*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*✍🏼...நன்மைகளை வாரி*
⤵
*வழங்கும் தொழுகை*
*✍🏼...தொடர் [ 38 ]*
*☄ஜமாஅத்தாகத்*
*தொழுவதன்*
*சிறப்புகள் { 09 }*
*🏖சிறந்த வரிசை🏖*
*🏮🍂ஆண்களும், பெண்களும் சேர்ந்து தொழுகின்ற பள்ளிகளில் ஆண்கள் முதல் வரிசையில் நிற்பதன் மூலமும், பெண்கள் அவர்களுக்குரிய கடைசி வரிசையில் நிற்பதன் மூலமும் சிறந்த வரிசையில் நிற்கின்ற பாக்கியத்தைப் பெறுகின்றார்கள்.*
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، *عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خَيْرُ صُفُوفِ الرِّجَالِ أَوَّلُهَا وَشَرُّهَا آخِرُهَا وَخَيْرُ صُفُوفِ النِّسَاءِ آخِرُهَا وَشَرُّهَا أَوَّلُهَا "*
_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்ததது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும்.*_
*🎙அறிவிப்பவர்:*
*அபூஹுரைரா (ரலி)*
*📚நூல்: முஸ்லிம் (749)📚*
*🏮🍂இன்றைக்குப் பெரும்பாலான பள்ளிகளில் நபியவர்களின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக பெண்கள் பள்ளிக்கு வருவதற்குத் தடை விதிக்கின்றனர். இது மாபெரும் வழிகேடு என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*☄அறிவில் சிறந்தவர் இமாமிற்கு அருகில் நிற்பதும் அமைதியைப் பேணுவதும்☄*
*🏮🍂ஜமாஅத்தில் நாம் வரிசையில் அணிவகுத்து நிற்பதற்குரிய அழகிய வழிமுறைகளை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். நாம் அவற்றைப் பேணி நடப்பதன் மூலம் முழுமையான நன்மைகளை அடைந்து கொள்ள முடியும்.*
*☄இமாமிற்கு அருகில் மார்க்கச் சட்டங்களை அறிந்தவர்கள் நிற்க வேண்டும். அதற்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் அடுத்தடுத்த வரிசைகளில் நிற்க வேண்டும்.*
_*☄அது போன்று அணிவகுத்து நிற்கும் போது கூச்சலிடுவதோ, சப்தமிடுவதோ கூடாது.*_
*_حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، وَصَالِحُ بْنُ حَاتِمِ بْنِ وَرْدَانَ، قَالاَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنِي خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لِيَلِنِي مِنْكُمْ أُولُو الأَحْلاَمِ وَالنُّهَى ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ - ثَلاَثًا - وَإِيَّاكُمْ وَهَيْشَاتِ الأَسْوَاقِ "_*
*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் அறிவிற் சிறந்தவர் எனக்கு அருகில் (தொழுகையில் முதல் வரிசையில்) நிற்கட்டும். பிறகு அவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ளவர்கள் (அடுத்த வரிசையில்) நிற்கட்டும். (இதை மூன்று முறை கூறினார்கள்.) மேலும், (தொழுகைக்கு ஒன்றுகூடும்போது) கடைத்தெரு(வில் கூச்சலிடுவதைப் போன்று) கூச்சலிடுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன்.*
*🎙அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)*
*📕நூல்: முஸ்லிம் (740)📕*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
✍🏼...தொடரும்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment