பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, November 11, 2019

நன்மைகளை வாரி - 26

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*✍🏼...நன்மைகளை வாரி*
                          ⤵
         *வழங்கும் தொழுகை*

         *✍🏼...தொடர் [ 26 ]*

*☄தொழுகைக்காக*
            *நடந்து செல்வதன்*
                          *சிறப்புகள் { 05 }*

*☄காலடிகள் பதிவு செய்யப்படும்*

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ  الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، قَالَ  سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، قَالَ حَدَّثَنِي الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي  نَضْرَةَ، *عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ خَلَتِ الْبِقَاعُ  حَوْلَ الْمَسْجِدِ فَأَرَادَ بَنُو سَلِمَةَ أَنْ يَنْتَقِلُوا إِلَى  قُرْبِ الْمَسْجِدِ فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم  فَقَالَ لَهُمْ ‏"‏ إِنَّهُ بَلَغَنِي أَنَّكُمْ تُرِيدُونَ أَنْ  تَنْتَقِلُوا قُرْبَ الْمَسْجِدِ ‏"‏ ‏.‏ قَالُوا نَعَمْ يَا رَسُولَ  اللَّهِ قَدْ أَرَدْنَا ذَلِكَ ‏.‏ فَقَالَ ‏"‏ يَا بَنِي سَلِمَةَ  دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ ‏"‏*

_*🍃ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைச் சுற்றி காலி மனைகள் இருந்தன. பனூசலிமா குலத்தார் பள்ளிவாசலுக்கு அருகிலேயே குடியேற விரும்பினர். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், "நீங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அருகில் குடியேறப்போவதாக நான் அறிந்தேனே (அது உண்மையா)?'' என்று கேட்டார்கள். அதற்கு பனூசலிமா குலத்தார் "ஆம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அவ்வாறு விரும்பினோம்'' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பனூசலிமா குலத்தாரே! உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும்; உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும்'' என்று (இரு முறை) கூறினார்கள்.*_

*📚நூல்: முஸ்லிம் (1182)📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄தொழுகைக்காக நடந்து வருவதால் கிடைக்கும் பாக்கியங்களின் தொகுப்பு☄*

*☄தொழுகைக்காக வெகுதொலைவிலிருந்து நடந்து வருபவர் தான் அதிக நன்மைகளைப் பெறுபவராவார்.*

*☄காலையிலோ, அல்லது மாலையிலோ பள்ளிவாசலுக்குச் சென்றால் ஒவ்வொரு தடவை செல்லும் போதும் சொர்க்கத்தில் ஒரு மாளிகையை அல்லாஹ் தயார் செய்கின்றான்.*

*☄வீட்டில் உளூச் செய்து பள்ளிவாசலை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு எட்டிற்கும் பத்து நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான்.*

*☄தொழுகைக்காக எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் தர்மமாகும்.*

*☄வீட்டில் உளூச் செய்து தொழுகைக்காக நடந்து சென்றால் ஒரு எட்டு பாவங்களை அழிக்கிறது. மற்றொரு எட்டு அந்தஸ்துகளை உயர்த்துகிறது.*

*☄பள்ளிவாசலை நோக்கி அதிகமான காலடிகள் எடுத்து வைத்துச் செல்வது நமது பாவங்களை அழித்து நன்மைகளை உயர்த்துகிறது.*

*☄நம்முடைய கால் சுவடுகள் பதிவு செய்யப்படுவதுடன் ஒவ்வொரு எட்டிற்கும் ஒரு அந்தஸ்து கிடைக்கிறது.*

*🏮🍂தொழுகை அதனை முறையாகப் பேணுபவர்களுக்கு இன்னும் பல்வேறு பாக்கியங்களை வாரி வழங்குகிறது. அவற்றை வரும் தொடர்களில் விரிவாகக் காண்போம்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment