் : முஸ்லிம் . அபூஹுரைரா(ரலி)

 *மறுமை நாளில் இறைவன் எந்த மொழியில் கேள்வி கேட்பான்?*

மறுமை நாளில் இறைவன் எல்லோரிடமும் நேரடியாகப் பேசுவான். அவனுடைய பேச்சை எல்லோரும் அறிந்து கொள்வர்.

 7443 حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنِي الْأَعْمَشُ عَنْ خَيْثَمَةَ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ وَلَا حِجَابٌ يَحْجُبُهُ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் (மறுமை நாளில்) பேசாமலிருக்க மாட்டான். அப்போது அல்லாஹ்வுக்கும், அடியானுக்கும் இடையே எந்த மொழிபெயர்ப்பாளரும் இருக்க மாட்டார்; தடுக்கின்ற திரையும் இருக்காது.

அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி)

நூல் : புகாரி 7443

இறைவன் குறிப்பிட்ட மொழியில் தான் மறுமையில் பேசுவான் என எந்த விவரமும் குர்ஆன், ஹதீஸில் சொல்லப்படவில்லை.

எனவே மறுமையில் அவரவருக்குத் தெரிந்த மொழியில் இறைவன் பேசலாம். அல்லது ஏதாவது ஒரு மொழி பற்றிய ஞானத்தை இறைவன் எல்லோருக்கும் வழங்கி அந்த மொழியில் அவர்களிடம் பேசலாம்.

 *இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 2*

2 comments: