பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, November 4, 2019

ஹதீஸ் மறுப்பு - 8

*TNTJ ஹதீஸ் மறுப்பு - ஓர் ஆய்வு* (Part -8)

[] ஸஹாபி 
[] தாபி
[] தாபிவுத் தாபியீன்

என்ற வரிசையில் அடுத்து வந்தவர்களை எப்படி அழைத்தனர்? 

இந்த கேள்விக்கான பதில்தான் "மத்ஹப்". அதைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம். 

எந்த ஒரு விஷயத்தையும் எதிர்ப்பதாக 
இருந்தாலோ அல்லது அதை ஆதரிப்பதாக இருந்தாலோ அதில் எப்போதுமே நேர்மையை கடைபிடிக்க வேண்டும். எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம் என்ற பெயரில் வரம்பு மீறுவது முஸ்லிம்களுக்கு உகந்ததல்ல. 

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை விரல் நுனியில் வைத்துக்கொண்டு நாம் மார்க்கம் பேசுவதாக நினைத்துக் கொள்கிறோம். இதன் மூலம், நமது முன்னோர்களின் செயல்பாடுகள்  அனைத்தும் நம்மால் கேலி செய்யப்படுகின்றன. அது போல நம்மால் கேலி செய்யப்படும் ஒன்றுதான் "மத்ஹப்". 

*ஃபிக்ஹு - சட்டம் எடுத்தல்* 

குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவைதான் மார்க்கம். இதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு குர்ஆன் புத்தக வடிவில் மாற்றப்பட்டுவிட்டது. ஆனால்,  நபி(ஸல்) அவர்களின் சுன்னா எனும்
"சொல்,செயல், அங்கீகாரம்" ஒருவர் மற்றொருவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதன் மூலமாகவே பரப்பப்பட்டது. இந்த சுன்னாதான் "ஹதீஸ்" எனப்பட்டது. 
இந்த ஹதீஸ் புத்தக வடிவில் மாற்றப்பட்டிருக்கவில்லை. 

இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களுக்கும்,
நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் சந்தித்திருக்காத பிரச்சினைகளுக்கும்
குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் மூலமாகவே ஒரு முடிவு செய்ய வேண்டும் என்ற நிலையில், குர்ஆன் ஹதீஸ்களைப் புரிந்திருந்ததன் அடிப்படையில் நபித்தோழர்கள் தீர்வுகளை அடைந்து கொண்டனர். இந்த தீர்வுதான் பின்னாளில் "ஃபிக்ஹு" எனப்பட்டது. அதாவது, குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து சட்டம் எடுக்கும் கலைக்குப் பெயர் "ஃபிக்ஹு". 

ஒரு நபித்தோழர், தனக்குத் தெரிந்த ஹதீஸ்களின் மூலம் ஒரு விஷயத்தைப் பற்றி முடிவு எடுத்திருந்து, அந்த முடிவிற்கு மாற்றமாக ஒரு ஹதீஸை மற்றொரு நபித்தோழர் கொண்டுவந்தால் தன்னுடைய முடிவை அந்த நபித்தோழர் மாற்றிக்கொள்வார். மார்க்க விஷயத்தில்
இதுதான் நபித்தோழர்களின் மேன்மையான நிலையாக இருந்தது.

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் இருக்கும் சட்டங்கள் மாறாதவை. அவ்விரண்டிலிருந்தும் புரிதலின் பிரகாரம் 
எடுக்கப்படும் சட்டங்கள் மாறக்கூடியவை. 
அதாவது, ஃபிக்ஹு என்பது மாறுதலுக்குட்பட்டது. 

*மத்ஹப்*

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் கூடுதலான விளக்கம் பெற்றிருந்த சிலர் மட்டுமே அவற்றிலிருந்து சட்டம் எடுக்கும் "ஃபிக்ஹ்" கலையை கையாண்டனர். 

அந்த ஃபிக்ஹ் அறிஞர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள்,முடிவுகள் மற்றும் தீர்ப்புகள் ஆகிய அனைத்தும் அந்த அறிஞர்களின் பெயராலேயே அழைக்கப்பட்டன. 

இந்த அறிஞரின் கருத்து, அந்த அறிஞரின் முடிவு என்று ஃபிக்ஹ் அறிஞர்களின் பெயராலேயே அழைக்கப்பட்டது. 

குர்ஆனின் வார்த்தைகளை நபிமொழியுடன்தான் புரிந்து கொள்ள முடியும் என்ற நிலையில், நபிமொழிகள் அனைத்தும் சிதறிக்கிடந்த நேரத்தில் இந்த ஃபிக்ஹு அறிஞர்களின் வழியில் போவதைத் தவிர்த்து வேறு வழி ஏதும் அந்த காலத்தின் மக்களுக்கு இல்லை. 

குர்ஆனுக்கு விளக்கம் என்று சுயகருத்துக்களை புகுத்திய காரிஜியாக்கள், முஃதஸிலாக்கள் போன்ற வழிகெட்ட கூட்டங்களிடமிருந்து தங்களைக் காத்துத்கொள்வதற்காக இந்த அறிஞர்கள் போன பாதையிலேயே தங்களுடைய புரிதலையும் அமைத்துக் கொண்டனர் அந்த மக்கள். அதாவது,  அந்த அறிஞர்களின் போக்கிலேயே மார்க்கத்தை விளங்கிக்கொண்டனர். 

அந்த அறிஞர்கள் "இமாம்" என அழைக்கப்படுகின்றனர். 
அந்த அறிஞர்கள் போன பாதை அதாவது அறிஞர்களின் போக்குதான் "மத்ஹப்" என அழைக்கப்படுகிறது. 

மத்ஹப் என்ற அரபு வார்த்தைக்கு போகுதல், போக்கு என்ற அர்த்தமும் இருக்கிறது. இதே வார்த்தை "கழிப்பிடம்" என்ற அர்த்தத்திலும் கையாளப்படுகிறது. 

மத்ஹப் என்ற வார்த்தைக்கு இருக்கும் நல்ல அர்த்தங்களையெல்லாம் விட்டுவிட்டு "கக்கூஸ்" என்ற வார்த்தையையே TNTJ பிடித்துக் கொண்டிருக்கிறது. அந்த அமைப்பிற்கு எது பிடித்திருக்கிறதோ அதையே அவர்கள் பிடித்துக்கொள்ளட்டும். நாம் வரலாற்றை பார்ப்போம். 

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான். 

Part -9

https://m.facebook.com/story.php?story_fbid=758091037947367&id=100012394330588

Part -7 

https://m.facebook.com/story.php?story_fbid=756687348087736&id=100012394330588

No comments:

Post a Comment