*TNTJ ஹதீஸ் மறுப்பு - ஓர் ஆய்வு* (Part -13)
TNTJ வின் "அறிவுக் கொழுந்து" கேள்விகளுக்கு பதிலளிப்பதில் தங்களை வாலண்டியராக இணைத்துக்கொள்பவர்கள்தான் தமிழ்பேசும் ஸலபுகள்.
"சூனியத்திற்கு ஆற்றல் இருக்கிறதா" என்று TNTJ எழுப்பிய கேள்விக்கு "அல்லாஹ் நாடினால் சூனியம் பலிக்கும்" என்று அதிரடியாக பதிலளித்தவர்கள்தான் இந்த "தமிழ் சலபுகள்".
"குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படுமா?" என்று TNTJ கேள்வியெழுப்பியவுடன் முதல் ஆளாக கையுயர்த்தி எழுந்தவர்கள் இவர்கள்தான்.
"ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது" என்று அசத்தலான பதிலளித்தனர் ஸலபுகள்.
ஹதீஸ்களை மறுக்கிறார்களே என்ற வேதனையில் அவற்றை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையில் "ஹதீஸ் மாநாடு" போட்டும் இந்த கருத்தை வலியுறுத்தினார்கள் ஸலபுகள்.
அதாவது, ஸஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது என்று அறிவித்தனர் ஸலபுகள்.
ழயீஃபான ஹதீஸ்கள் மட்டும்தான் குர்ஆனுக்கு முரண்படும், ஸஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது என்பதுதான் இவர்கள் கூறுவதின் விளக்கம்.
ஒருவர் ஸஹீஹ் மற்றும் ழயீஃப் பற்றி பேசுகிறாரென்றால் அவர் ஹதீஸ் கலை விதிகளுக்கு உடன்படுகிறார் என்று அர்த்தம். ஹதீஸ் கலை விதிகளுக்கு உடன்படும் ஒருவர்,
** ழயீஃபான ஹதீஸ்களை மறு ஆய்வின் மூலம் ஸஹீஹானதாக மாற்ற முடியும் என்பதற்கும் உடன்படுகிறார் என்று அர்த்தம்.
** ஸஹீஹான ஹதீஸ்களை மறு ஆய்வின் மூலம் ழயீஃபானதாக மாற்ற முடியும் என்பதற்கும் உடன்படுகிறார் என்று அர்த்தம்.
"ஸஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது" என்ற ஸலபுகளின் விளக்கத்தின்படி...
** குர்ஆனுக்கு முரண்பாடாக இருந்த ழயீஃபான ஹதீஸ்கள் மறு ஆய்வில் ஸஹீஹாக மாற்றப்பட்டால் அது உடனே குர்ஆனுக்கு முரண்பாடில்லாமல் மாறிவிடுமா?
** குர்ஆனுக்கு முரண்படாமல் இருந்த ஸஹீஹான ஹதீஸ்கள் மறு ஆய்வில் ழயீஃபாக மாற்றப்பட்டால் அது உடனே குர்ஆனுக்கு முரண்பாடாக மாறிவிடுமா?
முட்டாளின் கேள்விக்கு மூடனின் பதில் எப்படி இருக்கும் என்பதற்கு, TNTJ வின் முட்டாள்தனமான கேள்விகளும் அதற்கு ஸலபுகளின் மூடத்தனமான பதில்களுமே சாட்சி.
ரைட். மீண்டும் நம்ம விஷயத்துக்கு போவோம்...
நமது ஊரில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்கிறார் என்று வைத்துக்கொள்வோம், அவர் மார்க்க விஷயங்களை எப்படி அறிந்து கொள்வார்?
** TNTJ மொழிபெயர்த்த குர்ஆனின் 14 பதிப்புகளையும் படித்து மார்க்க கடைமைகளை அறிந்து கொள்வார்.
** ஸஹீஹ் புஹாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் புத்தகங்களின் மொழிபெயர்ப்பை படித்து மார்க்க கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதை அறிந்து கொள்வார்.
இது சரியா?
அப்படி நினைத்தால் அது தவறு.
உலகம் முழுவதும் மக்களிடம் இஸ்லாத்தை பரப்பிய/ பரப்பும் முஸ்லிம்களின் நடைமுறைகளால் ஈர்க்கப்பட்டே இஸ்லாத்தை அறிய பிற மக்கள் ஆர்வம் செலுத்துகின்றனர்.
முஸ்லிம்களிடம் தீண்டாமை, ஏற்றத்தாழ்வு போன்ற சமுதாய தீமைகள் இல்லாததைக் கண்டு தங்களையும் இஸ்லாத்தில் இணைத்துக்கொள்கின்றனர்.
சுயமரியாதை, சகோதரத்துவம், கடவுள் முன் அனைவரும் சமம் என்ற தத்துவம் போன்ற காரணங்களால் ஈர்க்கப்படுவோரும் உள்ளனர்.
மொத்தத்தில், முஸ்லிம்களின் நடைமுறைதான் மக்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. இஸ்லாத்தின்பால் மக்கள் ஈர்க்கப்படுவது பலருக்கு வெறுப்பையும் தருகிறது.
இதற்குப் பிறகே குர்ஆன் அவர்களிடம் சேர்கிறது.
இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டவர்கள் குர்ஆனை உண்மைப்படுத்துவதற்காக ஓதுகிறார்கள். இஸ்லாத்தின் மீது வெறுப்பு கொண்டவர்கள் அதை பொய்ப்படுத்துவதற்காக படிக்கிறார்கள் (அல்லாஹ்வின் நாட்டப்படி அவர்களுள் பலர் இஸ்லாத்தை ஏற்கவும் செய்கிறார்கள்)
மக்களை முதலில் சென்றடைவது முஸ்லிம்களின் நடைமுறைதான். முஸ்லிம்கள் இந்த நடைமுறையை எவரிடமிருந்து பெற்றனர்?
நபி(ஸல்) அவர்களின் நடைமுறையைத்தான் முஸ்லிம்கள் பின்பற்றுகின்றனர். அந்த நடைமுறைதான் பிற மக்களை இஸ்லாத்தின்பால் ஈர்க்கிறது.
நபி(ஸல்) அவர்களின் நடைமுறையை நாம் எப்படி அறிந்து கொண்டோம்?
குர்ஆனை ஓதியும், ஹதீஸ் புத்தகங்களை வாசித்தும்தான் அறிந்து கொண்டோமா?
குர்ஆனின் மொழிபெயர்ப்பே சமீப காலத்தில்தான் கிடைத்தது. ஹதீஸ் மொழிபெயர்ப்புகள் அதற்குப் பிறகே வரத்தொடங்கின. இதில், நபிகளாரின் நடைமுறையை இவற்றைப் படித்து நாம் அறிந்து கொள்வது என்பது வாய்ப்பே இல்லை.
நமது முன்னோர்கள்தான் நபி(ஸல்) அவர்களின் நடைமுறையை நமக்கு கடத்தித் தந்திருக்கின்றனர்.
ஹதீஸ் புத்தகங்களை வாசித்திராத முஸ்லிம்களும் கூட நபி(ஸல்) அவர்களின் நடைமுறையை தொடர்கின்றனர்.
[] ஐவேளைத் தொழுகை
[] ரமலான் மாதத்தில் நோன்பு
[] செல்வத்தில் ஜக்காத்
[] வசதி பெற்றால் ஹஜ்
என்று நபி(ஸல்) அவர்களின் நடைமுறையை முஸ்லிம்கள் முன்னோர்கள் வழியாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
நபி(ஸல்) அவர்களின் நடைமுறைதான் "சுன்னா" எனப்படுகிறது.
மார்க்கத்தின் மூலஆதாரம் குர்ஆன் மற்றும் சுன்னா.
அதாவது, குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் நடைமுறை ஆகிய இரண்டும்தான் மார்க்கம்.
குர்ஆன் என்பது அல்லாஹ்விடமிருந்து வந்த வஹி.
சுன்னா என்பது என்ன?
குர்ஆன் என்பது அல்லாஹ்விடமிருந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள் மூலமாக அருளப்பட்ட "வஹி".
குர்ஆனின் வார்த்தைகளை நடைமுறைப்படுத்துவதை மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் விளக்கியதும், செய்து காட்டியதும், பிறரின் செயல்களை அங்கீகரித்ததும் மற்றும் தடுத்ததும் "நபிகளாரின் சுன்னா" எனப்படுகிறது.
இதுதான், நபிகளாரின் சொல், செயல் மற்றும் அங்கீகாரம் எனப்படுகிறது. நபி(ஸல்) அவர்கள் இவற்றை சுயமாகச் செய்யவில்லை. இதையும் அல்லாஹ்விடமிருந்து கிடைத்த வஹியின் மூலமாக நபி(ஸல்) அவர்கள் நிறைவேற்றினார்கள். இந்த சுன்னா என்பதும் "வஹி"தான்.
நபி(ஸல்) அவர்கள் குர்ஆனாகவே வாழ்ந்தார்கள் என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியிருக்கிறார்கள். குர்ஆனுக்கு விளக்கம் கூறுவதாகவே நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை இருந்தது. நபிகளாரின் சுன்னா என்பது குர்ஆனின் கூடுதல் விளக்கம்.
"குர்ஆன் எனும் வஹி" யின் கூடுதல் விளக்கம்தான் "சுன்னா எனும் வஹி".
அப்படியென்றால், ஹதீஸ்னா என்ன?
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
பிறை மீரான்.
Part - 14
https://www.facebook.com/100012394330588/posts/770603853362752/
No comments:
Post a Comment