பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, November 24, 2019

மறுமையின்⛱* ⤵ *⛱ சாட்சிகள் - 5

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

          *⛱ மறுமையின்⛱*
                             ⤵
                    *⛱ சாட்சிகள் ⛱*

           *✍🏻...தொடர் ➖0⃣5⃣*

*☄சாட்சியாகும்*
            *மலக்குகளும்*
                   *பதிவேடுகளும் [ 02 ]*

_*🍃மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கும் முன்னிலையில் இந்த என்னுடைய சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனை அல்லாஹ் வெளியே கொண்டு வருவான். தொன்னூற்று ஒன்பது ஏடுகள் அவனுக்கு விரித்து வழங்கப்படும். ஒவ்வொரு ஏடும் பார்வை எட்டும் தூரம் அளவிற்கு இருக்கும்.*_

_*அந்த மனிதனிடம் அல்லாஹ், “இதில் இருக்கும் ஏதேனும் ஒன்றை நீ மறுக்கிறாயா❓ (உன்னை கண்காணிப்பதற்கு நான் நியமித்த) எனது எழுத்தாளர்கள் உனக்கு (ஏதேனும் இதிலே தவறாக பதிவு செய்து) தீங்கிழைத்து இருக்கிறார்களா❓” என்று கேட்பான். “இல்லை, எனது இறைவா” என்று அந்த மனிதன் கூறுவான். மேலும் இறைவன், “உன்னிடம் ஏதேனும் கோரிக்கை இருக்கிறதா❓” என்று அந்த மனிதனிடம் கேட்பான். “இல்லை, என் இறைவா” என்று அந்த மனிதன் கூறுவான். உடனே இறைவன், “அவ்வாறில்லை, நம்மிடம் உமக்கு சிறந்த நன்மை இருக்கிறது; இன்று உனக்கு அநீதி இழைக்கப்படாது” என்று கூறுவான். (அந்த மனிதனுக்குரிய ஏடுகள்) அவற்றில் இருந்து ஒரு துண்டு சீட்டு வெளியே எடுக்கப்படும். அதில், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்று இருக்கும். “உன்னுடைய எடையை நிறுத்து” என்று இறைவன் கூறுவான். “இறைவா! இந்த ஏடுகளுடன் இருக்கும் இந்தச் சீட்டு என்ன❓” என்று அந்த மனிதன் அவனிடம் கேட்பான். அதற்கு, “நீ அநீதி இழைக்கப்படமாட்டாய்” என்று இறைவன் கூறுவான்.*_

_*(நன்மை தீமைகளை அளவிடும் தராசின்) ஒரு தட்டில் ஏடுகளும் மற்றொரு தட்டில் அந்தத் துண்டுச்சீட்டும் வைக்கப்படும். ஏடுகள் எடையில் தாழ்ந்துவிடும். துண்டுச் சீட்டு எடையில் கனத்துவிடும். அல்லாஹ்வுடைய பெயரைவிட எந்தவொன்றும் கனத்துவிடாது.*_

_இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
          *அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)*

*📚நூல்கள்:*- 
              *திர்மிதீ 2563,*
                     *இப்னுமாஜா 4290,*
                            *அஹ்மத் 6699*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment